கொட்டியூர்

கேரளாவில் உள்ள ஒரு கிராமம்

கொட்டியூர் அல்லது கோட்டியூர் (Kottiyoor; കൊട്ടിയൂർ), என்பது இந்தியாவில் கேரள மாநிலத்திலுள்ள வயநாடு மாவட்டத்தின் எல்லையாக கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம். ”தென்னாட்டு காசி” (തെക്കിന്റെ കാശി) என்று பிரபலமான இடமாகும். இங்கே காணப்படும் அடர்ந்த காடுகளின் மத்தியில் இந்துக்கள் இறைவன் பரமசிவனை வழிபடும் மிகவும் புராதனமான கோவில் "கொட்டியூர் பரம சிவன் கோவில்" நிலைகொண்டுள்ளது. இந்த இடத்தின் தல புராணத்தின் படி, ஒரு காலத்தில் தக்சன் என்ற அரசன் நடத்திய மிகப் பிரபலமான யாக வேள்வி தக்சயக்னம் அல்லது தக்சயாகம் என்று அறியப்படுவது, இங்கே நடைபெற்றதாக கருதப்படுகிறது. மிக பழமையான இச்சிவன் கோவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்களை கவர்ந்திழுக்கிறது.

கொட்டியூர்
—  கிராமம்  —
கொட்டியூரின் ஒரு காட்சி
கொட்டியூரின் ஒரு காட்சி
கொட்டியூர்
அமைவிடம்: கொட்டியூர், கேரளா , இந்தியா
ஆள்கூறு 11°52′35″N 75°51′15″E / 11.87639°N 75.85417°E / 11.87639; 75.85417
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் கண்ணூர்
அருகாமை நகரம் தலச்சேரி
ஆளுநர் ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[2]
மக்களவைத் தொகுதி கண்ணூர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மேலும் பார்க்க

தொகு

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டியூர்&oldid=3241843" இலிருந்து மீள்விக்கப்பட்டது