மாப்பிளா விரிகுடா
கேரள துறைமுகம்
மாப்பிளா விரிகுடா (Mappila Bay) என்பது தென் இந்தியாவின், கேரளத்தின், கண்ணூர் நகரத்தின் அய்யக்கரையில் அமைந்துள்ள இயற்கை துறைமுகம் ஆகும். இதன் ஒரு பக்கத்தில் 15 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட செயின்ட் ஏஞ்சலோ கோட்டையும் மறுபுறம் அரக்கல் அரண்மனை போன்றவைகளும் உள்ளன.
கோலாத்திரியின் ஆட்சிக் காலத்தில் இந்த விரிகுடா புகழ்பெற்ற துறைமுகமாக இருந்தது. கோலாத்தரிகளின் ஆட்சிக்காலத்தில் இது ஒரு வணிகத் துறைமுகமாக இலட்சத்தீவுகள், அந்நிய நாடுகள் போன்ற பகுதிகளில் இருந்து பொருட்களை இறக்குமதி ஏற்றுமதி செய்யக்கூடிய பகுதியாக இருந்தது.