பளிங்கு
பளிங்கு (Marble) என்பது பலபடிகமாக்கப்பட்ட கார்பனேட்டு கனிமங்களை (பெரும்பாலும் கால்சைட்டு அல்லது டோலோமைட்டு ) உள்ளடக்கிய உருமாறிய பாறை ஆகும்.
புவியியலாளர்கள் உருமாறிய சுண்ணக்கற்களைக் குறிக்க "பளிங்கு" என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், கற்கலைஞர்கள் உருமாறாத சுண்ணக்கற்களையும் பளிங்கு என்று அழைக்கின்றனர்.[1][2][3]
பளிங்கு பொதுவாக சிற்ப வேலைக்கும் கட்டடப் பொருளாகவும் பயன்படுகிறது.
பயன்பாடுகள்
தொகுசிற்ப வேலை
தொகுவெள்ளை பளிங்குகள் மரபார்ந்த காலங்களிலிருந்து சிற்பங்கள் உருவாக்கத்தில் பயன்படுகிறது. அதன் மென்மைத் தன்மை, தொடர்புடைய திசையொருமை மற்றும் ஓரினத்தன்மை ஆகிய பண்புகளின் காரணமாக சிற்பங்கள் உருவாக்க ஏற்ற பொருளாக கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Marble | Definition, Types, Uses, & Facts | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). Archived from the original on 2023-03-07. பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
- ↑ Kearey, Philip (2001). Dictionary of Geology, Penguin Group, London and New York, p. 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-051494-0
- ↑ μάρμαρον[தொடர்பிழந்த இணைப்பு], Henry George Liddell, Robert Scott, A Greek–English Lexicon, on Perseus Digital Library