பாபர் நாமா (தமிழ்)

பாபர் நாமா என்பது ஆர். பி. சாரதியால் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்பட்ட முகலாய மன்னர் பாபரின் வாழ்க்கைக் குறிப்புப் புத்தகம் ஆகும். இதன் மூல நூல் முதலில் துருக்கிய மொழிகளுள் ஒன்றான சகாடை மொழியில் எழுதப்பட்டுப் (பாபர் நாமா) பின்னர் பாரசீக மொழியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. ஆங்கில வழித் தமிழாக்கமாக இந்நூல் அமைகிறது. முகலாய மன்னர் பாபரின் வாழ்க்கைக் குறிப்புப் புத்தகம் ஆகும். கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவரான இந்நூலாசிரியர் எழுத்தாளர் பா. ராகவனின் தந்தை என்பதும் இதனை அவர் தனது 77 அகவையில் மொழிபெயர்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது[1].

பாபர் நாமா
Babar Nama.jpg
நூலாசிரியர்ஆர். பி. சாரதி
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைவரலாற்று நூல்
வெளியீட்டாளர்மதிநிலையம்
வெளியிடப்பட்ட திகதி
2012
பக்கங்கள்623
முன்னைய நூல்ராமச்சந்திர குஹாவின் ’India after Gandhi’ இன் தமிழ் மொழிபெயர்ப்பு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபர்_நாமா_(தமிழ்)&oldid=1780409" இருந்து மீள்விக்கப்பட்டது