உஸ்பெக் கான்

தங்க நாடோடிக் கூட்டத்தின் கான் (1313-1341)

சுல்தான் கியாஸ் அல்-தின் மொஹம்மத் ஓஸ் பெக் என்ற இயற்பெயரை உடைய உஸ்பெக் (1292–1341) என்பவர் தங்க நாடோடிக் கூட்டத்தின் நீண்ட காலம் ஆட்சி (1313–1341) செய்த கானாவார். இவரது ஆட்சியின் கீழ் அரசானது அதன் உச்சத்தை அடைந்தது.[1] இவருக்குப் பிறகு இவரது மகன் டினி பெக் ஆட்சிக்கு வந்தார். இவரது தந்தை பெயர் தோக்கிரில்சா. இவர் மெங்கு-தைமூரின் பேரன் ஆவார். 1267-1280 ஆகிய காலகட்டத்தில் ஆட்சி செய்தார்.

அரியணை ஏறுதல் மற்றும் நாடோடிக் கூட்டம் இஸ்லாம் மதத்திற்கு மாறுதல் தொகு

 
உஸ்பெக் கானின் ஆட்சியின்போது தங்க நாடோடிக் கூட்டத்தின் கொடி.

உஸ்பெக்கின் தந்தை தோக்கிரில்சா தொடே மோங்கேவை பதவியிலிருந்து தூக்கி எறிந்த செங்கிஸ் கான் வழித்தோன்றல் இளவரசர்களின் ஒருவராவார். பிறகு அவரும் தோக்தாவால் சிரச்சேதம் செய்யப்பட்டார். தோக்கிரில்சாவின் மனைவியை தனதாக்கிக் கொண்ட தோக்தா உஸ்பெக்கை தங்க நாடோடிக் கூட்டத்தின் தொலைதூர பகுதிக்கு நாடு கடத்தினார். அப்பகுதி குவாரசமியா அல்லது சிர்காசியர்களின் நாடாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

குறிப்புகள் தொகு

  1. Sinor, 178.

உசாத்துணை தொகு

  • Atwood, Christopher P. Encyclopedia of Mongolia and the Mongol Empire. New York: Facts On File, 2004.
  • Bor, Zhu̇gdėriĭn. Mongol khiĭgėėd Evroaziĭn diplomat shastir. Ulaanbaatar: [Olon Ulsyn Kharilt︠s︡aany Surguulʹ], 2001. (in மங்கோலிய மொழி)
  • Morgan, David. The Mongols. Oxford: Blackwell, 1990.
  • Sinor, Denis. Inner Asia: History, Civilization, Languages; A Syllabus. Bloomington: Indiana University, 1969.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஸ்பெக்_கான்&oldid=3151228" இலிருந்து மீள்விக்கப்பட்டது