பாபர் நாமா
பாபர் நாமா (Baburnama) என்பது முகலாய மன்னர் பாபரின் வாழ்க்கைக் குறிப்புப் புத்தகம் ஆகும். இது சகாடை மொழியில் எழுதப்பட்டது. இந்நூலுக்கு "பாபரின் புத்தகம்" அல்லது "பாபரின் கடிதங்கள்" என்றும் பொருளுண்டு. இந்நூல் பாபரின் நினைவிலிருந்து எழுதப்பட்டது. பாபரின் காலம் பொதுவருடம் 1483 லிருந்து 1530 வரை. இந்நூலுக்கு பாபர் அதிக கவனமும் சிரத்தையும் எடுத்துக் கொண்டார். வார்த்தை மற்றும் வாக்கிய அமைப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தினார்.[1] பாரசீக மொழியில் ஆங்காங்கே சில கவிதைகளும் இப்புதகத்தில் இடம் பெறுகின்றன. பாபரின் பேரன் அக்பர் காலகட்டத்தில் இப்புத்தகம் அதன் மூல மொழியிலிருந்து பாரசீக மொழியில் முழுவதும் மொழிபெயர்க்கப்பட்டது. அப்துல் ரகீம் என்பவர் பொது வருடம் 1589 மற்றும் 1590- ஆம் ஆண்டுகளில் இதை மொழிபெயர்த்தார்.[2]
நூலைப்பற்றி
தொகுஇதை பாபரின் வாழ்க்கை வரலாறு எனும் அளவில் மட்டும் சுருக்கிவிட முடியாது. இயற்கை, சமூகம், அரசியல், பொருளாதாரம், வரலாறு, புவியியல் மற்றும் அவரோடு தொடர்புடையவர்கள் ஆகியவற்றைப் பற்றிய பாபரின் நினைவுகள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன.
பாபர் நாமாவானது,
899 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் எனது 12 வது வயதில் நான் "பர்கானா" நாட்டின் ஆட்சியாளரானேன்.[3]
என்ற வாக்கியத்தோடு தொடங்குகிறது. இந்நூலில் 1508 லிருந்து 1519 வரையிலான பகுதிகள் இல்லை.
தமிழில்
தொகுஇந்நூலானது தமிழிலும் பாபர் நாமா எனும் பெயரிலேயே வெளியாகியுள்ளது. ஆர்.பி. சாரதி இந்நூலை மொழி பெயர்த்துள்ளார். மதி நிலையம் வெளியிட்டுள்ள இப்புத்தகம் 623 பக்கங்கள் கொண்டது. இத்தமிழ் மொழி பெயர்ப்பானது 2012 ஆம் ஆண்டு வெளியானது.
புத்தகத்திலிருந்து
தொகுபுத்தகத்திலிருந்து சில ஓவியங்கள்,
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dale, Stephen Frederic (2004). The garden of the eight paradises: Bābur and the culture of Empire in Central Asia, Afghanistan and India (1483–1530). Brill. pp. 15, 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-13707-6.
- ↑ "Biography of Abdur Rahim Khankhana". பார்க்கப்பட்ட நாள் 2006-10-28.
- ↑ In the month of Ramadan of the year 899 and in the twelfth year of my age, I became ruler in the country of Farghana English translation