பிணறாயி
பிணறாயி (Pinarayi) கேரளா மாநிலத்தின் கண்ணூர் மாவட்டம், தலச்சேரி வருவாய் வட்டத்தில் அமைந்த ஓலையம்பாளையம் கிராம ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்.[1]தற்போதைய கேரளா முதலமைச்சர் பிணறாயி விஜயன் இக்கிராமத்தில் பிறந்தவர் ஆவார்.
பிணறாயி
ஒலையம்பாலம் | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 11°49′18″N 75°29′50″E / 11.821782°N 75.497288°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | கண்ணூர் |
வருவாய் வட்டம் | தலச்சேரி |
அரசு | |
• வகை | பஞ்சாயத்து |
• தலைவர் | கொன்கின் ரவீந்திரன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 20.54 km2 (7.93 sq mi) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 15,828 |
• அடர்த்தி | 770/km2 (2,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 670741 |
தொலைபேசி குறியீடு | 0490-382454 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KL |
வாகனப் பதிவு | KL 58 KL 13 |
பாலின விகிதம் | 1000M/1047F ♂/♀ |
மக்களவைத் தொகுதி | கண்ணூர் |
சட்டமன்றத் தொகுதி | தர்மடம் |
இணையதளம் | www |
நிலவியல்
தொகுகண்ணூர் மாவட்ட நிர்வாகத் தலைமையிடமான கண்ணூருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலச்சேரியில் உள்ளது. பினராயி ஊராட்சியைச் சுற்றிலும் மூன்று புறங்களிலும் ஆறுகள் சூழ்ந்துள்ளது. நான்காவது புறத்தில் கடிரூர், தர்மடம், பெரளச்சேரி, வெங்காடு மற்றும் கோட்டயம் மற்றும் ஊர்கள் உள்ளது. பிணறாயி கிராமத்திற்கு மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் அரபுக் கடல் உள்ளது. பிணறாயி பஞ்சாயத்து கிராம் பிணறாயி மற்றும் எருவாட்டி என ஊர்களைக் கொண்டுள்ளது. பிணறாயி ஊராட்சி 19 வார்டு உறுப்பினர்களையும், பல துவக்கப் பள்ளிகளையும் கொண்டது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 3,922 வீடுகள் கொண்ட பிணறாயி கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 16,801 ஆகும். அதில் ஆண்கள் 7,786 மற்றும் 9,015 பெண்கள் ஆகவுள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1518 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1158 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 97.41% ஆகவுள்ளது. பிணறாயி கிராமத்தின் மக்கள் தொகையில் இந்துக்கள் 85.71%, இசுலாமியர் 13.49% மற்றும் பிறர் 0.50% ஆகவுள்ளனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ {https://cdn.s3waas.gov.in/s3060ad92489947d410d897474079c1477/uploads/2018/03/2018033177.pdf 130307 – Pinarayi - Village Offices in Thalassery Taluk]
- ↑ Pinarayi Population Census 2011