பாலக்காடு மாவட்டம்
பாலக்காடு இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். கேரளாவின் திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களும் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது ஒரு கிராம மாவட்டமாகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாலக்காட்டுக் கணவாயே கேரளாவின் நுழைவாயிலாக உள்ளது. இம்மாவட்டத்தின் மொத்தப்பரப்பளவு 4480 ச.கி.மீ.கள் ஆகும். இது மாநிலத்தின் மொத்தப்பரப்பளவில் 11.5 சதவீதம் ஆகும். இங்கு மலையாளம் பரவாலாக பேசப்பட்டாலும் தமிழ் பேசுவோரும் மிகுதியாக உள்ளனர் பாலக்காடு மாவட்டத்தின் அதிகார பூர்வ மொழிகள் தமிழ் மற்றும் மலையாளம் ஆகும்
பாலக்காடு | |
---|---|
மாவட்டம் | |
கடிகார திசையில்: பாலக்காட்டுக் கோட்டை, ஒற்றப்பாலம் ஊர், ஆலத்தூர் ஊர் , மலம்புழா அணை நீர் கால்வாய், பட்டாம்பி ஊர், பாலக்காடு நகரம் | |
![]() பாலக்காடு | |
நாடு | ![]() |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | கேரளம் |
பகுதி | மத்திய கேரளா |
தலைமை இடம் | பாலக்காடு |
அரசு | |
• மாவட்ட ஆட்சியர் | திருமதி ம்ருண்மாய் ஜோஷி , இ.ஆ.ப |
• மாவட்ட காவல்துறை தலைவர் | ஸ்ரீ. ஆர்.விஸ்வநாத் , இ.கா.ப |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 4,482 km2 (1,731 sq mi) |
மக்கள்தொகை [1] | |
• மொத்தம் | 28,09,934 |
நேர வலயம் | இ.சீ.நே (ஒசநே+5:30) |
இணையதளம் | palakkad |
பெயர்க்காரணம்தொகு
முற்காலத்தில் பாலக்காடு ஆனது பாலக்காட்டுச்சேரி எனவும் வழங்கப்பட்டது. இது வறண்ட நிலம் எனப்பொருள் தரும் பாலநிலம் (பாலை நிலம்) என்பதில் இருந்து வந்திருக்கலாம் என சொற்பிறப்பியல் ஆயவாளர்கள் கருதுகின்றனர். பாலமரங்கள்(Alstonia) நிரம்பிய காடு என்பதால் பாலக்காடு எனப்பட்டது என்னும் கருத்தும் உண்டு.
வரலாறுதொகு
பாலக்காடு ஆங்கிலேய ஆட்சியின் போது சென்னை மாகாணத்தின் மலபார் மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. விடுதலைக்குப் பின்னர் இது சென்னை மாநிலத்தின் கீழ் வந்தது. 1956-இல் கேரள மாநிலம் உருவாக்கப்பட்ட போது பாலக்காடு தனி மாவட்டமாக மாற்றப்பட்டது.
ஆட்சிப் பிரிவுகள்தொகு
இந்த மாவட்டத்தை ஆலத்தூர், சிற்றூர், மண்ணார்க்காடு, ஒற்றப்பாலம், பாலக்காடு, பட்டாம்பி, அட்டப்பாடி ஆகிய வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[2] பாலக்காடு, ஷொர்ணூர், சிற்றூர்-தாத்தமங்கலம், ஒற்றப்பாலம் ஆகியவை நகராட்சிகளாகும். இது கேரள சட்டமன்றத்திற்கான் 12 தொகுகளைக் கொண்டுள்ளது.[2]
# | சட்டப் பேரவையின் தொகுதிகள் | ( SC / ST /எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது | # | மக்களவை தொகுதிகள்[2] | ( SC / ST /எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது |
---|---|---|---|---|---|
49 | திருத்தாலை சட்டமன்றத் தொகுதி | இல்லை | 7 | பொன்னானி மக்களவைத் தொகுதி | இல்லை |
50 | பட்டாம்பி சட்டமன்றத் தொகுதி | 8 | பாலக்காடு மக்களவைத் தொகுதி | ||
51 | ஷொர்ணூர் சட்டமன்றத் தொகுதி | ||||
52 | ஒற்றப்பாலம் சட்டமன்றத் தொகுதி | ||||
53 | கோங்காடு சட்டமன்றத் தொகுதி | SC | |||
54 | மண்ணார்க்காடு சட்டமன்றத் தொகுதி | இல்லை | |||
55 | மலம்புழா சட்டமன்றத் தொகுதி | ||||
56 | பாலக்காடு சட்டமன்றத் தொகுதி | ||||
57 | தரூர் சட்டமன்றத் தொகுதி | SC | 9 | ஆலத்தூர் மக்களவைத் தொகுதி | SC |
58 | சிற்றூர் சட்டமன்றத் தொகுதி | இல்லை | |||
59 | நென்மாறை சட்டமன்றத் தொகுதி | ||||
60 | ஆலத்தூர் சட்டமன்றத் தொகுதி |
வழிபாட்டுத் தலங்கள்தொகு
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ 1.0 1.1 https://palakkad.nic.in/demography/
- ↑ 2.0 2.1 2.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-11-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2020-07-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-07-23 அன்று பார்க்கப்பட்டது.