உதய்பூர் இராச்சியம்
உதய்பூர் இராச்சியம் அலலது மேவார் இராச்சியம் (Udaipur State or Mewar Kingdom), தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த மேவார் பிரதேசத்தை கி பி 730 முதல் சித்தோர்கார் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு நிறுவப்பட்டது. பின்னர் உதய்பூர் நகரத்தை புதிய தலைநகராகக் கொண்டு இயங்கியது. உதய்பூர் இராச்சிய மன்னர்கள் தங்களின் முதல் தலைநகரமான நக்டாவில் சகஸ்ரபாகு கோயில்கள் கட்டினர்.
உதய்பூர் அரசு மேவார் இராச்சியம் உதய்பூர் இராச்சியம்उदयपुर रियासत | ||||||
சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
பிரித்தானிய இந்தியாவில் உதய்பூர் இராச்சியத்தின் வரைபடம் | ||||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 730 | ||||
• | இந்திய விடுதலை | 1949 | ||||
பரப்பு | ||||||
• | 1941 | 33,517 km2 (12,941 sq mi) | ||||
Population | ||||||
• | 1941 | 65,00,000 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | 193.9 /km2 (502.3 /sq mi) | |||||
தற்காலத்தில் அங்கம் | இராஜஸ்தான், இந்தியா | |||||
"Udaipur State (also called Mewar): History". The Imperial Gazetteer of India. 1909. pp. v. 24, p. 87. |
உதய்பூர் இராச்சியம் 18-19-ஆம் நூற்றாண்டுகளில் பிரித்தானிய இந்திய அரசின் கீழ் இயங்கிய சமஸ்தானம் ஆகும். இந்திய விடுதலைக்குப் பின்னர் 6 ஏப்ரல் 1949-இல் மேவார் இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. [1]
மேவார் இராச்சியத்தை இராசபுத்திர குல கலோத் மற்றும் சிசோதிய வம்சத்தினர் கிபி 730 முதல் 1949 முடிய 1,400 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டனர்.
வரலாறுதொகு
|
|
|
மராத்தியப் பேரரசிற்கு எதிராக நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் உதய்பூர் இராச்சியப் படைகள், பிரித்தானியக் கம்பெனி படைகளுக்கு ஆதரவாக போரிட்டனர். பின்னர் உதய்பூர் இராச்சியம் 31 சனவரி 1818 முதல் துணைப்படைத் திட்டத்தின் கீழ் ஆங்கிலேயருக்கு அடங்கிய சுதேச சமஸ்தானமாக செயல்பட்டது. பிரித்தானிய அதிகார வர்க்கம், மேவார் இராச்சிய மன்னர்களுக்கு, 19 பீரங்கி குண்டுகள் முழங்கி மரியாதை செய்தது.[4]உதய்பூர் இராச்சியத்தின் இறுதி மன்னர் பூபால சிங், உதய்பூர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் 7 ஏப்ரல் 1949 அன்று கையொப்பமிட்டார். பின்னர் உதய்பூர் இராச்சியம் இந்தியாவுடன் இணைந்தது. [5]
மேவாரின் கலோத் வம்சம்தொகு
கோசலத்திலிருந்து கி பி இரண்டாம் நூற்றாண்டில் சௌராட்டிர நாட்டில் குடிபெயர்ந்த கனக்சென் என்ற சத்திரியரின் வழித்தோன்றல்களான கலோத்திய வம்சத்தினர் தங்களை வல்லபியின் ஆட்சியாளர்கள் என அழைத்துக் கொண்டனர். பின்னர் இராஜஸ்தானின் இதர் பகுதியைக் கைப்பற்றி ஆண்டனர்.
கி பி 7-ஆம் நூற்றாண்டில் கலோத்திய வம்ச மன்னர்கள், கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு, இராசபுத்திர குல சௌகான்களுடன் இணைந்து இசுலாமிய படையெடுப்புகளை எதிர்த்துப் போரிட்டனர்.
