கண்ணூர் மாவட்டம்
கண்ணூர் மாவட்டம் (மலையாளம்: കണ്ണൂർ ജില്ല) இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் 14 மாவட்டங்களுள் இதுவும் ஒன்றாகும். இதன் மாவட்டத் தலைநகரம் கண்ணனூர். இந்த நகரத்தின் பெயரைத் தழுவியே மாவட்டத்துக்குப் பெயரிடப்பட்டது. இம்மாவட்டத்துக்கு வடக்கில் காசர்கோடு மாவட்டமும், தெற்கில் கோழிக்கோடு மாவட்டமும் உள்ளன. கிழக்கில் மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளது இது கர்நாடக மாநிலத்தில் எல்லையாகவும் உள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் மேற்கு எல்லை அரபிக் கடலால் வரையறுக்கப்படுகிறது.
கண்ணூர் மாவட்டம்
കണ്ണൂർ ജില്ല (Malayalam) | |
---|---|
மேலிருந்து கடிகார திசையில்: வயலப்ரா ஏரி, தலச்சேரி சமையல், கண்ணூர்க் கோட்டை, மாப்பிளா விரிகுடா, முழப்பிலங்காடு கடற்கரை, கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | |
அடைபெயர்(கள்): கேரளாவின் கிரீடம் | |
![]() கேரளத்தில் இருப்பிடம் | |
ஆள்கூறுகள்: 11°52′08″N 75°21′20″E / 11.8689°N 75.35546°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
நிறுவப்பட்டது | 1 சனவரி 1957 |
தலைமையிடம் | கண்ணூர் |
வட்டம் | |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | எஸ் சந்திரசேகர், இ.ஆ.ப. |
• மாவட்ட காவல்துறை தலைவர், கண்ணூர் கிராமப்புறம் | டாக்டர் நவ்நீத் சர்மா, இ.கா.ப. |
• காவல்துறை ஆணையர், கண்ணூர் நகரம் | இளங்கோ. ஆர், இ.கா.ப. |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,966 km2 (1,145 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 5-ஆவது |
மக்கள்தொகை (2018)[2] | |
• மொத்தம் | 26,15,266 |
• அடர்த்தி | 882/km2 (2,280/sq mi) |
இனம் | கண்ணூர்க்காரர் |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KL-KNR, IN-KL |
வாகனப் பதிவு |
|
பாலின விகிதம் | 1090 ♂/♀ |
எழுத்தறிவு | 95.10% |
ம.மே.சு. (2005) | ![]() |
இணையதளம் | kannur |
கேரளாவில் அதிக நகராக்கம் பெற்ற மாவட்டம் கண்ணனூர் ஆகும். இங்கே 50%-இற்கும் அதிகமான மக்கள் நகரப்பகுதிகளில் வாழ்கின்றனர். இதன் நகர்ப்புற மக்கள்தொகை 16,40,986, இது எர்ணாகுளத்துக்கு அடுத்தபடியாக உள்ள மிகக்கூடிய தொகையாகும்.
இம்மாவட்டத்தின் எழிமலையில் ஆசியாவின் மிகப்பெரிய இந்தியக் கடற்படை கல்விக்கழகம் உள்ளது.[4]
ஆட்சிப் பிரிவுகள்
தொகு- சட்டமன்றத் தொகுதிகள்:[5]
- பய்யன்னூர் சட்டமன்றத் தொகுதி
- கல்லியாசேரி சட்டமன்றத் தொகுதி
- தளிப்பறம்பா சட்டமன்றத் தொகுதி
- இரிக்கூர் சட்டமன்றத் தொகுதி
- அழீக்கோடு சட்டமன்றத் தொகுதி
- தர்மடம் சட்டமன்றத் தொகுதி
- தலசேரி சட்டமன்றத் தொகுதி
- கூத்துப்பறம்பா சட்டமன்றத் தொகுதி
- மட்டன்னூர் சட்டமன்றத் தொகுதி
- பேராவூர் சட்டமன்றத் தொகுதி
- மக்களவைத் தொகுதிகள்:[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Who's Who". kannur.nic.in (in ஆங்கிலம்). Retrieved 23 January 2023.
- ↑ Annual Vital Statistics Report – 2018 (PDF). Thiruvananthapuram: Department of Economics and Statistics, Government of Kerala. 2020. p. 55. Archived from the original (PDF) on 2021-11-02. Retrieved 2023-01-23.
- ↑ "Kerala | UNDP in India". UNDP.
- ↑ INDIAN NAVAL ACADEMY
- ↑ 5.0 5.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-11-16.
வெளியிணைப்புக்கள்
தொகு- கண்ணூரின் இணையதளம் பரணிடப்பட்டது 2009-04-27 at the வந்தவழி இயந்திரம்
- கண்ணூர் பக்கம் - கேரள மாநில இணையதளம் பரணிடப்பட்டது 2005-03-09 at the வந்தவழி இயந்திரம்
- கண்ணூர் சமுதாய வலைவாசல் பரணிடப்பட்டது 2008-07-01 at the வந்தவழி இயந்திரம்