முழப்பிலங்காடு கடற்கரை

(முழப்பிலங்காடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முழப்பிலங்காடு கடற்கரை, வடக்கு கேரளாவில், கண்ணூர் மாவட்டத்தில், கண்ணூரிலிருந்து 15 கி.மீ., தொலைவிலும், தலச்சேரியிலிருந்து 8 கி.மீ., தொலைவிலும் அமைந்த கடற்கரை சுற்றுலாத் தலமாகும்.[1]

முழப்பிலங்காடு கடற்கரை

முழப்பிலங்காடு கடற்கரை 4 கி.மீ தொலைவு வரை நீண்டுள்ளது. இது மணற்பாங்கான சவாரிக்கு ஏற்றது. இதன் முழு நீளத்திற்கும் ஒருவரால் பயணம் செய்ய முடியும். அமைதியும் அழகும் மிகுந்த இந்த இடம் மற்ற இடங்களிலிருந்து தனித்து இன்னும் பலரால் அறியப்படாத இடமாக உள்ளது. பெரிய கரும்பாறைகள் பரந்து கிடப்பதால், அது கடல் நீரை உள்ளே வரவிடாமல் தடுத்து பாறைகளுக்கிடையே அங்கங்கே குளம் போல நீர் தேங்கிக் கிடப்பது நீச்சல்காரர்களுக்கு வசதியாக உள்ளது. இந்தக் கடற்கரையில் உள்ள தென்னந்தோப்புகள் சூரிய வெளிச்சத்தைத் தரைக்கு ஊடுருவ விடாமல் தடுத்துவிடும்.[2]

போக்குவரத்து

தொகு

அருகில் உள்ள நகரங்கள்/இரயில் நிலையங்கள் :

அருகில் உள்ள விமான நிலைய்ம்:

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-06-19. பார்க்கப்பட்ட நாள் 2014-08-16.
  2. https://www.keralatourism.org/tamil/destination/destination.php?id=193

வெளி இணைப்புகள்

தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=முழப்பிலங்காடு_கடற்கரை&oldid=4056398" இலிருந்து மீள்விக்கப்பட்டது