கட்டற்ற ஆக்கம்
கட்டற்ற ஆக்கம் (free content) என்பது மக்களின் பயன்பாட்டுக்கு எவ்விதமான சட்டரீதியான கட்டுப்பாடுகளும் அற்ற கலைப்படைப்பு அல்லது ஆக்கத்தினைக் குறிக்கும்.[1] கட்டற்ற உள்ளடக்கமானது பின்வரும் சந்தர்ப்பங்களில், எவ்விதமான கட்டுப்பாடுமற்ற செயற்பாட்டுக்கு வழிவகுக்கும்.
- அவ்வுள்ளடக்கத்தைப் பாவிப்பதற்கும், அதிலிருந்து நன்மையடையவும்,
- அவ்வுள்ளடக்கத்தைக் கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொண்டதைப் பிரயோகிக்கவும்,
- அவ்வுள்ளடக்கத்தின் பிரதியைப் பெற்றுக்கொள்ளவும், அதனை விநியோகிக்கவும்,
- அவ்வுள்ளடக்கத்தை மாற்றவும், மேம்படுத்தவும், இதன்மூலம் உருவாக்கப்பட்ட புதிய உள்ளடக்கத்தை விநியோகிக்கவும், அனுமதி வழங்குகின்றது.[2][3]
கட்டற்ற ஆக்கமும், திறந்த ஆக்கமும்
தொகுவெவ்வேறு வரையறைகள் பயன்படுத்தப்பட்டாலும், கட்டற்ற ஆக்கமும், திறந்த ஆக்கமும் சட்டரீதியில் ஒத்தவையாகும். எனினும், கட்டற்ற மென்பொருள் மற்றும் திறந்த மூலம் ஆகிய சொற்றொடர்கள் இவ்விரண்டுக்குமிடையிலான கருத்தியல் ரீதியான வேற்றுமையை விவரிக்கின்றன.[4]
திறந்த உள்ளடக்கம் என்பது பொதுவெளியில் உள்ள அனைத்துப் படைப்புக்களையும் மேலும் மேற்குறித்த சலுகைகளை உடைய காப்புரிமை பெற்ற படைப்புக்களையும் அடக்குகின்றது.பெரும்பாலான நாடுகளில் காப்புரிமைச் சட்டங்கள் காப்புரிமையாளருக்கு தமது படைப்புக்கள் மீது வணிக ரீதியிலான கட்டுப்பாட்டை மேற்கொள்ள அனுமதி வழங்குவதால் இவ்வாறான காப்புரிமை உள்ளடக்கங்கள் கட்டாயமாக வெளிப்படையாகவே கட்டற்ற உள்ளடக்கமாக அறிவிக்கப்பட வேண்டும். இது வழமையாக உரிம ஆவணத்தின் குறித்த கூற்றுக்களை ஆதாரமாகக் குறிப்பிடுவதன் மூலம் மேற்கொள்ளப்படும்.
குறித்த படைப்பு அதன் காப்புரிமை காலாவதியான காரணத்தால் கட்டற்ற உள்ளடக்கமாகக் கருதப்பட்டு பொதுவெளியில் காணப்பட்டாலும்கூட, காப்புரிமைச் சட்டங்கள் மாறுவதன் காரணத்தால் மீண்டும் காப்புரிமையுடையதாக மாறலாம்.[5]
விக்கிப்பீடியாவும் கட்டற்ற உள்ளடக்கமும்
தொகுவிக்கிப்பீடியா என்பது ஒரு புகழ்பெற்ற இணையத்தில் காணப்படும் பயனர்களால் உருவாக்கப்பட்ட கட்டற்ற உள்ளடக்கத் தொகுப்பாகும்.
மிகவும் கட்டுப்பாடான வரையறையின் படி, ஒரு ஆக்கம் கட்டற்ற உள்ளடக்கமாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அவ்வாக்கம் எவ்விடத்திலும் காப்புரிமைக் கட்டுப்பாடுகள் அற்றதாகக் காணப்பட வேண்டும். எனினும், விக்கிப்பீடியாவின் உள்ளடக்கக் கொள்கைகளில் இவ்வாறான இறுக்கமான கட்டுப்பாடுகள் இல்லை.[சான்று தேவை]
விக்கிப்பீடியாவின் மிகப்பெரும்பாலான உள்ளடக்கங்கள் கட்டற்ற உள்ளடக்கங்களாகக் காணப்பட்டாலும், சில காப்புரிமை பெற்ற படைப்புக்கள் நியாயமான பயன்பாட்டு அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சில சமயங்களில், குறித்த காப்புரிமை பெற்ற படைப்புக்குரிய நாட்டின் காப்புரிமைச் சட்டங்கள் ஏனைய பெரும்பாலான நாட்டுச் சட்டங்களிலிருந்து பெரிதும் வேறுபட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அப்படைப்புக்களும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.[சான்று தேவை]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://freecontentdefinition.org/Definition
- ↑ "Definition of Free Cultural Works". பார்க்கப்பட்ட நாள் 8 December 2011.
- ↑ Stallman, Richard (November 13, 2008). "Free Software and Free Manuals". Free Software Foundation. பார்க்கப்பட்ட நாள் March 22, 2009.
- ↑ Stallman, Richard. "Why Open Source misses the point of Free Software". Free Software Foundation.
- ↑ Anderson, Nate (July 16, 2008). "EU caves to aging rockers, wants 45-year copyright extension". Ars Technica. பார்க்கப்பட்ட நாள் August 8, 2008.
மேலதிக வாசிப்புக்கு
தொகு- D. Atkins, J. S. Brown, A. L. Hammond (February 2007). A Review of the Open Educational Resources (OER) Movement: Achievements, Challenges, and New Opportunities (PDF). Report to The William and Flora Hewlett Foundation.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - OECD – Organisation for Economic Co-operation and Development: Giving Knowledge for free – The Emergence of Open Educational Resources பரணிடப்பட்டது 2017-07-07 at the வந்தவழி இயந்திரம். 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-64-03174-X.
வெளியிணைப்புக்கள்
தொகு- Definition of Free Cultural Works – A definition of "free content" or "free cultural works" similar to the free software definition
- "Episodes of collective invention பரணிடப்பட்டது 2019-06-25 at the வந்தவழி இயந்திரம்" (PDF) (Peter B. Meyer; August 4, 2003) – article on several U.S.-oriented historical examples of free content in technology
- Open Knowledge Definition பரணிடப்பட்டது 2011-11-01 at the வந்தவழி இயந்திரம் – project under the aegis of the Open Knowledge Foundation which provides a definition of "open" suitable for content and data
- What is free content? on WikiEducator