கோட்டயம் மாவட்டம்
கேரளத்தில் உள்ள மாவட்டம்
கோட்டயம் மாவட்டம் கேரள மாநிலத்தின் பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. கோட்டயம் நகரம் இதன் தலைநகரம். 1991-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டமே இந்தியாவின் முழு எழுத்தறிவு பெற்ற முதல் மாவட்டம். இந்தியாவில் புகையிலையைத் தடை செய்த முதல் மாவட்டமும் கோட்டயமே.[2] [3]
கோட்டயம் | |
— மாவட்டம் — | |
அமைவிடம் | 9°35′42″N 76°31′52″E / 9.595°N 76.531°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
தலைமையகம் | Kottayam |
ஆளுநர் | ஆரிப் முகமது கான் |
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[1] |
மக்களவைத் தொகுதி | கோட்டயம் |
மக்கள் தொகை • அடர்த்தி |
19,53,646 (2001[update]) • 1,025/km2 (2,655/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
ஐ. எசு. ஓ.3166-2 | IN-KL- |
இணையதளம் | kottayam.nic.in |
மேற்குத் தொடர்ச்சி மலைகள், வேம்பநாட்டு ஏரி, குட்டநாடு ஆகியன இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
கோட்டயம் என்ற சொல் கோட்டை, அகம் என்ற சொற்களில் இருந்து தோன்றியது. அழகிய தென்னந்தோப்புகள், நீர்நிலைகளைக் கொண்டிருப்பதால், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
வைணவத் திருத்தலங்கள்
தொகு108 வைணவத் திருத்தலங்களில் ஒரு வைணவத் திருத்தலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது. அவை:
ஆட்சிப் பிரிவுகள்
தொகுஇது கீழ்க்கண்ட சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[4]
- பாலை சட்டமன்றத் தொகுதி
- கடுத்துருத்தி சட்டமன்றத் தொகுதி
- வைக்கம் சட்டமன்றத் தொகுதி
- ஏற்றுமானூர் சட்டமன்றத் தொகுதி
- கோட்டயம் சட்டமன்றத் தொகுதி
- புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி
- சங்கனாசேரி சட்டமன்றத் தொகுதி
- காஞ்ஞிரப்பள்ளி சட்டமன்றத் தொகுதி
- பூஞ்ஞார் சட்டமன்றத் தொகுதி
- மக்களவைத் தொகுதிகள்:[4]
- கோட்டயம் மக்களவைத் தொகுதி (பகுதி)
- மாவேலிக்கரை மக்களவைத் தொகுதி (பகுதி)
- பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதி (பகுதி)
குறிப்பிடத்தக்கோர்
தொகு- கே. ஆர். நாராயணன் - முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்
- உம்மன் சாண்டி - கேரள முதல்வர்
- மம்மூட்டி - மலையாளத் திரைப்பட நடிகர்
- அருந்ததி ராய் - பிரபல எழுத்தாளர்
- வைக்கம் முகம்மது பஷீர் - மலையாள எழுத்தாளர்
மேலும் பார்க்க
தொகுகுறிப்புக்கள்
தொகு- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ கோட்டையம் மாவட்டம் புகையிலை புகையிலையற்ற மாவட்டமாக ஆக்கப்படவுள்ளது பற்றிய செய்தி யாகூ! இந்தியா
- ↑ "இதுபற்றிய இந்துப் பத்திரிகைச் செய்தி". Archived from the original on 2008-09-30. பார்க்கப்பட்ட நாள் 2010-08-03.
- ↑ 4.0 4.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-16.
வெளியிணைப்புகள்
தொகு- கோட்டையம் மாவட்ட இணையதளம் பரணிடப்பட்டது 2006-12-12 at the வந்தவழி இயந்திரம்
- Portal site for Kottayam District
- கோட்டையம் மாவட்ட தகவல் தளம்