அகாமனிசியப் பேரரசு

அகாமனிசியப் பேரரசு அல்லது அக்கீமெனிட் பேரரசு (பழைய பாரசீக மொழி: Haxâmanishiya,[2] ஹகாமனிசியப் பேரரசு, ஆங்கிலம்: Achaemenid Empire அகமனீதுப் பேரரசு, கிமு 550-330), அகன்ற அகன்ற ஈரானின் குறிப்பிடத்தக்க பகுதியை ஆண்ட முதல் பாரசீகப் பேரரசு என அழைக்கப்படுகிறது.[3] இதன் பலம் உயர்நிலையில் இருந்தபோது இது 7.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைத் தன்னுள் அடக்கியிருந்தது. நிலப்பரப்பின் அடிப்படையில் செந்நெறிக்காலப் பேரரசுகளில் மிகப் பெரியது இதுவேயாகும்.[4]

அகாமனிசியப் பேரரசு
هخامنشیان
கிமு 550–கிமு 330
அகாமனிசியப் பேரரசின் உயர்நிலையில் அதன் அளவு
அகாமனிசியப் பேரரசின் உயர்நிலையில் அதன் அளவு
நிலைபேரரசு
தலைநகரம்எகபடனா, பாசர்கடீ, பெர்சப்பொலிஸ், சூசா
பேசப்படும் மொழிகள்பழைய பாரசீகம், ஈலமைட்டு மொழி, அக்காதியம்
அரசாங்கம்முடியாட்சி
பேரரசர் 
• கிமு 550 –கிமு 529
முதலாம் சைரஸ்
• கிமு 336 –கிமு 330
மூன்றாம் டேரியஸ்
வரலாற்று சகாப்தம்பண்டைய வரலாறு
• தொடக்கம்
கிமு 550
• பெர்சப்போலிசில் கட்டுமானம் தொடங்கியது
கிமு 515
• எகிப்தை கம்பிசஸ் II கைப்பற்றுதல்
கிமு 525
கிமு 499–449
• வெற்றிகரமான எகிப்தியக் கலகம் எகிப்தின் விடுதலைக்கு வித்திட்டது.
கி மு 404
• Reconquest of Egypt by Artaxerxes III
கிமு 343
• அலெக்சாந்தரால் ஃககாமனிசியப் பேரரசு தோற்கடிக்கப்பட்டது.
கிமு 334 –330
• கைப்பற்றப்பட்டது
கிமு 330
• பாக்திரியாவின் சத்ரப் பேசஸ் தாரியுஸ் III ஐக் கொன்றுவிட்டுத் தானே அரசன் ஆர்டக்சேர்க்செஸ் V ஆக முடிசூட்டிக் கொண்டான்.
கிமு 330
முந்தையது
பின்னையது
மீடியாப் பேரரசு
புது பாபிலோனியப் பேரரசு
லிடியா
எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்சம்
செலூக்கியப் பேரரசு
தாலமி பேரரசு
லிசிமாக்கஸ்
சூசா நகரத்தின் முதலாம் டேரியஸ் அரண்மனையில் உள்ள இறவாப்படை வீரர்களின் சித்தரிப்பு. இறவாப்படை வீரர்களின் ஆடைகள் பண்டைய எழுத்தாளர்களின் எழுத்துகளில் உள்ள இறவாப்படை குறித்த விளக்கத்துடன் பொருந்துகின்றன.[1]

இப்பேரரசு சைரசு என்பவரால் நிறுவப்பட்டது. இது ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் ஆகியவற்றின் பகுதிகள், நடு ஆசியா, சின்ன ஆசியா ஆகியவற்றின் பகுதிகள், பெரும்பாலான கருங்கடல் கரையோரப் பகுதிகள், ஈராக், வடக்கு சவூதி அரேபியா, ஜோர்தான், இஸ்ரேல், லெபனான், சிரியா, பண்டைய எகிப்து, லிபியா ஆகியவற்றை உள்ளடக்கி மூன்று கண்டங்களில் பரந்திருந்தது.[5][6]

மேற்கத்திய வரலாற்றில் இப்பேரரசு, கிரேக்க-பாரசீகப் போர்களில் கிரேக்க நகர அரசுகளின் எதிரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரரசின் அளவும், அது நீண்டகாலம் நிலைத்திருந்ததும்; மொழி, சமயம், கட்டிடக்கலை, மெய்யியல், சட்டம், நாடுகளின் அரசுகள் ஆகியவற்றின் மீது பாரசீகச் செல்வாக்கு இன்றுவரை நிலைத்திருப்பதற்கான காரணமாகியது.

கிரேக்க அகாமனிசியப் போர்கள்

தொகு

ஐயோனியாவில் கிரேக்கர்களின் கிளர்ச்சியைக் அடக்க வேண்டி, பாரசீகத்தின் அகாமனியப் பேரரசுக்கும், கிரேக்கர்களுக்கும்க்கும் இடையே, கிமு 499 முதல் கிமு 449 முடிய, ஐம்பது ஆண்டுகள் நடைபெற்ற போராகும். இந்தப் போர்களில், கடற்போரில்களில் பெரும்பாலும் கிரேக்கர்கள் வெற்றி பெற்றனர்.

