பாபர்

முதல் முகலாயப் பேரரசர்

பாபர் (Babur) எனப்படும் சாகிருதின் பாபர், அல்லது ஜலாலுதின் முகம்மத் பாபர் (பெப்ரவரி 14, 1483டிசம்பர் 26, 1530) மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஒரு முஸ்லிம் பேரரசர். இந்தியாவில் முகலாய வம்சத்தை உருவாக்கியவர் இவரே. இவர் 14ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவில் இருந்த தைமூரியப் பேரரசை உருவாக்கிய தைமூர் பின் தராகே பர்லாஸ் (Tīmūr bin Taraghay Barlas) என்பவருடைய நேரடியான பரம்பரையில் வந்தவராவார். 13ஆம் நூற்றாண்டில், உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய தொடர்ச்சியான பேரரசான மங்கோலியப் பேரரசை உருவாக்கிய கெங்கிஸ் கான் (Genghis Khan), பாபரின் தாய்வழி முன்னோராகக் கருதப்படுகின்றார். பல பின்னடைவுகளை எதிர்கொண்ட போதும், இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகின்ற முகலாயப் பேரரசை உருவாக்குவதில் இவர் வெற்றி பெற்றார்.

பாபர்
A portrait of Babur, from an early illustrated manuscript of the Baburnama
Fictional flag of the Mughal Empire.svg முதலாம் முகலாயப் பேரரசர்
ஆட்சிக்காலம் 30 ஏப்ரல் 1526 – 26 டிசம்பர் 1530
முன்னையவர் தைமூர்
பின்னையவர் நசிருதீன் உமாயூன்
வாழ்க்கைத் துணை * ஆயிஷா சுல்தான் பேகம்
வாரிசு
* நசிருதீன் உமாயூன், மகன்
முழுப்பெயர்
சாகிருதீன் முகம்மத் பாபர்
குடும்பம் தைமூர்
தந்தை ஓமர் ஷேக் மீர்சா
மரபு முகலாயப் பேரரசு
தாய் குத்லுக் நிகர் கானும்
பிறப்பு 23 பெப்ரவரி 1483
அன்டிசன், உசுபெக்கிசுத்தான்
இறப்பு 26 டிசம்பர் 1530 (அகவை 47)
ஆக்ரா, இந்தியா
அடக்கம் காபூல், ஆப்கானித்தான்
சமயம் சுன்னி இஸ்லாம்

பாபர் பல முறை திருமணம் செய்து கொண்டார். இவரது மகன்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஹுமாயூன், கம்ரான் மிர்சா மற்றும் ஹின்டால் மிர்சா ஆகியோர் ஆவர். பாபர் கி. பி. 1530 ஆக்ராவில் இறந்தார். பாபருக்கு பிறகு ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார். முதலில் பாபரின் உடல் ஆக்ராவில் புதைக்கப்பட்டது. பிறகு இவரது ஆசைப்படி இவரது உடல் காபூலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மீண்டும் புதைக்கப்பட்டது.[1] தந்தை வழியில் தைமூரின் வழி வந்ததால் அவர் தன்னை தைமூரிய மற்றும் சகடை துருக்கியராக கருதினார்.[2] உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் ஒரு தேசிய கதாநாயகனாக பாபர் பார்க்கப்படுகிறார். இவரது பெரும்பாலான பாடல்கள் அங்கு பிரபலமான நாட்டுப்புற பாடல்களாக உள்ளன. இவர் பாபர் நாமா எனும் நூலை சகாடை துருக்கிய மொழியில் எழுதினார். அக்பரின் காலத்தில் இந்நூல் பாரசீக மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது.

