சபாவித்து வம்சம்
சபாவித்து வம்சம் (Safavid dynasty) நவீன ஈரானை 1501 முதல் 1736 முடிய ஆண்ட சியா இசுலாம் பன்னிருவர் பிரிவைச் சார்ந்த அரச வம்சமாகும்.[5]
சபாவித்து வம்சம் دودمان صفوی Dudmān e Safavi | |
---|---|
1501–1736 | |
நிலை | பேரரசு |
தலைநகரம் | தப்ரிஸ் (1501–1555) குவாஸ்வின் (1555–1598) ஸ்பாஹன் (1598–1736) |
பேசப்படும் மொழிகள் | அலுவல் மொழி பாரசீகம். பிற மொழிகள் அரபு, அஜர்பைஜானி மொழி, ஜார்ஜியா மொழி மற்றும் துருக்கி மொழி |
சமயம் | சியா இசுலாம், பன்னிருவர் பிரிவு |
அரசாங்கம் | இசுலாமிய முடியாட்சி |
ஷாகான்ஷா | |
• 1501–1524 | முதலாம் இசுமாயில்(துவக்கம்) |
• 1732–1736 | மூன்றாம் அப்பாஸ் (முடிவு) |
விசியர் | |
• 1501–? | முகமது ஜக்காரியா குஜுஜி (முதல்) |
• 1729–1736 | நாதிர் குவாலி பெக் (இறுதி) |
சட்டமன்றம் | அரசவைக் குழு |
வரலாறு | |
• சபியத்தீன் அட்ராபிலி சபாவியா ஆட்சியை நிறுவுதல் | 1301 |
• தொடக்கம் | 1501 |
• ஹோத்தாகி பேரரசின் ஆக்கிரமிப்பு | 1722 |
• சபாவித்து நாதிர் ஷா மீண்டும் கைப்பற்றுதல் | 1726–29 |
• முடிவு | மார்ச் 1736 |
• நாதிர் ஷா முடிசூட்டிக்கொள்தல் | 1 அக்டோபர் 1736 |
பரப்பு | |
2,850,000 km2 (1,100,000 sq mi) | |
நாணயம் | துமான், அப்பாசி நாணயம், ஜார்ஜியன் அப்பாசி, ஷாகி[3]
|
தற்போதைய பகுதிகள் | |
a State religion.[4] |
சபாவித்து பேரரசு போர்க்களங்களில் வெடி மருந்துகளை பயன்படுத்தியதால், இதனை வெடிமருந்து பேரரசு என்றும் அழைப்பர்.[6]
சபாவித்து வம்சத்தின் ஆட்சி இரானிய அஜர்பைசான் பிரதேசத்தின் ஆர்டபில் நகரத்தில் முதலாம் ஷா இசுமாயில் (1501–24) என்பவரால் நிறுவப்பட்டது.
சபாவித்து வம்சத்தினர், இசுலாமிய சூபி - குர்திஷ் கலப்பினத்தவர் ஆவார். [7]சபாவித்து வம்சத்தினர் அசர்பைஜானியர்களுடனும், [8] ஜார்ஜியா நாட்டு மக்களுடனும் திருமண உறவு கொண்டிருந்தனர். [9]
சபாவித்து வம்சத்தினர் 1501 முதல் 1722 முடிய தற்கால ஈரான், ஈராக், அசர்பைஜான், பாகாரேயின், ஆர்மீனியா, ஜார்ஜியா, குவைத், சிரியா, துருக்கியின் சில பகுதிகள், வடக்கு காகசஸ், உஸ்பெகிஸ்தான், ஆப்கானித்தான், பாகிஸ்தான், துருக்மெனிஸ்தான் பகுதிகளை ஆண்டனர்.
1736-இல் சபாவித்து பேரரசு சிதறுண்டாலும், ஈரானை சியா இசுலாம் பிரிவுக்கு மாற்றியதுடன், அனதோலியா, காக்கேசியா மற்றும் ஈராக்கிலும் சியா இசுலாம் பரவியது.
