ஜல் மகால்


ஜல் மகால் அல்லது நீர் அரண்மனை , இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான செய்ப்பூர் நகரத்தின் மன் சாகர் ஏரியின் நடுவில் அமைந்த அழகிய அரண்மனை ஆகும். ஜல் மகாலை ஜெய்பூர் இராச்சிய மன்னர் இரண்டாம் ஜெய்சிங் 18ம் நூற்றாண்டில் நிறுவினார். ஜெய்ப்பூர் - தில்லி நெடுஞ்சாலையில், ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 4 கிமீ தொலைவில் ஜல் மகால் உள்ளது. 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட மன் சாகர் ஏரியில் அமைந்த நீர் அரண்மனை, இராசபுத்திர - முகலாயக் கட்டிடக் கலையில் கட்டப்பட்டது.

ஜல் மகால் / நீர் அரண்மனை
Jal Mahal in Man Sagar Lake.jpg
அமைவிடம்செய்ப்பூர்
ஆள்கூறுகள்26°57′13″N 75°50′47″E / 26.9537°N 75.8463°E / 26.9537; 75.8463
வகைநன்னீர் ஏரி
வடிநிலப் பரப்பு23.5 சகிமீ
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு300 ஏக்கர்
அதிகபட்ச ஆழம்15 அடி
குடியேற்றங்கள்ஜெய்ப்பூர்
இரவில் ஜல் மகால் ("நீர் அரண்மனை") காட்சி
சீரமைப்பிற்குப் பின் ஜல் மகால்

ஐந்து அடுக்குகள் கொண்ட ஜல் அரன்மனை சிவப்பு மணற்கல்லால் கட்டப்பட்டது. 300 ஏக்கர் பரப்பளவும், அதிக பட்சமாக 15 அடி ஆழம் கொண்ட ஏரியில் நீர் முமுமையாக நிரம்பும் போது, ஜல் மகாலின் முதல் நான்கு அடுக்குகள் நீரில் மூழ்கிவிடும். ஐந்தாம் அடுக்கு மட்டும் வெளியே காட்சியளிக்கும்.[1]

ஏரியில் திடக்கழிவுகள் கொட்டப்படுவதால் ஏரியின் நீர் மாசடைந்தும், நீரடைப்புகளால் ஏரிக்கு வரும் நீரும் குறைந்து விட்டது. தற்போது இராஜஸ்தான் அரசு ஏரியை சுத்தப்படுத்தி வருகிறது. [2]

ஜெய்ப்பூரின் வடகிழக்கில் அமைந்த ஆரவல்லி மலைத்தொடர்களின் அடிவாரத்தின், 23.5 சகிமீ பரப்பு கொண்ட நிலப்பரப்பே, ஜல் மகால் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியாகும்.[3] ஜல் அரண்மனையின் மேற்கூரையின் நான்கு முனைகளில் உள்ள அரை - எண்கோண வடிவ விதானங்கள் நேர்த்தியாக, அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.[4]

படக்காட்சிகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Jal Mahal gets a Rs1000 cr facelift". rediff.com. 2009-09-12 அன்று பார்க்கப்பட்டது.
  2. Brown, Lindsay; Amelia Thomas (2008). Rajasthan, Delhi and Agra. Lonely Planet. பக். 160. ISBN 9781741046908. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-74104-690-4. https://books.google.com/books?id=Zz0_zXPb68kC&pg=PA160&dq=Jal+Mahal+place+details+Jaipur#v=onepage&q=&f=false. பார்த்த நாள்: 2009-09-13. 
  3. "Impact of Urbanization on Urban Lake Using High Resolution Satellite Data and GIS(A Case Study of Man Sagar Lake of Jaipur, Rajasthan)" (PDF). 2017-12-01 அன்று மூலம் (pdf) பரணிடப்பட்டது. 2018-02-09 அன்று பார்க்கப்பட்டது.
  4. Matane, Paulias; M. L. Ahuja (2004). India: a splendour in cultural diversity. Anmol Publications Pvt. Ltd.. பக். 55. ISBN 9788126118373. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-261-1837-7. https://books.google.com/books?id=8aIyc7_Q8JYC&pg=PA55&dq=Jal+Mahal+place+details+Jaipur#v=onepage&q=&f=false. பார்த்த நாள்: 2009-09-13. 


வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜல்_மகால்&oldid=3572917" இருந்து மீள்விக்கப்பட்டது