பாலக்காடு தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே பாலக்காடு மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இவ்வூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாலக்காட்டுக் கணவாயின் அருகே அமைந்துள்ளது. இங்கு பேசப்படும் மொழி மலையாளம். எனினும் தமிழும் பரவலாக மக்களால் புரிந்து கொள்ளப்படுகிறது.

பாலக்காடு
நகரம்
பாலக்காடு நகரம்
பாலக்காடு நகரம்
பாலக்காடு is located in கேரளம்
பாலக்காடு
பாலக்காடு
பாலக்காடு is located in இந்தியா
பாலக்காடு
பாலக்காடு
ஆள்கூறுகள்: 10°46′30″N 76°39′04″E / 10.775°N 76.651°E / 10.775; 76.651
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பாலக்காடு நகராட்சி
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்678 XXX
தொலைபேசி+91-(0)491
இந்திய அனுமதி இலக்கத்தகடுகள்KL-09

இந்நகரம் தமிழக கேரள எல்லையில் கோயம்புத்தூரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு இந்திய தென்னக ரயில்வேயின் கோட்டம் ஒன்று அமைந்துள்ளது. பாரதப்புழா ஆறு இந்நகரின் வழியே செல்லுகிறது. சேலத்தை கன்னியாகுமரியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 47 இதன் வழியே செல்லுகிறது.

பாலைக் கௌதமனார் தொகு

சங்ககாலப் பார்ப்பனப் புலவர் பாலைக் கௌதமனார் இவ்வூரில் வாழ்ந்தவர். சேரமன்னன் பல்யானைச் செல்கெழு குட்டுவனைச் சிறப்பித்துப் பாடிய 10 பாடல்கள் பதிற்றுப்பத்து என்னும் நூலில் மூன்றாம் பத்தாக இடம்பெற்றுள்ளது. இவர் விருப்பப்படி இந்தக் குட்டுவன் செய்த வேள்வியில் தன் மனைவியுடன் சுவர்க்கம் புகுந்தார் என்று அப் பதிற்றுப்பத்தின் பதிகம் குறிப்பிடுகிறது.

மக்கள் வகைப்பாடு தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 130,736 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பாலக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாலக்காடு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

சுற்றுலா இடங்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999. பார்த்த நாள்: அக்டோபர் 20, 2006. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலக்காடு&oldid=3691410" இருந்து மீள்விக்கப்பட்டது