சௌகான் (Chauhan), வட இந்திய இராஜபுத்திர அரச குலங்களில் ஒன்றாகும். சௌகான் அரச குலத்தை நிறுவியவர் மாணிக் ராய் ஆவார். சௌகான் அரச குலத்தினருள் புகழ் பெற்றவர் தில்லியை தலைநகராகக் கொண்டு, மேற்கு மற்றும் மத்திய இந்தியாவை ஆண்ட மன்னர் முதலாம் பிருத்திவிராச் சௌகான் ஆவார்.

பிருத்திவிராச் சௌகான்

வரலாறு

தொகு

சௌகான் குலத்தினர், இராஜஸ்தான் பகுதிகளில் வாழ்ந்த வரலாற்று புகழ் மிக்க சக்தி வாய்ந்தவர்கள் ஆவார். கி பி 7ஆம் நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகள் வரை மேற்கு இந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் பெரும் பகுதிகளை ஆண்டவர்கள். [1]

சௌகான் அரச குல மன்னர் பிரிதிவிராச் சௌகான், 1192இல் இரண்டாம் தாரைன் போரில் கோரி முகமதுவால் வெல்லப்பட்டார். பின்னர் கி பி 1192இல் குத்புதீன் ஐய்பெக்கின் படையெடுப்பால், சௌகான் அரச குலம் இரண்டாக பிளவுபட்டது. [2]

புகழ் பெற்ற சௌகான் குல அரச மன்னர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Gupta & Bakshi 2008, ப. 95.
  2. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
  3. Hāṇḍā, Omacanda (2004). Naga Cults and Traditions in the Western Himalaya. New Delhi: Indus Publishing. p. 330. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-17387-161-0. பார்க்கப்பட்ட நாள் 17 October 2012.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌகான்&oldid=4057429" இலிருந்து மீள்விக்கப்பட்டது