ஆம்பர் கோட்டை

ஆம்பர் கோட்டை அல்லது ஆமேர் கோட்டை (Amer Fort or Amber Fort) (இந்தி: आमेर क़िला) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் ஆம்பர் நகரத்தில் அமைந்துள்ளது. 4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஆம்பர் கோட்டை[1] இராஜஸ்தான் மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆம்பர் கோட்டை ஒரு முதன்மைத் தொல்லியல் மற்றும் சுற்றுலா இடமாகும்.[2][3]

ஆம்பர் கோட்டை
பகுதி: ஜெய்ப்பூர்
ஆம்பர், இராஜஸ்தான், இந்தியா
பாம்பு வடிவ படிகற்களுடன் கூடிய ஆம்பர் கோட்டையின் முன்புறத் தோற்றம்
ஆம்பர் கோட்டை is located in இராசத்தான்
ஆம்பர் கோட்டை
ஆம்பர் கோட்டை
ஆள்கூறுகள் 26°59′09″N 75°51′03″E / 26.9859°N 75.8507°E / 26.9859; 75.8507
வகை கோட்டை மற்றும் அரண்மனை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இராஜஸ்தான் அரசு
மக்கள்
அனுமதி
ஆம்
நிலைமை நல்ல நிலையில்
இட வரலாறு
கட்டிய காலம் 1592
கட்டியவர் இராஜா மான் சிங்
கட்டிடப்
பொருள்
மணற்கல் மற்றும் பளிக்குக் கல்

ஆம்பர் கோட்டை பல திரட்டப்பட்டுள்ள பாதைகளுடன் கூடிய நுழைவாயிற் கதவுகளுடனும் கூடியது. கோட்டையில் பல அரண்மனைகளும், ஒரு ஏரியுடனும் கூடியது.[3][4][5][6][7][8] இந்த ஏரியின் நீர் ஆதாரத்தை நம்பியே கோட்டையும் அரண்மனைகளும் உள்ளது.[9]

கோட்டையினுள் உள்ள மணற்கற்களாலும், பளிங்குக் கற்களாலும் கட்டப்பட்ட அரண்மனை திவானி ஆம் எனப்படும் பொது மக்கள் கூடும் மாளிகை, திவானி காஸ் எனப்படும் எனப்படும் அரண்மனைக் குடும்பத்தினர் மட்டும் கூடும் மாளிகை, கண்ணாடி மாளிகை எனப்படும் ஜெய் மந்திர் , செயற்கை நீரூற்றுகளுடன் கூடிய மாளிகை என நான்கு அழகியல் சுற்றுப்புறத்தைக் கொண்ட மாளிகைகளுடன் கூடியது என்பதால் இக்கோட்டையை ஆம்பர் கோட்டை எனப்பெயராயிற்று.[4]

ஆம்பர் கோட்டையின் அரண்மனை இராசபுத்திர குல மன்னர்களும்; குடும்பத்தினரும் வாழிடமாக இருந்தது. கோட்டையின் கணபதி நுழைவாயில் அருகில் உள்ள சிலா தேவியின் உருவச்சிலை, தற்கால வங்காள தேசத்தின் ஜெஸ்சூர் இராஜாவை, 1604இல் இராஜா மான் சிங் வெற்றி கொண்டமைக்காக வழங்கப்பட்டது.[3][10][11]

இராஜஸ்தானின் மலைக் கோட்டைகளில் ஆம்பர் கோட்டையும், உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோ நிறுவனம் 2013ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது.[12][13]

பெயர்க் காரணம்

தொகு
 
பவானியின் பல்வேறு காட்சிகளுடன் வெள்ளிக் கதவு

பவானி எனும் அம்பாளின் பெயரால் இக்கோட்டைக்கு ஆம்பர் கோட்டை எனும் பெயராயிற்று.[14]

நிலவியல்

தொகு
 
ஆம்பர் கோட்டையின் மாதோ ஏரியும் தோட்டமும்

ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் ஆமேர் எனும் ஊரில், ஆரவல்லி மலைத்தொடரில் மாதோ ஏரியுடன், அரண்மனைகளுடன் கூடிய ஆம்பர் கோட்டை அமைந்துள்ளது. ஜெய்ப்பூர்தில்லி செல்லும் நெடுஞ்சாலையில் ஆம்பர் கோட்டை உள்ளது.[6]

வரலாறு

தொகு

துவக்கத்தில் ஆம்பர் கோட்டை மீனாக்கள் [15] எனும் மீனவ குலத்தவர்களால் சிறிய அளவில் கட்டப்பட்டது. பின்னர் கச்வாகா இராசபுத்திர குலத்தினர் இப்பகுதியை மீன்னாக்களிடமிருந்து கைப்பற்றி ஆண்டனர். [16] பின்னர் முதலாம் மான் சிங் எனும் இராஜபுத்திர மன்னரால் 21 டிசம்பர் 1550 முதல் 6 சூலை 1614 முடிய ஆளப்பட்டது.

