கோட்டயம்

கேரளாவிலுள்ள ஒரு நகரம்


கோட்டயம் (ஆங்கில மொழி: Kottayam) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோட்டயம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

கோட்டயம்
கோட்டயம்
அமைவிடம்: கோட்டயம், கேரளம் , இந்தியா
ஆள்கூறு 9°35′30″N 76°31′20″E / 9.5916°N 76.5222°E / 9.5916; 76.5222
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் கோட்டயம்
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி கோட்டயம்
மக்கள் தொகை 60,725 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


47.96 மீட்டர்கள் (157.3 அடி)

புவியியல்

தொகு

இவ்வூர், 9°35′30″N 76°31′20″E / 9.5916°N 76.5222°E / 9.5916; 76.5222[1] என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 47.96 மீட்டர் (157.3 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. கோட்டயம், கேரளத்தின் பதிப்பகங்களின் நகரமாகும். இந்நகரம் புகழ்பெற்ற மலையாள மனோரமா பதிப்பகத்தின் தலைமையகமாகும். கேரளத்தின் புகழ்பெற்ற மகாத்மா காந்தி பல்கலைக் கழகம் இங்கு அமைந்துள்ளது. மேலும் இங்கிருந்து மாத்ருபூமி, தேசாபிமானி, தீபிகா, கேரள கௌமுடி போன்ற முக்கிய நாளிதழ்களும் வெளிவருகின்றன.

மக்கள் வகைப்பாடு

தொகு

2001ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 60,725 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 49% ஆண்கள்; 51% பெண்கள் ஆவார்கள். கோட்டயம் மக்களின் சராசரி கல்வியறிவு 87% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 88%; பெண்களின் கல்வியறிவு 86% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. கோட்டயம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கோட்டயம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டயம்&oldid=3993005" இலிருந்து மீள்விக்கப்பட்டது