கி பி 12-ஆம் நூற்றாண்டில் இதர் நகரை விட்டு அகன்ற கலோத்திய வம்ச மன்னர் முதலாம் கரன்சிங்கின் மூத்த மகன் துங்கர்பூரிலும், இளையமகன் சிசோதியாவிலும் தங்கள் ஆட்சியை நிறுவினர். [6]
இதரின் கலோத்திய ஆட்சியாளர்கள்தொகு
பெயர்[6] | ஆட்சி துவக்கம் | ஆட்சி முடிவு | |
---|---|---|---|
1 | கிரகாத்தியா | 566 | 586 |
2 | போஜ கலோ | 586 | 606 |
3 | முதலாம் மகேந்திரன் | 606 | 626 |
- இவ்வம்சத்தினர் நக்டா எனுமிடத்தில் புதிய தலைநகரை நிறுவினர்.
நக்டாவின் கலோத்திய ஆட்சியாளர்கள்தொகு
பெயர் [6] | ஆட்சி துவக்கம் | ஆட்சி முடிவு | |
---|---|---|---|
1 | நாகாத்தியன் | 626 | 646 |
2 | சிலாதித்தியன் | 646 | 661 |
3 | அபராஜிதன் | 661 | 688 |
4 | இரண்டாம் மகேந்திரன் | 688 | 734 |
- "மோரி வம்ச மால்வாவின் இறுதி மன்னர், மூன் சிங் மோரி இரண்டாம் மகேந்திரனை கொன்றார். மோரியின் மைத்துனன் மேவாரைக் கைப்பற்றினார்.
- இரண்டாம் மகேந்திரனின் மகன் "பப்பா ராவல் என்ற கல்போஜன் தனது கூட்டாளிகளுடன் சித்தோர்காரில் புதிய நகரை நிறுவி ஆண்டான். [6]
சித்தோர்காரின் கலோத் ஆட்சியாளர்கள்தொகு
பெயர்[6] | ஆட்சி துவக்கம் | ஆட்சி முடிவு | |
---|---|---|---|
1 | பப்பா ராவல் | 734 | 753 |
2 | முதலாம் குமான் | 753 | 773 |
3 | மத்தாட் | 773 | 793 |
4 | முதலாம் பாத்திரிபட் | 793 | 813 |
5 | கலோத்தின் சிங்கன் | 813 | 828 |
6 | இரண்டாம் குமான் | 828 | 853 |
7 | மகாயுகன் | 853 | 878 |
8 | மூன்றாம் குமான் | 878 | 942 |
9 | இரண்டாம் பாத்திரிபட் | 942 | 943 |
10 | அல்லாத் சிங் - பரமாரப் பேரரசின் இரண்டாம் சியாகா, சித்தோர்கார் நகரத்தை கைப்பற்றியதால், கலோத்தியர்கள் அஹார் பகுதியில் தங்கள் ஆட்சியை நிறுவினர். | 951 | 953 |
அஹாரின் கலோத்திய ஆட்சியாளர்கள்தொகு
பெயர்[6] | ஆட்சி துவக்கம் | ஆட்சி முடிவு | |
---|---|---|---|
1 | நரவாகனன் | 971 | 973 |
2 | சல்லிவாகனன் | 973 | 977 |
3 | சக்தி குமார் | 977 | 993 |
4 | அம்பா பிரசாத் | 993 | 1007 |
5 | சுசி வர்மா | 1007 | 1021 |
6 | நரவர்மன் | 1021 | 1035 |
7 | கீர்த்திவர்மன் | 1035 | 1051 |
8 | யோகராஜன் | 1051 | 1068 |
9 | வைரதன் | 1068 | 1088 |
10 | முதலாம் ஹன்ஸ்பால் | 1088 | 1103 |
11 | பயர் சிங் | 1103 | 1107 |
12 | விஜய் சிங் | 1107 | 1127 |
13 | முதலாம் அரி சிங் | 1127 | 1138 |
14 | Chaudh Singh | 1138 | 1148 |
15 | விக்கிரம் சிங் | 1148 | 1158 |
16 | முதலாம் கரன் சிங் | 1158 | 1168 |
17 | சேம் சிங் | 1168 | 1172 |