சபாவித்து வம்ச ஆட்சியாளர்கள்
தொகு- முதலாம் இஸ்மாயில் 1501–1524
- முதலாம் தமாஸ்ப் 1524–1576
- இரண்டாம் இஸ்மாயில் 1576–1578
- முகம்மது கொடபண்டா 1578–1587
- முதலாம் அப்பாஸ் 1587–1629
- சஃபி 1629–1642
- இரண்டாம் சஃபி 1642–1666
- முதலாம் சுலைமான் 1666–1694
- சுல்தான் முதலாம் உசைன் 1694–1722
- இரண்டாம் தமாஸ்ப் 1722–1732
- மூன்றாம் அப்பாஸ் 1732–1736
இதனையும் காண்க
தொகு- அகாமனிசியப் பேரரசு - கிமு 550 – கிமு 330
- பார்த்தியப் பேரரசு - கி மு 247 – கி பி 224
- செலூக்கியப் பேரரசு - கி.மு. 312 – கி.மு. 63
- சாசானியப் பேரரசு - கிபி 224 – 651
- உதுமானியப் பேரரசு - கிபி 1299 – 1500
- அப்சரித்து வம்சம் - கிபி - 1736 - 1796
- குவாஜர் வம்சம் - கிபி 1796–1925
- பகலவி வம்சம் - கிபி 1925 – 1979
மேற்கோள்கள்
தொகு- ↑ Ingvild Flaskerud (26 November 2010). Visualizing Belief and Piety in Iranian Shiism. Continuum International Publishing Group. pp. 182–183. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4411-4907-7. பார்க்கப்பட்ட நாள் 24 July 2011.
- ↑ ...the Order of the Lion and the Sun, a device which, since the 17 century at least, appeared on the national flag of the Safavids the lion representing 'Ali and the sun the glory of the Shi'i faith, Mikhail Borisovich Piotrovskiĭ, J. M. Rogers, Hermitage Rooms at Somerset House, Courtauld Institute of Art, Heaven on earth: Art from Islamic Lands : Works from the State Hermitage Museum and the Khalili Collection, Prestel, 2004, p. 178.
- ↑ Ferrier, RW, A Journey to Persia: Jean Chardin's Portrait of a Seventeenth-century Empire, p. ix.
- ↑ The New Encyclopedia of Islam, Ed. Cyril Glassé, (Rowman & Littlefield Publishers, 2008), 449.
- ↑ "SAFAVID DYNASTY". Encyclopædia Iranica.
- ↑ Streusand, Douglas E., Islamic Gunpowder Empires: Ottomans, Safavids, and Mughals (Boulder, Col : Westview Press, 2011) ("Streusand"), p. 135.
- ↑ RM Savory. Ebn Bazzaz. Encyclopædia Iranica
- ↑ "Peoples of Iran" Encyclopædia Iranica. RN Frye.
- ↑ Aptin Khanbaghi (2006) The Fire, the Star and the Cross: Minority Religions in Medieval and Early. London & New York. IB Tauris. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84511-056-0, pp. 130-1
வெளி இணைப்புகள்
தொகு- History of the Safavids on Iran Chamber
- "Safavid dynasty", Encyclopædia Iranica by Rudi Matthee
- The History Files: Rulers of Persia
- BBC History of Religion
- Iranian culture and history site பரணிடப்பட்டது 2005-08-31 at the வந்தவழி இயந்திரம்
- "Georgians in the Safavid administration", Encyclopædia Iranica
- Artistic and cultural history of the Safavids from the Metropolitan Museum of Art
- History of Safavid art
- A Study of the Migration of Shi'i Works from Arab Regions to Iran at the Early Safavid Era. பரணிடப்பட்டது 2007-10-08 at the வந்தவழி இயந்திரம்
- Why is Safavid history important? (Iran Chamber Society)
- Historiography During the Safawid Era பரணிடப்பட்டது 2010-06-16 at the வந்தவழி இயந்திரம்
- "IRAN ix. RELIGIONS IN IRAN (2) Islam in Iran (2.3) Shiʿism in Iran Since the Safavids: Safavid Period", Encyclopædia Iranica by Hamid Algar