பின்னணிதொகு

தற்கால உஸ்பெகிஸ்தானில் உள்ள, பெர்கானாப் பள்ளத்தாக்கில் (Fergana Valley) உள்ள அண்டிஜான் (Andijan) என்னும் நகரத்தில் 1483 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பாபர் பிறந்தார். பெர்கானாப் பள்ளத்தாக்கை ஆண்டுவந்த ஓமர் ஷேக் மீர்சா (தைமூர் இனம்) என்பவருக்கும், அவரது மனைவியான குத்லுக் நிகர் கானும் (மங்கோலிய செங்கிசுக்கான் வழி) என்பவருக்கும் பாபர் மூத்த மகனாவார். இவர் மங்கோலிய மூலத்தைக் கொண்ட பார்லாஸ் என்னும் இனக்குழுவைச் சேந்தவர். எனினும், இந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள், துருக்கிய மற்றும் பாரசீகப் பண்பாட்டைத் தழுவிக்கொண்டு, இசுலாம் மார்க்கத்தைச் சார்ந்து, துருக்கிஸ்தான் என்னும் பகுதியில் வாழ்ந்து வந்தனர். பாபரின் தாய் மொழி சகாட்டை (Chaghatai) என்பதாகும், ஆனாலும் அவர் பாரசீக மொழியையும் சரளமாகப் பயன்படுத்த வல்லவராக இருந்தார். இவர் தன்னை துருக்கியர் என்றே சொல்லிக் கொண்டார்.

கன்னிப்போரும் அதன் பிண்ணனியும்தொகு

இவர் முதலில் பெர்கானா என்னும் சமவெளியில் உள்ள நாட்டையே ஆண்டு வந்தார். இவரது முன்னோர்கள் ஆண்டு வந்த சமர்கந்து பகுதியை மீண்டும் பிடிக்க வேண்டும் என எண்ணினார். ஆனால் தன்னுடைய பெர்கானாப் பள்ளத்தாக்கையும் இழந்ததால் இந்துகுஷ் மலையை தாண்டி வந்து காபூலைப் பிடித்து ஒரு சிற்றச ஆட்சியை நிறுவினார். பிற்பாடு கஜினியும், காந்தகாரும் இவருக்கு கீழே வந்தன. இவரது முன்னோர் காலத்தில் தைமூர்களின் கீழ் பஞ்சாப் பகுதி இருந்தது. அதனால் அதை திருப்பிக் கொடுக்கும் படி தில்லி சுல்தானான இப்ராகிம் லோடியை பாபர் வேண்டினார். அதற்கு தில்லி சுல்தான் மறுத்தார். சுல்தானின் உறவினரான அல்லாவுதீன், தில்லி சுல்தானை எதிர்க்க பாபர் உதவினால் அவரை அந்நாட்டுக்கே அரசர் ஆக்க உதவுகிறேன் என்றார். பஞ்சாப் ஆளுநர் தௌலத்கானும் தில்லி சுல்தானை எதிர்க்க பாபரின் உதவியை நாடினார். அதனால் இருவரையும் சேர்த்துக் கொண்டு 1526ல் பானிப்பட்டில் ஒரு இலட்சம் வீரர்களைக் கொண்ட தில்லி சுல்தானின் சேனையை வென்றார். இந்த வெற்றிக்கு இரண்டு முக்கியக் காரணங்களாக பாபரின் பீரங்கிப்படையின் பலமும், தில்லி சுல்தானின் அரசியல் அனுபவமின்மையும் போர் பயிற்சியின்மையுமே ஆகும்.

பிற வெற்றிகள்தொகு

பானிப்பட் போரில் பாபர் வென்றாலும் மற்ற இந்தியப் பகுதிகளான பீகாரும் வங்கமும் ஆப்கானியர் கீழ் இருந்தன. குஜராத்தும், மாளவமும் சுதந்திர அரசுகளாக இராசபுத்திரர்களின் கீழ் இருந்தன. இராசபுத்திரர்களும் முகலாய அரசரான பாபரை எதிர்க்க தருணம் பார்த்திருந்தனர். இராசபுத்திரர்களின் தலைவரான இராணா என்ற சங்கருக்கும் பாபருக்கும் காண்வா என்னும் இடத்தில் 1527ல் பெரும்போர் நடந்தது. அதில் இராசபுத்திரர் தோற்றோடினர். மாளவத்தில் உள்ள சந்தெரி என்ற வழுவான கோட்டை 1528ல் பாபரின் கீழ் வந்தது.

பழைய பகைதொகு

தில்லு சுல்தானான இப்ராகிம் லோடியின் இளைய சகோதரர் முகமது லோடி ஆப்கானியரோடு சேர்ந்து கொண்டு பீகார் பகுதிகளில் கலகம் செய்தார். இவர்களை கோக்காரா என்னும் நதிக்கரையில் 1529ல் பாபர் தோற்கடித்தார். பின்னர் வங்காள அரசருடன் நட்புறவு கொண்டதால் பீகார் பகுதி பாபருக்கு வங்காள அரசரால் தரப்பட்டது.

