ஹவா மஹால்
ஹவா மஹால் (ஹிந்தி: हवा महल, மொழிபெயர்ப்பு: "காற்று வீசும் அரண்மனை" அல்லது "தென்றல் வீசும் அரண்மனை"), இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரண்மனை. அது 1799ஆம் ஆண்டில் ஜெய்ப்பூர் இராச்சிய மன்னர் சவாய் பிரதாப் சிங் கட்டினார். மேலும் ஹிந்து கடவுள் கிருஷ்ணாவின் கிரீடத்தின் அமைப்பில் லால் சந்த் உஸ்தா என்பவரால் வடிவமைக்கப்பட்டது. சிக்கலான பின்னல் வேலைப்பாட்டால்[1] அலங்கரிக்கப்பட்டிருக்கும் ஜரோகாக்கள் எனப்படும் சிறிய ஜன்னல்கள் 953 உள்ள வெளியிலுள்ள அதனுடைய சிறப்பான ஐந்தடுக்குக் கட்டடம் கூட, தேன்கூட்டிலுள்ள அறுகோணவடிவ அமைப்பு வகையைச் சார்ந்ததாகும். தொடக்கத்தில், பின்னல் வேலைப்பாட்டின் நோக்கம், மேல்நிலைப் பெண்கள் கடுமையான "பர்தா" (முகத்திரை).[1][2][3] முறையைப் பின்பற்றவேண்டியிருந்ததால், அவர்கள் இருப்பதை மற்றவர் பார்க்காவண்ணம் கீழே சாலையில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளைக் கவனிப்பதேயாகும்.
சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு வண்ண மணல்கற்களால் கட்டப்பட்ட அந்த அரண்மணை, ஜெய்ப்பூர் வணிகப்பகுதியின் முக்கிய இடத்தின் பொது வழியில் அமைந்துள்ளது. அது நகர அரண்மனையின் ஒரு பகுதியாக விளங்குவதுடன், ஜினானா அல்லது பெண்களின் அறைகள், அந்தப்புரம் வரை பரவியுள்ளது. குறிப்பாக அது அதிகாலை வேளையில் சூரியனின் பொன்னிற ஒளியுடன் மின்னுவதைப் பார்க்கும்போது மிக்க மகிழ்வூட்டுவதாக உள்ளது.
வரலாறு
தொகுராஜஸ்தான் கச்வஹா பகுதியை ஆண்ட, இரண்டாம் ஜெய் சிங் முதன்முதலில் திட்டமிட்டு,கட்டடம் கட்டி 1727ஆம் ஆண்டில் ஜெய்ப்பூர் நகரத்தை நிறுவியவர் ஆவார். இருப்பினும், ராயல் சிட்டி பேலசின் தொடர்ச்சியாக 1799ஆம் ஆண்டில் ஹவா மஹாலைக் கட்டியது, அவரது பேரன் ஸவாய் ப்ரதாப் ஸிங், மஹாராஜா ஸவாய் மாதோஸிங் Iன் மகன் ஆவார். ப்ரதாப் ஸிங்கின், ஹிந்து கடவுள் ப்ரபு கிருஷ்ணா மீதான ஆழ்ந்த பக்தி, அதை முகுதா அல்லதி கிரீட வடிவில் கடவுளை அலங்கரிக்குமாறு கட்டி சமர்ப்பிக்க அவரைத் தூண்டியது என யூகிக்கப்படுகிறது. அது சார்ந்த சரியான வரலாற்றுச் சான்று கிடைக்கவில்லை என்றாலும், மிகக் கட்டுப்பாடான பர்தா (ஆண்கள் பெண்களைப் பார்ப்பதைத் தவிர்க்கும் வழக்கம்) அணியும் வழக்கத்தில் இருந்த மேல்நிலை குடும்பப் பெண்களுக்கு, வணிகச் சந்தையின் நிகழ்வுகளைக் காணவும் சீரிய ஊர்வலங்களையும் விழாக்களையும் குடைந்தெடுக்கப்பட்ட கற்களாலான திரைகளுக்குப் பின்னால் அமர்ந்து பார்க்கவும் வாய்ப்பு அளிக்கவேண்டி இருந்தது. ஹவா மஹால் மிக நேர்த்தியான முறையில், ஆடம்பரமான வசதிகளுடனும் வெளிப் பார்வையாளர்களால் பார்க்கமுடியாத அளவுக்கு பிரத்யேகமான கடும் திரைகட்குப்பின்னும் கட்டப்பட்டது.[4][5]
