பீரங்கி
பாரிய வெடிகுண்டுகளை உந்தும் அல்லது செலுத்தும் ஆயுதம் பீரங்கி ஆகும். பீரங்கியால் செலுத்தப்படும் உந்துகணை பீரங்கியால் வழங்கப்படும் தொடக்க உந்து விசையை வைத்து இயற்பியல் விதிகளுக்கு இணங்கி சென்று விழுந்து வெடிக்கும். பீரங்கி ஒரு இராணுவத்துக்கு சூட்டு வலுவைத் தந்து, பாரிய இலக்குகளை அழிக்க பயன்படுகின்றது. பீரங்கிகளின் ஆரம்பகால சித்தரிப்பு 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சாங் வம்ச சீனாவில் தோன்றியது; இருப்பினும், 13-ஆம் நூற்றாண்டுவரை பீரங்கிகள் இருந்ததற்கான ஆவணப்பட, தொல் பொருள் சான்றுகள் கிடைக்கவில்லை. [1]

பீரங்கிகள் கி. பி. 1000 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆயுதம் ஆகும்.