முகலாயப் பேரரசை தோற்றுவித்தல்தொகு

பாபர் உஸ்பெக்குகளிடம் இருந்து தப்பிக்க நினைத்தார். காபூலுக்கு வடக்கே இருந்த படாக்ஷானை தவிர்த்து இந்தியாவில் தஞ்சம் அடைய நினைத்தார். அதை பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "இவ்வளவு பெரிய சக்திக்கு முன்னால் நாம் நமக்கென ஒரு இடத்தை பற்றி நினைக்கவேண்டும். இந்த கடினமான சூழ்நிலையில் நமக்கும் நம்முடைய வலிமையான எதிரிகளுக்கும் இடையில் இடைவெளி இருக்க வேண்டும்."[3] சமர்கண்ட்டை இழந்தபிறகு வட இந்தியாவை வெல்வதற்கான பணியில் தனது முழு கவனத்தை பாபர் செலுத்தினார்; கி. பி. 1519 இல் தற்போதைய பாகிஸ்தானில் உள்ள செனாப் ஆற்றை அடைந்தார்.[4] 1524 வரை அவரது குறிக்கோள் பஞ்சாப் வரை தனது ஆட்சியை நீட்டிப்பதாக மட்டுமே இருந்தது. ஏனெனில் தனது முன்னோர் தைமூரின் மரபை பின்பற்ற தைமூரிய பேரரசின் ஒரு பகுதியாக இருந்த அதை ஆள நினைத்தார்.[3] அந்நேரத்தில் வட இந்தியாவின் பகுதிகள் லோடி அரச மரபின் இப்ராஹிம் லோடியின் ஆட்சியின் கீழ் இருந்தன. ஆனால் அந்த அரசு சிதைந்து கொண்டிருந்தது. பலர் பேரரசில் இருந்து விலக ஆரம்பித்து இருந்தனர். பஞ்சாபின் கவர்னரான தவுலத் கான் லோடி மற்றும் இப்ராஹிமின் உறவினரான அலாவுதீன் ஆகியோரிடமிருந்து பாபருக்கு அழைப்புகள் வந்தன.[5] இப்ராஹிம் லோடிக்கு ஒரு தூதுவரை பாபர் அனுப்பினார். தான்தான் அரியணைக்கு உண்மையான வாரிசு என்று கூறினார். ஆனால் அந்த தூதுவர் லாகூரில் கைது செய்யப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.[4]

1524 இல் பாபர் பஞ்சாபின் லாகூருக்கு தனது பயணத்தைத் தொடங்கினார். ஆனால் இப்ராகிம் லோடியால் அனுப்பப்பட்ட படையானது தவுலத் கான் லோடியை விரட்டி இருந்தது.[6] பாபர் லாகூரை அடைந்தபோது லோடி இராணுவமானது லாகூரை விட்டு வெளியேறி இருந்தது. லாகூரை கடந்த பாபர் திபல்பூருக்கு பயணித்தார். இப்ராஹிம் லோடியின் மற்றொரு கிளர்ச்சியாளரான ஆலம் கானை ஆளுநராக நியமித்தார்.[7] ஆலம் கானும் சீக்கிரமே பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டு காபூலுக்கு தப்பினார். இதற்குப் பதிலாக ஆலம் கானுக்கு பாபர் துருப்புகளை கொடுத்தார். தவுலத் கான் லோடியுடன் இணைந்த ஆலம் கான் 30,000 துருப்புகளுடன் இப்ராஹிம் லோடியின் தில்லியை முற்றுகையிட்டார்.[8] இப்ராஹிம் லோடி ஆலம் கானின் இராணுவத்தை எளிதாக தோற்கடித்து விரட்டினார். தான் பஞ்சாபை ஆக்கிரமிப்பதை லோடி அனுமதிக்க மாட்டார் என்பதை பாபர் உணர்ந்தார்.[8]

ஆட்சிக்காலங்கள்தொகு

இவர் ஐந்து ஆண்டுகள் மட்டுமே இந்தியாவில் ஆட்சி செய்ததால் மக்கள் நலத்திட்டங்களை பெரியளவில் செய்யவில்லை. இவர் கல்வியிலும் இசையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தன்னுடைய வரலாற்றை துருக்கி மொழியிலேயே எழுதி நூலாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் ஆட்சிக் காலத்திலேயே நீதித்துறை செயல்பட்டு குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் ஆரம்பித்தன. இவர் கோக்காரா போருக்குப் பின் எந்த போரிலும் ஈடுபடவில்லை.