இராஜா மான் சிங் என்பவரால் ஆம்பர் கோட்டை 967இல் சற்று சீரமைத்து கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.[6][17][18] கி பி 1600இல் முதலாம் மான் சிங் ஆட்சிக் காலத்தில் ஆம்பர் கோட்டை சீரமைத்து பெரிதாக கட்டப்பட்டது.[17] மன்னர் ஜெய்சிங் ஆட்சிக் காலத்தில் தற்போதைய கோட்டையின் அமைப்புகள் நிறைவு பெற்றது. 1727இல் இரண்டாம் சவாய் ஜெய்சிங் மன்னர், தலைநகரத்தை ஜெய்ப்பூருக்கு மாற்றம் செய்யும் வரை, ஆம்பர் கோட்டை கச்வாகா இராசபுத்திர குல மன்னர்களின் தலைநகராக விளங்கியது.[1][6][7] கி பி 1600 முதலாம் மான் சிங் ஆட்சிக் காலத்தில் ஆம்பர் கோட்டை சீரமைத்து பெரிதாக கட்டப்பட்டது.[17]

ஆம்பர் கோட்டையின் அகலப்பரப்புக் காட்சி

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Outlook Publishing (1 December 2008). Outlook. Outlook Publishing. pp. 39–. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2011. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
  2. Mancini, Marc (1 February 2009). Selling Destinations: Geography for the Travel Professional. Cengage Learning. p. 539. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4283-2142-7. பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்ரல் 2011. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
  3. 3.0 3.1 3.2 Abram, David (15 December 2003). Rough guide to India. Rough Guides. p. 161. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84353-089-3. பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்ரல் 2011. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
  4. 4.0 4.1 Pippa de Bruyn; Keith Bain; David Allardice; Shonar Joshi (1 March 2010). Frommer's India. Frommer's. pp. 521–522. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-55610-8. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2011. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
  5. "Amer Fort". Government of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2011.
  6. 6.0 6.1 6.2 6.3 "Amer Palace". Rajasthan Tourism: Government of India. பார்க்கப்பட்ட நாள் 31 March 2011.
  7. 7.0 7.1 "Amer Fort". iloveindia.com. பார்க்கப்பட்ட நாள் 2011-02-23.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "Maota Sarover -Amer-jaipur". http://amerjaipur.in. Agam pareek. Archived from the original on 2018-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-09-25. {{cite web}}: External link in |website= (help)
  9. {{ Amer palace பரணிடப்பட்டது 2016-07-30 at the வந்தவழி இயந்திரம்
  10. Rajiva Nain Prasad (1966). Raja Mān Singh of Amer. World Press. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2011. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
  11. Lawrence A. Babb (1 July 2004). Alchemies of violence: myths of identity and the life of trade in western India. SAGE. pp. 230–231. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7619-3223-9. பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்ரல் 2011. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
  12. Singh, Mahim Pratap (22 June 2013). "Unesco declares 6 Rajasthan forts World Heritage Sites". The Hindu. http://www.thehindu.com/news/national/other-states/unesco-declares-6-rajasthan-forts-world-heritage-sites/article4838107.ece. பார்த்த நாள்: 1 ஏப்ரல் 2015. 
  13. Hill Forts of Rajasthan
  14. Trudy Ring, Noelle Watson, Paul Schellinger (2012). [Asia and Oceania: International Dictionary of Historic Places]. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-136-63979-9. pp. 24.
  15. Meenas
  16. "amer(amber)". Archived from the original on 2018-06-30. பார்க்கப்பட்ட நாள் 2016-09-19.
  17. 17.0 17.1 17.2 "The Fantastic 5 Forts: Rajasthan Is Home to Some Beautiful Forts, Here Are Some Must-See Heritage Structures". DNA : Daily News & Analysis. 28 January 2014 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924204252/http://www.highbeam.com/doc/1P3-3191827171.html. பார்த்த நாள்: 5 July 2015. 
  18. Rani, Kayita (November 2007). Royal Rajasthan. New Holland Publishers. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84773-091-6. பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்ரல் 2011. {{cite book}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amber Fort
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேல் வாசிப்பிற்கு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பர்_கோட்டை&oldid=3793005" இலிருந்து மீள்விக்கப்பட்டது