எரோடோட்டசு
எரோடோட்டசு (Ἡρόδοτος, Herodotus) அனதோலியாவில் உள்ள ஆலிகார்னாசசைச் (Ἁλικαρνᾱσσεύς, Halicarnassus) சேர்ந்த ஒரு கிரேக்க வரலாற்றறிஞா் ஆவார். கிமு 5 ஆம் நூற்றாண்டில் (கிமு 484 - கிமு 425) வாழ்ந்த இவர் மேற்கு நாடுகளின் பண்பாட்டில் வரலாற்றின் தந்தை எனப்படுகிறார். தேவையான தகவல்களை முறைப்படியாகச் சேகரித்து, ஓரளவுக்கு அவற்றின் துல்லியத்தைச் சோதித்து, ஒழுங்கான அமைப்பில் அவற்றைத் தெளிவாக விளக்கிய முதல் வரலாற்றாளர் இவராவார்.
எரோடோட்டசு | |
---|---|
![]() எரோடோட்டசின் மார்பளவு சிலை | |
பிறப்பு | அண். 484 BC ஆலிகார்னாசசு, காரியா(Caria), அனட்டோலியா |
இறப்பு | அண். கிமு 425 தூரீ, சிசிலி அல்லது பெல்லா, மசிடோன் |
பணி | வரலாற்றாளர் |
படிமம்:Herodotus5m1.jpg
எரோடோட்டசு வரைந்த பூமியின் வரைபடம்