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

அக்பரின் ஆட்சி காலத்தின் போது மொழிபெயர்க்கப்பட்ட பாபர்நாமா நூலில் உள்ள ஓவியங்களை தவிர பாபரின் உருவ அமைப்பு பற்றிய குறிப்புகள் கிடையாது.[9] தனது சுயசரிதையில் பாபர் தான் வலிமையாக உடலளவில் நேர்த்தியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் கண்ட அனைத்து முக்கிய நதிகளையும் நீந்தி கடந்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதில் வட இந்தியாவில் உள்ள கங்கை ஆற்றை இரண்டு முறை நீந்திக்கடந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.[10]

 
பாபர் சிந்து ஆற்றை நீந்தி கடத்தல்

அமைதியான சூழ்நிலை நிலவிய காலமான காபூலில் ஆட்சி செய்த காலத்தில் பாபர் இலக்கியம், ஓவியம், இசை மற்றும் தோட்டக்கலை ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.[3]

மறைவுதொகு

இவர் தன் இறுதிக்காலங்களில் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். இதை பயன்படுத்திக் கொண்ட பாபரின் தங்கையின் கணவரான மாது காஜ்வா தன்னை அரசராக்கி கொள்ளலாம் என நினைத்திருந்தார். ஆனால் பாபரின் மகனான ஹூமாயூனால் இது தடைப்பட்டது. இவரின் ஆட்சிக்குப்பின் இவரது மகனான ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார். இவருடைய ஆட்சியில் இந்தியாவை இழந்து மீண்டும் போரிட்டுப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாபர் மசூதிதொகு

பாபர் தான் கட்டிய பாபர் மசூதியின் மூலம் அதிகம் அறியப்படுகிறார். இம்மசூதியை இராமர் கோயிலை இடித்து அதற்கு மேல் கட்டியதாக கூறப்படுகிறது. இம்மசூதியில் உள்ள மூன்று கல்வெட்டுகள் பாபரின் தளபதியான மிர் பாகியால் கட்டப்பட்டதாக கூறுகின்றன. இப்பகுதியில் அகழாய்வு மேற்கொண்ட இந்திய தொல்லியல் அறிக்கைக் குழு இங்கு கோயில் ஏதும் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் இல்லை என்றும் ஆனால் சைவ சமயத்தை சேர்ந்த கட்டிட எச்சங்கள் காணப்படுகிறன என்றும் தன் ஆய்வறிக்கையில் தெரிவித்து உள்ளது.

மூலம்தொகு

 • இராசகணபதி (2008). கஜினி முதல் சிவாஜி வரை. தியாகராஜ நகர், சென்னை.: பாண்டியன் பாசறை. 

இவற்றையும் பார்க்கவும்தொகு

வெளியிணைப்புகள்தொகு

 1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Necipoğlu என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 2. Richards, John F. (1995), The Mughal Empire, Cambridge University Press, p. 6, ISBN 978-0-521-56603-2
 3. 3.0 3.1 3.2 Eraly 2007, பக். 27–29.
 4. 4.0 4.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; VDM0 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 5. Chaurasia, Radhey Shyam (2002). History of medieval India : from 1000 A.D. to 1707 A.D.. New Delhi: Atlantic Publ.. பக். 89–90. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-269-0123-3. https://books.google.com/books?id=8XnaL7zPXPUC&lpg=PA89&ots=mlw-HxSFcx&dq=babur%20receiving%20invitations%20from%20Daulat%20Khan%20Lodi&pg=PA89#v=onepage&q&f=false. 
 6. Satish Chandra, Medieval India:From Sultanat to the Mughals, Vol. 2, (Har-Anand, 2009), 27.
 7. (Chandra 2009, pp. 27–8)
 8. 8.0 8.1 (Chandra 2009, p. 28)
 9. Eraly 2007, பக். 21–23.
 10. Elliot, Henry Miers (1867–1877). "The Muhammadan Period". The History of India, as Told by Its Own Historians. John Dowson (ed.). London: Trubner. http://persian.packhum.org/persian//pf?file=80201014&ct=56. பார்த்த நாள்: 2 April 2008. "... and on the same journey, he swam twice across the Ganges, as he said he had done with every other river he had met with." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபர்&oldid=3071283" இருந்து மீள்விக்கப்பட்டது