முதன்மை பட்டியைத் திறக்கவும்

சம்மு நகர் (ஜம்மு நகர்) சம்மு பகுதியின் பெரிய நகராகும். சம்மு காசுமீரின் குளிர்கால தலைநகரான இந்நகர் தாவி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மாநகராட்சியான இந்நகரின் எல்லைக்குள் வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களும் பழைய பள்ளிவாசல்களும் நிறைய உள்ளதால் இந்நகரம் கோயில் நகரம் என அழைக்கப்படுகிறது. இது சம்மு காசுமீர் மாநிலத்தின் இரண்டாவது பெரிய அதிக மக்கள் தொகையுள்ள நகராகும்.

அமைப்புதொகு

இந்நகரம் 32°44′N 74°52′E / 32.73°N 74.87°E / 32.73; 74.87.[1] என்ற புள்ளியில் அமைந்துள்ளது. ஏற்ற இறக்கங்களுடன் அமைந்துள்ள இந்நகரின் நிலப்பரப்பு சிவாலிக் மலைத்தொடரின் உயரம் குறைந்த பகுதியில் அமைந்துள்ளது. வடக்கு, கிழக்கு, தென்கிழக்கில் சிவாலிக் மலைத்தொடராலும் வடகிழக்கில் திரிகுடா மலைத்தொடராலும் சூழப்பட்டுள்ளது. புது தில்லியில் இருந்து 600கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

பழைய நகரமானது வடக்கு பகுதியில் தாவி ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது. புதிய நகரம் தென்பகுதியில் தாவி ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. பழைய நகரையும் புதிய நகரையும் தாவி ஆற்றில் கட்டப்பட்டுள்ள 4 பாலங்கள் இணைக்கிறது. நகரின் உயரமான பகுதியில் உள்ள தோக்ரா அரண்மனை பழைய நகரை பார்த்தவாறு கட்டப்பட்டுள்ளது.

சொற்தோற்றம்தொகு

கிபி 1350 ல் சம்மு பகுதியை ஆண்ட ராசா சம்புலோச்சன் இந்த நகரை உருவாக்கி இதற்கு சம்முபுரா என்று வைத்த பெயர் சம்மு என்று பின்னால் மறுவி விட்டதாக கருதப்படுகிறது. உள்ளூர்க் கதைகளின் படி இங்குள்ள ஒரு குளத்தில் சிங்கமும் ஆடும் அருகருகே தண்ணீர் அருந்தியதாகவும் அதை பார்த்த ராசா சம்புலோச்சன் இப்பகுதியில் நகரை உருவாக்கினார்.[2]

வரலாறுதொகு

சம்மு நகரானது சம்மு பகுதியின் தலைநகரும் பிரித்தானியாவின் ஆளுகைக்குட்பட்ட சம்மு காசுமீர் அரசின் குளிர் கால தலைநகரும் ஆகும் (1846-1952).

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்மு_(நகர்)&oldid=1383963" இருந்து மீள்விக்கப்பட்டது