கைபர் கணவாய்

கைபர் கணவாய் (Khyber Pass) 1,070 மீ அல்லது 3,510 அடி உயரத்தில் ஸ்பின் கர் மலைகளின் வடகிழக்குப் பகுதி வழியாக ஆப்கானிஸ்தான் பாக்கித்தான் ஆகிய இரு நாடுகளையும் இணைக்கும் ஒரு மலைவழிக் கணவாய் ஆகும். இந்து குஷ் மலைத்தொடரில் அமைந்துள்ள இது உலகின் பழமையான சாலைகளில் ஒன்றாகும். வரலாறு முழுவதும் கைபர் கணவாய்க்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. ஒருங்கிணைந்த பண்டைய பட்டுச் சாலை அதன் பாதையில் கைபர் கணவாயையும் கொண்டதாகும். மேலும் மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கு மத்தியில் கைபர் கணவாய் ஒரு முக்கியமான வர்த்தக பாதையாக பயன்படுத்தப்பட்டது. இந்த இடம் ஒரு முக்கியமான இராணுவத்தளமாகவும் திகழ்ந்து வருகிறது. கணவாயின் சிகரம் பாகிஸ்தான் உள்ளே 5 கிலோமீட்டர் (3.1 மைல்)வரையில் 'லண்டி கொட்டல்' என்னும் இடம் வரை அமைந்து உள்ளது. தற்காலத்தில் கைபர் கணவாயை கடக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று பண்டைய பட்டுப்பாதை என்னும் வணிகர்களின் பழங்காலச் சாலை. இன்னொன்று மகிழுந்து பாரவுந்து போன்றவை செல்லும் நவீனச் சாலை. இது மட்டுமல்லாமல் கைபர் கணவாயில் உள்ள லண்டிகோத்வால் என்ற இடத்தில் இருந்து பெசாவருக்கு செல்ல தொடருந்து பாதையும் உள்ளது.

கைபர் கணவாய்
கைபர் கணவாய்
ஏற்றம்1,070 மீ (3,510 அடி)
அமைவிடம்ஆப்கானிஸ்தான்/பாகிஸ்தான்
மலைத் தொடர்ஸ்பின் கர்
ஆள்கூறுகள்34°05′35″N 71°08′38″E / 34.093°N 71.144°E / 34.093; 71.144

பழங்காலத்தில் கைபரைக் கடந்து செல்ல ஒரே பாதைதான் இருந்தது. அந்தப்பாதை மலையை குடைந்து செல்லும் குறுகிய பாதையாக கடக்க சிரமமானதாக இருந்தது. கைபர் கணவாய் பகுதியில் வசித்த பூர்வகுடிகள் பதான்கள் ஆவர். பண்டைய சீனவாவில் இருந்து வணிகர்கள் இந்திய துணைகண்டத்துக்கு வந்தவர்கள் இந்த கணவாய் வழியாகவே வந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைபர்_கணவாய்&oldid=3604817" இருந்து மீள்விக்கப்பட்டது