ஜெய்ப்பூரின் உயர் குடும்பம்கூட, அவர்களது ஆட்சி காலத்தில், மஹாலை, திணறச்செய்யும் கோடைகாலத்தில், வழக்கத்திற்கு அப்பாற்பட்டு வடிவமைக்கப்பட்ட ஜன்னல் திரைச் சீலைகள் தேவையான குளிர் காற்றைக் கொடுத்ததால், ஒரு கோடைகால ஓய்வெடுக்கும் இடமாக பல ஆண்டுகளாகப் பயன்படுத்தினர்.[6]
கட்டடக்கலை
தொகுபிரதானச் சாலையிலிருந்து கட்டட முகப்பின் முழுத்தோற்றம் | ஹவா மஹாலின் முழு பின்பக்கத் தோற்றம் |
ஆழமான கடகாலிலிருந்து உயரம்50 அடிகள் (15 m) எழுந்துள்ள அரண்மனை ஒரு ஐந்தடுக்கு பிரமிட் வடிவ நினைவுச் சின்னம். கட்டடத்தின் மேல் மூன்று மாடிகள் ஒரு அறையின் அகலமுள்ளவை, முதல் மற்றும் இரண்டாம் மாடிகளின் முன்னால் மேற்கூரையற்ற முற்றங்கள் கட்டடத்தின் பின்பக்கத்தில் உள்ளன. சாலையிலிருந்து பார்க்கும்போது, முன்னால் உள்ள ஏற்றப்பகுதி, சிறிய இனிய துவாரங்களைக் கொண்டு கட்டப்பட்ட தேன்கூட்டிலுள்ள அறுகோணவடிவ அமைப்புத் தோற்றமளிக்கிறது. ஒவ்வொரு துவாரத்திலும் மிகச்சிறிய ஜன்னல்களும் மணல்கற்களாலான குடைந்தெடுக்கப்பட்ட க்ரில்கள், முக்கோண வடிவிலான அலங்கார அமைப்புகள் மற்றும் குவிமாடங்கள் உள்ளன. அது நினைவுச் சின்னத்திற்கு பிரத்யேகமான முகப்பினை கொடுக்கும் ஒருமுழுமையான அரை-எண்கோண விரிகுடாக்களின் தொகுப்பு ஆகும். கட்டடத்தின் பின்பகுதியின் உள்பகுதியில், மேல் அடுக்குவரை செல்லும் மிகக்குறைவான அலங்காரத்துடன் உள்ள தூண்களும் தாழ்வாரங்களும் கொண்ட தேவைக்கேற்ற அறைகள் உள்ளன. மஹாலின் உட்பகுதி "மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தும் அல்லது மின்னுகின்ற வெவ்வேறு வண்ண பளிங்கு கற்களால் ஆன அறைகளைக் கொண்டது; முற்றத்தின் மையப்பகுதியை நீரூற்றுகள் அலங்கரிக்கின்றன" என வருணிக்கப்படுகிறது.[4][7]
இந்தியாவில் மிகநேர்த்தியாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட ஜெய்ப்பூர் நகரத்தையும் உருவாக்கத் திட்டமிட்ட லால் சந்த் உஸ்தா இந்த பிரத்யேக அமைப்பின் கட்டட நிபுணர் ஆவார். நகரத்தில் உள்ள மற்ற நினைவுச் சின்னங்களின் ஒப்பனைகளைக் காணும்போது, சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு மணல் கற்களால் கட்டப்பட்ட அதனுடைய வண்ணம், ஜெய்ப்பூருக்கு கொடுக்கப்பட்ட "இளஞ்சிவப்பு நகரம் (பிங்க் சிட்டி)" என்ற அடைமொழிக்கு முழுமையானச் சான்றாகும். அதன் முகப்பு சிக்கலாகக் குடையப்பட்டுள்ள ஜரோகாக்களைக் (சில மரத்தால் செய்யப்பட்டவை) கொண்ட 953 சிறு இடைவெளிகளைக் கொண்டுள்ளது. அதனுடைய பண்பாடு மற்றும் கட்டட மரபு, ஹிந்து இராஜபுத்திர கட்டடக்கலையும் இஸ்லாமிக் முகலாயக் கட்டடக்கலையும் கலந்த ஒரு உண்மையான பிரதிபலிப்பாகும்; குவிமாட சரங்கள், குழல்வடிவத் தூண்கள், தாமரை மற்றும் பூ வடிவங்கள் ஆகியவற்றில் இராஜபுத்திரர்களின் முறையையும், கற்கள் பதிக்கப்பட்ட சரிகைச் சித்திர வேலைப்பாட்டிலும் கட்டட வளைவுகளிலும் (ஃபதேபூர் ஸிக்ரி).[5] யில் உள்ள - இனிய காற்று வீசும் அரண்மணை - பஞ்ச மஹாலில் உள்ள அதே தன்மையை வேறுபடுத்தி பார்க்கும் விதத்தில்) இஸ்லாமிய முறையையும் காணலாம்.
