பைராம் கான்

பைராம் கான் (Bairam Khan) (பாரசீக மொழி: بيرام خان‎) (இறப்பு: 1561) உமாயூன் மற்றும் அக்பர் தலைமையிலான முகலாயப் பேரரசில் தலைமை அமைச்சராகவும் மற்றும் தலைமைப் போர்ப்படைத் தலைவராகவும் பணியாற்றியவர். அக்பரின் இளமைக்காலத்தில், அவரது காப்பாளாரகவும் விளங்கியவர். [1][2]

பைராம் கான்
بيرام خان
பைராம் கான்
இளவரசர் அக்பரின் காப்பாளர்
முகலாயப் பேரரசின் காப்பாளர்
பதவியில்
1556–1561
ஆட்சியாளர்அக்பர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புc. 1501
படாக்சன்
இறப்பு31 சனவரி 1561
சகரஸ்ர லிங்க குளம், அங்கில்வாட் பதான், குஜராத்
பிள்ளைகள்அப்துல் ரகீம் கான்
தொழில்அக்பரின் தலைமை முதலமைச்சர் மற்றும் தலைமைப் போர்ப்படைத்தலைவர்
Military service
பற்றிணைப்புமுகலாயப் பேரரசு
சேவை ஆண்டுகள்1517-1561
தரம்45
கட்டளைமுகலாயர் படைகள்
போர்கள்/யுத்தங்கள்கண்வா போர்
காக்ராப் போர்
சம்பல் கோட்டை முற்றுகை
முதலாம் பானிபட் போர்

இளமை வாழ்க்கை தொகு

நடு ஆசியாவின் ஆப்கானித்தான் நாட்டில் படாக்சன் என்ற மாகாணத்தில் பிறந்த கலப்பு துருக்கி இனத்தை சேர்ந்த பைராம் கான் மற்றும் அவரது தந்தை, பாபரின் படையில் பணியாற்றியவர்கள்.[1]

போர்கள் தொகு

இந்தியப் படையெடுப்பின் போது 16 வயது பைராம் கான் பாபரின் தலைமையிலான படையில் சேர்ந்து கொண்டார்.[3] இந்தியத் துணைக்கண்டத்தில் வலிமையான முகலாயப் பேரரசை நிறுவ உமாயூனுக்கு பக்க பலமாக இருந்தவர். வாரணாசி, வங்காளம், குஜராத் மீதான படையெடுப்புகளின் போது படைத்தலைவராக இருந்தவர்.[3] உமாயூனை பாரசீகத்திற்கு நாடு கடத்தப் போது, பைராம் கானும் உடன் சென்றார். உமாயூன் காந்தாரத்தைக் கைப்பற்றிய போரில் துணையிருந்தார். 1556இல் வட இந்தியா முழுவதையும் கைப்பற்றும் போரில், முகலாயப் பேரரசின் தலைமைப் படைத்தலைவராக இருந்தார்.[4]

1556இல் உமாயூன் இறந்த நேரத்தில் குழந்தையாக இருந்த இளவரசன் அக்பரின் காப்பாளாராக செயல்பட்டார். [[முதலாம் பானிபட் போர் பானிபட் போரில் தில்லி பேரரசர் ஹெமுவுடன் போரிட்டார்.

பிற்கால வாழ்க்கை தொகு

 
ஆப்கானிய வீரரால் கொல்லப்பட்ட பைராம் கான், பதான், அங்கில்வாட், குஜராத்தில், ஆண்டு 1561

சியா இசுலாமியரான பைராம் கானின் அரசியல் ஏற்றத்தை கண்ட சன்னி இசுலாமியப் பிரபுக்கள், பைராம் கானை முகலாயப் பேரரசிலிருந்து நீக்கிவிட முடிவு செய்தனர்.[5] [6]

பைராம் கான் குஜராத் வழியாக மெக்காவுக்கு பயணிக்கையில்[7] ஹெமுவின் ஆப்கானியப் படைத்தலைவர் ஹாஜி கானால் கொல்லப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Thackston, Wheeler M. (2002) The Baburnama: Memoirs of Babur, Prince and Emperor The Modern Library, New York, p.xix, ISBN 0-375-76137-3
  2. Ahmed,Humayun,(2011) Badsha Namdar, National Library, Dhaka, pp.200-233. ISBN 978-984-502-017-6
  3. 3.0 3.1 Ray, Sukumar & Beg, M.H.A. (1992) Bairam Khan, Mirza Beg, 1992, page 11, ISBN 969-8120-01-7
  4. Ray, Sukumar & Beg, M.H.A. (1992) Bairam Khan, Mirza Beg, 1992, page 27, ISBN 969-8120-01-7
  5. https://books.google.com/books?id=HHyVh29gy4QC&pg=PA13#v=onepage&q&f=false
  6. "Rahim-Abdul Rahim Khankhanan at Indiagrid". Archived from the original on 2011-07-13. பார்க்கப்பட்ட நாள் 2016-08-23.
  7. Bose, Mandakranta. Faces of the Feminine in Ancient, Medieval, and Modern India, 2000.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைராம்_கான்&oldid=3565464" இலிருந்து மீள்விக்கப்பட்டது