கான் (பட்டம்)

துருக்கிய மற்றும் மங்கோலிய மன்னர் அல்லது இராணுவத் தலைவர் பட்டம்

கான் (மொங்கோலியம்: хан/ᠬᠠᠨ; துருக்கியம்: ஹான்; அசர்பைஜானி: க்ஷான்; உதுமானிய மொழி: ஹான்; சீனம்: 可汗, கெஹன்; கொகுர்யியோ மொழி: 皆, கேய்; சில்லா மொழி: 干, கான்; பயேக்ஜே மொழி: 瑕, கே; மஞ்சூ மொழி: ᡥᠠᠨ; பஷ்தூ: خان; உருது: خان; பலூச்சி: خان; இந்தி: ख़ान; நேபாளி: खाँ; வங்காளம்: খাঁন; பல்கேரியம்: хан[a]; சுவாசு: хун, ஹுன்) என்பது அரசர் அல்லது இராணுவ ஆட்சியாளருக்கு வழங்கப்படும் ஒரு பட்டமாகும். இது சீனாவின் வடக்கே வாழும் மங்கோலியர்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் நடுக் கால நாடோடி துருக்கியப் பழங்குடியினரால் பயன்படுத்தப்பட்டது. இது மங்கோலியர்களின் முன்னோடிகளான ஜியான்பே கூட்டமைப்பிலும் ஒரு பட்டமாக[1] கி.பி. 283 முதல் கி.பி. 289 வரை அவர்களின் தலைவருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.[2] ரோரன்களே ‘’ககான்’’ மற்றும் ‘’கான்’’ ஆகிய பட்டங்களைத் தங்கள் பேரரசர்களுக்கு முதலில் சூட்டினர்.[3] பின்னர் ஆசினா வம்சத்தவர் இந்தப் பெயரை ஏற்று, ஆசியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரப்பினர். ஆறாவது நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஈரானியர்கள் ஒரு "ககான் - துருக்கியர்களின் மன்னர்" பற்றி அறிந்திருந்தனர்.[1]

‘’கான்’’ இப்போது "தளபதி", "தலைவர்", "ஆட்சியாளர்", "அரசர்", "தலைமை" போன்ற பலவிதமான அர்த்தங்களில் பயன்படுகிறது. 2015 ஆம் ஆண்டின் நிலவரப்படி கான்கள் தெற்கு ஆசியா, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் துருக்கியில் உள்ளனர். கதுன், கடூன் மற்றும் கனும் ஆகியவை பெண்பால் மாற்றுக்கள் ஆகும். இந்தப் பட்டங்கள் அல்லது பெயர்கள் சில நேரங்களில் ஹான் , கான், ஹக்கான் , ஹனும் அல்லது ஹத்துன் (துருக்கியில்) மற்றும் க்ஷான், க்ஷனிம் (அசர்பைஜானில்) என்றும் எழுதப்படுகின்றன. மத்திய ஆசியாவிலிருந்த பல்வேறு மங்கோலிய மற்றும் துருக்கிய மக்கள், பழைய உலகில் மங்கோலிய சாம்ராஜ்ஜியத்தின் (1206-1368) காலப்பகுதிக்குப் பிறகு இப்பட்டத்துக்குப் புதிய முக்கியத்துவத்தை அளித்தனர். பின்னர் இப்பட்டத்தை வடக்கு ஆசியாவிற்குக் கொண்டு வந்தனர். வடக்கு ஆசியாவில் உள்ளூர் மக்கள் இதைப் பயன்படுத்தினர். ககானின் அர்த்தம் கான்களின் கான் என்பதாகும். இது சீனப் பேரரசரான தாங்கின் டைசோங் (‘’சொர்க்க ககான்’’, கி.பி. 626 முதல் கி.பி. 649 வரை ஆட்சி செய்தவர்) மற்றும் செங்கிஸ் கானின் பட்டமாகும். மேலும் மங்கோலிய சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களும் இப்பட்டத்தைப் பயன்படுத்தினர். உதாரணமாக, மோங்கே கான் (ஆட்சி 1251-1259) மற்றும் ஒக்தாயி கான் (ஆட்சி 1229-1241) "ககான்கள்". ஆனால் குறுல்த்தாயால் மங்கோலிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளராக அறிவிக்கப்படாத ஜகாடேய் கான் ககான் அல்ல.[4]

இதனையும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Henning, W. B., 'A Farewell to the Khagan of the Aq-Aqataran',"Bulletin of the School of Oriental and African studies – University of London", Vol 14, No 3, pp. 501–522
  2. Zhou 1985, pp. 3–6
  3. René Grousset (1988). The Empire of the Steppes: A History of Central Asia now. Rutgers University Press. pp. 61, 585, n. 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8135-1304-9.
  4. Fairbank, John King. The Cambridge History of China. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம், 1978. p. 367
"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்_(பட்டம்)&oldid=3878550" இலிருந்து மீள்விக்கப்பட்டது