- இசுலாமிய படையெடுப்புகளால் சேம் சிங் வலுக்கட்டாயமாக தலைநகரை துங்கர்பூருக்கு மாற்றினார்.[6]
துங்கர்பூரின் கலோத்திய ஆட்சியாளர்கள்தொகு
பெயர் [6] | ஆட்சி துவக்கம் | ஆட்சி முடிவு | |
---|---|---|---|
1 | சமந்து சிங் | 1172 | 1179 |
2 | குமார் சிங் | 1179 | 1191 |
3 | மந்தன் சிங் - பிருத்திவிராச் சௌகானுடன் இணைந்து கோரி முகமதுவிற்கு எதிராகப் போரிட்டவர். | 1191 | 1211 |
4 | பத்ம சிங் – இவரது வாரிசுகள் நக்டாவில் புதிய அரசை அமைத்தனர். | 1211 | 1213 |
நக்டாவின் கலோத்திய ஆட்சியாளர்கள்தொகு
Name[6] | ஆட்சி துவக்கம் | ஆட்சி முடிவு | |
---|---|---|---|
1 | ஜெயத்திர சிங் - மால்வாவை தில்லி சுல்தான் சம்சுத்தீன் இல்த்துத்மிசு கைப்பற்றிய பின்னர், ஜெயத்திர சிங் சித்தோர்காரை மீட்டார். | 1213 | 1253 |
சித்தூரின் கலோத்திய ஆட்சியாளர்கள்தொகு
பெயர்[6] | ஆட்சி துவக்கம் | ஆட்சி முடிவு | |
---|---|---|---|
1 | ஜெயத்திர சிங் | 1213 | 1253 |
எட்டு ஆண்டுகள் மேவார் ஆட்சியாளர்கள் இல்லாத காலம் | 1253 | 1262 | |
2 | தேஜ் சிங் | 1262 | 1273 |
3 | சமர் சிங் | 1273 | 1302 |
4 | முதலாம் ராவல் இரத்தன் சிங் – தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி சித்தோர்கார் கோட்டை மற்றும் மேவாரைக் கைப்பற்றல். மற்றும் | 1302 | 1303 |
- "ஒழுங்கான அரசனில்லாக் காலம் - அலாவுதீன் கில்ஜியின் கீழ் சஞ்சோர் ஆட்சியாளர்கள் சித்தூரை ஆண்டனர். (1303–1326)"
- "கலோத்திய வம்சத்தின் ரகூப் என்பவர் நிறுவிய சிசோதியா வம்சத்தினர் மேவாரை ஆண்டனர்."[6]
மேவாரின் சிசோதியா வம்ச ஆட்சியாளர்கள்தொகு
பெயர்[6] | ஆட்சி துவக்கம் | ஆட்சி முடிவு | |
---|---|---|---|
1 | மகாராணா முதலாம் ஹமீர் சிங் - மேவாரின் மகாராணா பட்டத்தை முதலில் பெற்றவர் | 1326 | 1364 |
2 | மகாராணா கேத்தா - அஜ்மீர் மற்றும் மண்டல்கர் பகுதிகளை கைப்பற்றினார். | 1364 | 1382 |
3 | மகாராணா லக்கா - மேவாரின் தில்லிப் பகுதிகளை போரில் திரும்பப் பெற்றார். | 1382 | 1421 |
4 | மகாராணா மொக்கல் – 24 வயதில் கொலை செய்யப்பட்டார். இவரது மூத்த சகோதரன் சுந்தன் மேவாரின் மன்னரானார். | 1421 | 1433 |
5 | மகாராணா கும்பா | 1433 | 1468 |
6 | மகாராணா முதலாம் உதய் சிங் | 1468 | 1473 |
7 | மகாராணா இராய் மால் | 1473 | 1509 |
8 | பாபரிடம்]] கண்வாப் போரில் தோற்றார். பின்னர் மீண்டும் பாபரை வென்று மேவாரை மீட்டார். | 1509 | 1528 |
9 | மகாராணா இரண்டாம் இரத்தன் சிங் | 1528 | 1531 |
10 | மகாராணா விக்கிரமாதித்தியா சிங் | 1531 | 1537 |
11 | மகாராணா வன்வீர் சிங் | 1537 | 1540 |