நகர அரண்மனைப் பக்கமிருந்து வரும் ஹவா மஹாலின் நுழைவாயில் மிகநேர்த்தியான ஒரு கதவு வழியாகும். கிழக்குப் பகுதியில் ஹவா மஹாலால் சூழப்பட்டு மூன்று பக்கங்களில் இரண்டடுக்குக் கட்டடங்களைக் கொண்ட ஒரு பெரிய முற்றத்திற்கு அது செல்கிறது. இம்முற்றத்தில் ஒரு தொல்பொருள் காட்சிக்கூடமும் உள்ளது.[8]
ஹவா மஹால் மஹாராஜா ஜெய் ஸிங்கின் மிகச்சிறந்த கைவினைப் பொருள் எனவும் அறியப்பட்டது. ஏனெனில் மஹாலின் நேர்த்தியானத் தோற்றம் மற்றும் அதன் உள் அமைப்பு காரணமாக அவருக்குப் பிடித்த ஓய்வெடுக்கும் இடமாக அது இருந்தது. முகப்பின் சிறிய ஜன்னல்கள் வழியாக வரும் தென்றலால் ஏற்படும் அறைகளின் குளிர் தன்மை, அறைகள் ஒவ்வொன்றின் மையத்திலும் வைக்கப்பட்டுள்ள நீரூற்றுகளால் அதிகரிக்கப்பட்டது.
மஹாலின் மேற்கூரையிலிருந்து அப்பரப்பு முழுவதையும் பார்க்கும்போது ஆச்சர்யமூட்டுவதாக உள்ளது. கிழக்கில் உள்ள கடைவீதி (ஸெரிதியோரி பஜார் அல்லது மார்கெட்) பாரிஸ் நகரிலுள்ள மரநிறை சாலைகளை ஒத்திருக்கிறது. பசுமையானப் பள்ளத்தாக்குகளும் மலைகளும் மற்றும் அமீர் கோட்டையும் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் நற்காட்சிகளை ஏற்படுத்தியுள்ளன. தார் பாலைவனத்தின் "நீராவித் தொடரலையின் முடிவுறாக் கோடு" கிழக்குக்கும் தெற்குக்கும் உள்ளது. இந்த நிலத்தோற்ற மாற்றங்கள் அனைத்தும், கடந்த காலத்தில் முழுவதும் தனித்துவிடப்பட்ட நிலத்திலிருந்து, ஜெய்ப்பூர் மஹாராஜாக்களின் கூட்டு முயற்சியால்[9] ஏற்பட்டதாகும். அவ்வாறே மஹால் பல சீரிய பண்புகளின்[10] ஒரு அங்கமாகக் கருதப்பட்டுள்ளது. நினைவுச் சின்னத்தின் மேல் தளத்திலிருந்து[11] ஜந்தர் மந்தர் மற்றும் நகர அரண்மனைத் தோற்றத்தைப் பார்க்கலாம்.
ஹவா மஹாலின் மேல் இரண்டு தளங்களுக்கும் சரிவுப்பாதை வழியாகத்தான் செல்லமுடியும். மஹால் இராஜஸ்தான் அரசு[8] தொல்பொருள் துறையால் பராமரிக்கப்படுகிறது.
மீள்வித்தலும் புதுப்பித்தலும்
தொகு50 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப்பின் 2005 ஆம் ஆண்டில், நினைவுச்சின்னத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், மஹாலை மீள்வித்தலும் புதுப்பித்தலும் பணி ரூ.45 லட்சம் (சுமார் 1 மில்லியன் யுஎஸ் டாலர்) மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது. கூட்டுப் பிரிவினரும் ஜெய்ப்பூரின் வரலாற்று நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க உதவிக்கரம் நீட்டுகின்றனர், மேலும் யூனிட் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா ஹவா மஹாலைப் பராமரிக்க தத்தெடுத்துக்கொண்டுள்ளது.
