பர்தா
பர்தா என்பது தென்னாசியாவைச் சேர்ந்த சில சமுதாயங்களில் பெண்கள் பின்பற்ற வேண்டிய சில சமய, சமூக நடைமுறைகளுக்கு இணங்க அணிய வேண்டிய ஆடையின் ஒரு பகுதி அல்லது பெண்களின் தனிமையைக் காப்பதற்கான ஒன்று. பர்தா என்னும் சொல் பாரசீக மொழியில் "திரை" எனப் பொருள்படும். தமிழில் இதை "முக்காடு" என்பர். பொதுவாக இசுலாம் சமயத்தைச் சேர்ந்த பெண்கள் இதை அணிகிறார்கள்.
இந்தியாவில் இந்துப் பெண்கள் அணியும் ஒரு வகையான பர்தா “கூங்கட்” எனப்படுகிறது. பர்தா இரண்டு வடிவங்களில் காணப்படுகின்றது. ஒன்று பெண்களை ஆண்களிடமிருந்து தனிப்படுத்தி வைப்பதற்கானது. மற்றது, பெண்கள் தமது உடலை மூடுவதற்கும், தமது உடலின் வடிவம் புலப்படாமல் மறைப்பதற்குமானது.[1]