சாய்பனிடுகள்
சாய்பனிடுகள் (Shaybanids) நடு ஆசியாவில் இருந்த பாரசீகமயமாக்கப்பட்ட[1] துருக்கிய-மங்கோலிய அரசமரபினர்[2] ஆவர். இவர்கள் தற்போதைய கசகஸ்தானின் பெரும்பாலான பகுதிகள், பெரும்பாலான உஸ்பெகிஸ்தான் மற்றும் தெற்கு உருசியாவின் பகுதிகள் ஆகியவற்றை 15ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்தனர்.[3] இவர்கள் செங்கிஸ் கானின் பேரனும், சூச்சியின் ஐந்தாவது மகனுமாகிய சிபனின் வழிவந்தவர்களாவர்.[4] 14ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை சிபனின் அண்ணன்களாகிய படு கான் மற்றும் ஓர்டா கானின் வழித்தோன்றல்களான உஸ்பெக் கான் போன்றோரின் ஆட்சியை ஏற்றுக்கொண்டனர். உரல் மலைகளுக்கு தென்கிழக்கே இருந்த சாம்பல் நாடோடிக் கூட்டத்தை (உஸ்பெக்கியர்) சாய்பனிடுகள் வழி நடத்தினர். 1282ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினர். இந்த கானரசானது அதன் அதிகபட்ச பரப்பளவின் போது தற்போதைய ஆப்கானிஸ்தான் மற்றும் நடு ஆசியாவின் மற்ற பகுதிகளை தன்னகத்தே கொண்டிருந்தது.
14ஆம் நூற்றாண்டின் பெரிய உள்நாட்டுப் போர்களின் போது படு மற்றும் ஓர்டாவின் வழித்தோன்றல்கள் இறந்து போனபோது அப்துல் காதிர் கான் தலைமையிலான சாய்பனிடுகள் சூச்சியின் ஒரே உண்மையான வழித்தோன்றல்களாக தங்களை அறிவித்துக் கொண்டனர். சூச்சியின் பெரிய உளூஸ் தங்களுக்குத்தான் என கூறினர். அந்நேரத்தில் சூச்சியின் உளூஸானது சைபீரியா மற்றும் கசகஸ்தானின் பகுதிகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது. சாய்பனிடுகளின் எதிரிகள் துகாய்-தைமூரிய அரசமரபினர் ஆவர். அவர்கள், சூச்சியின் 13ஆவது மகனுக்கும் ஒரு காமக்கிழத்தியருக்கும் பிறந்தவர்கள் என தங்களைப் பற்றி கூறினர். பல ஆண்டுகள் ஏற்பட்ட சண்டைகளானது பெரிய நாடோடிக் கூட்டம் மற்றும் ஐரோப்பாவில் அதன் வழிவந்த அரசுகள் குறிப்பாக கசன், அசுதிரகான் மற்றும் கிரிமிய கானரசுகள் ஆகியவற்றின் அதிகாரத்தை துகாய்-தைமூரியர்களின் கையில் கொடுத்தது.
உசாத்துணை
தொகு- ↑ Introduction: The Turko-Persian tradition, Robert L. Canfield, Turko-Persia in Historical Perspective, ed. Robert L. Canfield, (Cambridge University Press, 1999), 19.
- ↑ "Welcome to Encyclopaedia Iranica".
- ↑ Shibanids, R.D. McChesney, The Encyclopaedia of Islam, Vol. IX, ed. C. E. Bosworth, E. Van Donzel, W. P. Heinrichs AND G. Lecomte, (Brill, 1986), 428;"SHIBANIDS, a Mongol dynasty of Central Asia, the agnatic descendants of Shiban, the fifth son of Djoci son of Cinggis Khan".
- ↑ Rene Grousset, The Empire of the Steppes, transl. Naomi Walford, (Rutgers University Press, 1970), 478.