வரலாறு

தொகு

மீடெஸ் அரசின் ஒரு சிற்றரசாகத் தொடங்கிய இவ்வரசு பின்னர் பேரரசர் சைரசு காலத்தில் மீடெசைக் கைப்பற்றி பண்டைய எகிப்து, அனதோலியா மற்றும் அனத்தோலியா ஆகியவற்றையும் உள்ளடக்கி விரிவாகியது. பேரரசர்கள் முதலாம் டேரியஸ் மற்றும் முதலாம் அர்தசெராக்சஸ் ஆகியோர், கிமு 499 முதல் 449 முடிய நடத்திய கிரேக்க-பாரசீகப் போர்கள் மூலம் பண்டைய கிரேகக்த்தையும் கைப்பற்றுமளவுக்கு நெருங்கியது.

எகிப்தின் பார்வோன்களாக

தொகு

அகாமனிசியப் பேரரசின் இரண்டாம் காம்பிசெஸ் (கிமு 530–522) முதல் மூன்றாம் டேரியஸ் (கிமு 336–330) வரையான பேரரசர்கள் பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தின் பார்வோன்களாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சி செய்தனர்.

இறவாப்படை

தொகு

பண்டைய கிரேக்க வரலாற்றாளர் எரோடோட்டசால் குறிப்பிடும் இறவாப்படை என்பது அகாமனியப் பேரரசின் இராணுவத்தில் 10,000 வீரர்களைக் கொண்ட உயரடுக்கு கனரக காலாட்படை பிரிவுக்கு வழங்கப்பட்ட பெயர் ஆகும். பாரசீகப் பேரரசின் தொழில்முறை இராணுவமாக இருந்ததுடன், பேரரசின் காவலராக பங்களித்து இரட்டைத் திறன்களில் பணியாற்றியது. இது முதன்மையாக பாரசீகர்களைக் கொண்டிருந்தாலும், இறவாப்படையில் மீடியர் மற்றும் ஈலாம்களும் அடங்குவர்.

வீழ்ச்சி

தொகு

கிமு 330 ஆம் ஆண்டில் அகாமன்சியப் பேரரசு, பேரரசன் அலெக்சாந்தரால் தோற்கடிக்கப்படது.

அகாமனிசியப் பேரரசர்கள்

தொகு

 

பெயர் உருவம் குறிப்பு ஆட்சிக் காலம்
முதலாம் சைரஸ்   அகாமனிசியப் பேரரசை நிறுவியவர் கிமு 560–530
இரண்டாம் காம்பிசெஸ்   பாரசீகப் பேரரசர் மற்றும் எகிப்தின் பார்வோன் கிமு 530–522
பார்த்தியா / செமர்திஸ்   கிமு 522
முதலாம் டேரியஸ்   பாரசீகப் பேரரசர் மற்றும் எகிப்தின் பார்வோன் கிமு 522–486
முதலாம் செர்கஸ்   பாரசீகப் பேரரசர் மற்றும் எகிப்தின் பார்வோன் 486–465 BC
முதலாம் அர்தசெராக்சஸ்   பாரசீகப் பேரரசர் மற்றும் எகிப்தின் பார்வோன் கிமு 465–424
இரண்டாம் செராக்சஸ் பாரசீகப் பேரரசர் மற்றும் எகிப்தின் பார்வோன் கிமு 424 (45 நாட்கள்)
சோக்டியானஸ் பாரசீகப் பேரரசர் மற்றும் எகிப்தின் பார்வோன் கிமு 424–423
இரண்டாம் டேரியஸ்   பாரசீகப் பேரரசர் மற்றும் எகிப்தின் பார்வோன் கிமு 423–405
இரண்டாம் அர்தசெராக்சஸ்   பாரசீகப் பேரரசர் கிமு 405–358
மூன்றாம் அர்தசெராக்சஸ்   பாரசீகப் பேரரசர் மற்றும் எகிப்தின் பார்வோன் கிமு 358–338
அர்செஸ் பாரசீகப் பேரரசர் மற்றும் எகிப்தின் பார்வோன் கிமு 338–336
மூன்றாம் டேரியஸ் (மூன்றாம் தாரா)   இறுதி பாரசீகப் பேரரசர் மற்றும் எகிப்தின் பார்வோன் கிமு 336–330

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Welcome to Encyclopaedia Iranica".
  2. https://books.google.fr/books?id=qPVHBAAAQBAJ&pg=PA79&lpg=PA79&dq=hax%C4%81mani%C5%A1iya&source=bl&ots=IDiu2fLvpe&sig=GlwJITmrAifN3DAAi33UmbtffVA&hl=en&sa=X&redir_esc=y#v=onepage&q=hax%C4%81mani%C5%A1iya&f=false
  3. Sampson, Gareth C. (2008). The Defeat of Rome: Crassus, Carrhae and the Invasion of the East. Pen & Sword Books Limited. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84415-676-4. Cyrus the Great, founder of the First Persian Empire (c. 550–330 BC).
  4. Achaemenian Dynasty Iranian dynasty
  5. Achaemenian Dynasty
  6. Persian Empire
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகாமனிசியப்_பேரரசு&oldid=4015025" இலிருந்து மீள்விக்கப்பட்டது