12 | மகாராணா இரண்டாம் உதய்சிங் – சித்தோர்கார் கோட்டையை 25 பிப்ரவரி 1568-இல் போரில் அக்பரிடம் இழந்தார். எனவே உதய்பூரை புதிய தலைநகராகக் கொண்டார். | 1540 | 1568 |
உதய்பூர் சிசோதியா இராசபுத்திர ஆட்சியாளர்கள்தொகு
பெயர்[6] | ஆட்சி துவக்கம் | ஆட்சி முடிவு | |
---|---|---|---|
1 | மகாராணா இரண்டாம் உதய்சிங் | 1568 | 1572 |
2 | மகாராணா பிரதாப் | 1572 | 1597 |
3 | மகாராணா முதலாம் அமர் சிங் | 1597 | 1620 |
4 | மகாராணா இரண்டாம் கரண்சிங் | 1620 | 1628 |
5 | மகாராணா முதலாம் ஜெகத் சிங் | 1628 | 1652 |
6 | மகாராணா முதலாம் இராஜ் சிங் | 1652 | 1680 |
7 | மகாராணா ஜெய் சிங் | 1680 | 1698 |
8 | மகாரானா இரண்டாம் அமர் சிங் | 1698 | 1710 |
9 | மகாராணா இரண்டாம் சங்காராம் சிங் | 1710 | 1734 |
10 | மகாராணா இரண்டாம் ஜெகத் சிங் | 1734 | 1751 |
11 | மகாராணா இரண்டாம் பிரதாப் சிங் | 1751 | 1754 |
12 | மகாராணா இரண்டாம் இராஜ் சிங் | 1754 | 1761 |
13 | மகாராணா இரண்டாம் அரி சிங் | 1761 | 1773 |
14 | மகாராணா இரண்டாம் ஹமீர் சிங் | 1773 | 1778 |
15 | மகாராணா பீம் சிங் | 1778 | 1828 |
16 | மகாராணா ஜவான் சிங் | 1828 | 1838 |
17 | 1838 | 1842 | |
18 | மகாராணா சொரூப் சிங் | 1842 | 1861 |
19 | மகாராணா சாம்பு சிங் | 1861 | 1874 |
20 | மகாராணா சஜ்ஜன் சிங் | 1874 | 1884 |
21 | மகாராணா பதே சிங் | 1884 | 1930 |
22 | மகாராணா பூபால் சிங் | 1930 | 1956 |
இதனையும் காண்கதொகு
மேலும் படிக்கதொகு
- The Kingdom of Mewar: great struggles and glory of the world's oldest ruling dynasty, by Irmgard Meininger. D.K. Printworld, 2000. ISBN 81-246-0144-5.
- Costumes of the rulers of Mewar: with patterns and construction techniques, by Pushpa Rani Mathur. Abhinav Publications, 1994. ISBN 81-7017-293-4.
மேற்கோள்கள்தொகு
- ↑ Princely States of India
- ↑ Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 116–117. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4.
- ↑ John Merci, Kim Smith; James Leuck (1922). "Muslim conquest and the Rajputs". The Medieval History of India pg 67-115
- ↑ Udaipur (Mewar) Princely State (19 gun salute) பரணிடப்பட்டது 2016-12-27 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Princely States of India
- ↑ 6.00 6.01 6.02 6.03 6.04 6.05 6.06 6.07 6.08 6.09 6.10 6.11 6.12 The Rajputs of Rajputana: a glimpse of medieval Rajasthan by M. S. Naravane ISBN 81-7648-118-1