பார்வையாளரின் தகவல்
தொகு"நேர்த்தியான கட்டட அமைப்பின் மாதிரி" எனப்படும் மஹால், ஜெய்ப்பூர் நகரத்தின் வடக்கில், பிரதான சாலை கூடும் பதி சௌபத் என்ற இடத்தில் (பெரிய நான்கு சதுரம்) அமைந்துள்ளது. ஜெய்ப்பூர் நகரம் சாலை, ரயில் மற்றும் வான்வழிகளால் நாட்டின் மற்றப்பகுதிகளுடன் சீரன முறையில் இணைக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் ரயில்வே நிலையம் இந்திய ரயில்வேயில் மைய முக்கியமான அகல ரயில்பாதையைக் கொண்டதாகும். அவ்வாறே, ஜெய்ப்பூர் பிரதான நெடுஞ்சாலைகளாலும் நகரத்திலிருந்து தொலைவில்13 கிலோமீட்டர்கள் (8.1 mi) உள்ள ஸங்கனேர் பன்னாட்டு விமான நிலையத்தாலும் இணைக்கப்பட்டுள்ளது.
ஹவா மஹாலுக்கு நுழைவுவாயில் முன்பகுதியில் இல்லாமல் பின் பகுதிக்குச் செல்லும் ஒரு பக்க சாலையாகும். ஹவா மஹாலை நோக்கி நின்று, வலப்பக்கம் திரும்பி மீண்டும் முதலாவதாகவுள்ள வலப்பக்கம் திரும்பிச் சென்றால் அது வளைவு நுழைவாயிலுக்குச் சென்று, பிறகு கட்டடத்தின் பின்பகுதிக்குச் செல்லும்.
புகைப்படத் தொகுப்பு
தொகு-
ஹவா மஹாலின் ஒரு அகலப் பரப்புத் தோற்றம்
-
ஜரோகா அல்லது பின்னல்வகை ஜன்னல்
-
ஜரோகா அல்லது பின்னல்வகை ஜன்னல்
-
மஹாலின் காற்று வெளிச்செல் வழிகள்
இதனையும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Rai, Vinay (2007). Think India: the rise of the world's next superpower and what it means for every American. Dutton. p. 194. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0525950206. பார்க்கப்பட்ட நாள் 2009-12-06.
{{cite book}}
:|work=
ignored (help); Unknown parameter|coauthor=
ignored (help) - ↑ "Hawa Mahal". பார்க்கப்பட்ட நாள் 2009-12-06.
- ↑ "Japiur, the Pink City". பார்க்கப்பட்ட நாள் 2009-12-06.
- ↑ 4.0 4.1 "Hawa Mahal – Jaipur". Archived from the original on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2009-12-07.
- ↑ 5.0 5.1 "Hawa Mahal of Jaipur in Rajasthan, India". Archived from the original on 2009-12-12. பார்க்கப்பட்ட நாள் 2009-12-07.
- ↑ Ring, Trudy (1996). International Dictionary of Historic Places: Asia and Oceania. Taylor & Francis. p. 386. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1884964044.
{{cite book}}
:|work=
ignored (help); Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ Sitwell, Sacheverel (1962). The red chapels of Banteai Srei: and temples in Cambodia, India, Siam, and Nepal. Weidenfeld and Nicolson. p. 174. பார்க்கப்பட்ட நாள் 2009-12-07.
{{cite book}}
:|work=
ignored (help); More than one of|pages=
and|page=
specified (help) - ↑ 8.0 8.1 "Hawa Mahal". Archived from the original on 2010-01-29. பார்க்கப்பட்ட நாள் 2009-12-10.
- ↑ Rousselet, Loius; Charles Randolph Buckle (2005). India and its native princes: travels in Central India and in the presidencies of Bombay and Bengal. Asian Educational Services. p. 228. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1887-4. பார்க்கப்பட்ட நாள் 10 December 2009.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑ Walking through the valley: an autobiography. ECW Press. 1994. p. 93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1550222090. பார்க்கப்பட்ட நாள் 2009-12-10.
{{cite book}}
:|first=
missing|last=
(help);|work=
ignored (help); Text "lastWoodcock" ignored (help) - ↑ Brown, Lindsay (2008). Rajasthan, Delhi and Agra. Lonely Planet. pp. 157–58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1741046904. பார்க்கப்பட்ட நாள் 2009-12-07.
{{cite book}}
:|work=
ignored (help); Unknown parameter|coauthor=
ignored (help)
குறிப்புதவிகள்
தொகு- Tillotson, G.H.R (1987). The Rajput Palaces - The Development of an Architectural Style (Hardback) (First ed.). New Haven and London: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 03000 37384.
{{cite book}}
: Unknown parameter|origdate=
ignored (|orig-year=
suggested) (help)