தொடே மோங்கே

கான்

தொடே மோங்கே என்பவர் தங்க நாடோடி கூட்டத்தின் ஒரு கான் ஆவார். இவர் 1280 முதல் 1287 வரை ஆட்சி புரிந்தார்.

சுயசரிதை

தொகு

தொடே மோங்கே, தோகோகனின் மகன் ஆவார். படு கானின் கொள்ளுப்பேரன் மற்றும் மெங்கு-தைமூரின் தம்பி ஆவார். இவருக்கு கடவுள் பக்தி அதிகமாக இருந்தது. 1283 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.[1] மத நம்பிக்கை ஆழமாக இருந்த காரணத்தினால் தனது ஆட்சிப் பகுதிகளை விரிவாக்கம் செய்வதில் இவர் ஆக்ரோசமானவராக இருக்கவில்லை. எனினும் பொது எதிரியான ஈல்கானரசுக்கு எதிராக எகிப்தின் மம்லுக் சுல்தானகத்துடன் நல்ல தொடர்பில் இருந்தார். ரஷித் அல்-தின்னின் கூற்றுப்படி குப்லாய் கானுடன் நல்ல உறவு முறையை பின்பற்ற ஆர்வமாக இருந்தார். குப்லாயின் மகன் நோமோகனை யுவான் அரசவைக்கு விடுவித்து அனுப்பினார். இவரது ஆட்சி காலத்தில் தங்க நாடோடிக் கூட்டத்தில் நோகை கானின் செல்வாக்கு பெருமளவுக்கு அதிகரித்தது. இவர் 1284/85 ஆம் ஆண்டில் ஹங்கேரிக்கு எதிராக இரண்டாவது தாக்குதலை நடத்தினார். எனினும் அத்தாக்குதல் கடும் தோல்வியை இவரது ராணுவத்திற்கு தந்தது. 1287 ஆம் ஆண்டு தனது உறவினர் தொலே புகாவிற்கு அரியணை கிடைப்பதற்காக தனது பதவியிலிருந்து இவர் விலகினார்.[2]

உசாத்துணை

தொகு
  1. Martin, Janet, Medieval Russia, 980-1584, p. 171.
  2. வார்ப்புரு:MLCC

மேலும் படிக்க

தொகு
  • David Morgan, The Mongols
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடே_மோங்கே&oldid=3151225" இலிருந்து மீள்விக்கப்பட்டது