கான் (குடும்பப் பெயர்)

குடும்பப் பெயர் (Khan)

கான் (Khan (Surname) என்பது மங்கோலிய மற்றும் துருக்கிய ஆட்சியாளர்களின் குடும்பப்பெயர் ஆகும்.[1] இது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம் மற்றும் ஈரானின் சில பகுதிகளை ஆட்சி செய்த இசுலாமிய ஆட்சியாளர்களின் பொதுவான குடும்பப் பெயராக இருந்தது.[2][3][4]

வரலாறு

தொகு

இது ஒரு படைத்தலைவர் அல்லது அரச குடும்ப ஆண்களைக் குறிக்கும் கான் என்ற மங்கோலிய வரலாற்றுப் பெயரிலிருந்து பெறப்பட்டது. இது பண்டைய காலங்களில் நடு ஆசியா மற்றும் கிழக்கு யுரேசியாவின் நாடோடி கால்நடைகளை மேய்க்கும் பெடோயின் பழங்குடியினரிடையே ஒரு குடும்பப்பெயராக உருவானது. பின்னர் மத்திய காலங்களில் கிழக்கு ஆசியாவின் மங்கோலியாப் பகுதிகளிலும், கிழக்கு ஐரோப்பாவின் துருக்கிய வம்சங்களிலும் பிரபலமடைந்தது.

படைத் தலைவர்கள் மற்றும் அரசர்களுக்கான குடும்பப் பெயராக கான் என்பதை முதன்முதலில் பயன்படுத்தியது ஆதி-மங்கோலிய சமூகங்கள் ஆகும். பின்னர் துருக்கி மற்றும் நடு ஆசியா ஆட்சியாளர்கள் பரவலாகப் பயன்படுத்தினர்.[2] [3]

பரவல்

தொகு

கான் என்ற குடும்பப்பெயர் துருக்கிய மற்றும் மங்கோலிய வம்சாவளி மக்களிடையே காணப்படுகிறது. இருப்பினும், தெற்காசிய முஸ்லிம்களிடையே இது மிகவும் பரவலாக காணப்படுகிறது. இந்தியாவின் காஷ்மீர் மற்றும் வங்காளப் பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இந்துக்களால் கான் எனும் பட்டப்பெயர் குடும்பப் பெயராகவும் பயன்படுத்தப்படுகிறது. [5]

குறிப்பிடத்தக்கவர்கள்

தொகு
  1. செங்கிஸ் கான்
  2. சகதாயி கான்
  3. ஒக்தாயி கான்
  4. குயுக் கான்
  5. மோங்கே கான்
  6. குப்லாய் கான்
  7. தெமுர் கான்
  1. குலாகு கான்
  • மேலும் ஆப்கானித்தானின் பஷ்தூன் மக்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் கான் என்ற பெயரைச் சேர்த்துக் கொள்வது வழமையாகும்.
  1. கான் அப்துல் கப்பார் கான்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Foundation, Encyclopaedia Iranica. "Khan". iranicaonline.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-07.
  2. Khan entry in Hobson-Jobson: the Anglo-Indian dictionary
  3. As cited in The Baburnama, 2002, W.M. Thackston p273.
  4. "Krum | Bulgar khan | Britannica". Encyclopedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 20 January 2022.
  5. Anwar, Tarique; Bhat, Rajesh (February 23, 2008). "Kashmiryat in Kashmiri surnames" (in Indian English). Two Circles. Archived from the original on February 26, 2008. பார்க்கப்பட்ட நாள் September 11, 2023. Ever heard a Hindu by the surname Peer, Wali or Khan? Or imagine a Muslim carrying his last name as Rishi or Pandit…… Sounds incredible but it is a common feature in Kashmir, where unlike in other parts of the country, Muslims and Hindus have been sharing the same surnames since ages.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்_(குடும்பப்_பெயர்)&oldid=3855929" இலிருந்து மீள்விக்கப்பட்டது