கிரேக்க பாரசீகப் போர்கள்
கிரேக்க-பாரசீகப் போர்கள் (Greco-Persian Wars) (இதனை பாரசீகப் போர்கள் என்றும் அழைப்பர்), ஐயோனியாவில் கிரேக்கர்களின் கிளர்ச்சியைக் அடக்க வேண்டி, பாரசீகத்தின் அகாமனியப் பேரரசுக்கும், கிரேக்கப் பேரரசுக்கும் இடையே, கிமு 499 முதல் கிமு 449 முடிய, ஐம்பது ஆண்டுகள் நடைபெற்ற போராகும்.
போரின் வரலாறு
தொகுபாரசீகப் பேரரசர் சைரசு (ஆட்சிக் காலம்: கிமு 559-530), கிரேக்கர்களின் வாழ்விடங்களான அனத்தோலியாவின் மேற்குப் பகுதியான ஐயோனியாவை, கிமு 547ல் கைப்பற்றியதுடன், அந்நிலப்பகுதிகளை ஆள்வதற்கு குறுநில மன்னர்களை நியமித்தார். இதனால் கிரேக்கர்கள் பாரசீகத்தின் மீது பகையுணர்வு கொண்டனர்.
கிமு 499ல் பாரசீகப்படைகளின் உதவியுடன் ஐயோனியாவின் குறுநில மன்னர்கள், கிரேக்கத்தின் கீழிருந்த மத்தியதரைக் கடலில் உள்ள நக்ஸ்சோஸ் தீவை கைப்பற்றினர்.[1]
இதனால் கிரேக்கர்கள் மத்தியதரைக் கடல் ஒட்டிய மேற்காசியா பகுதிகளில், பாரசீகப் பேரரசுக்கு எதிராகப் கிமு 493 முடிய பெருங்கிளர்சிகளில் ஈடுபட்டனர்.
பண்டைய எரித்திரியா மற்றும் ஏதன்ஸ் நாடுகளின் படை உதவியுடன் கிரேக்கர்கள் கிமு 498ல், பாரசீகர்களின் ஆளுகையின் கீழிருந்த ஐயோனியாவின் தலைநகரமான சார்டிஸ் எனும் பெருநகரத்தை கைப்பற்றினர்.
இச்செயலுக்காகக் கோபங் கொண்ட பாரசீகப் பேரரசர் முதலாம் டேரியஸ், கிரேக்கர்களுக்கு இராணுவ உதவி வழங்கிய ஏதன்ஸ் மற்றும் எரித்திரியா நாடுகளை அழிக்க சபதம் செய்தார்.
இரு தரப்பினரால் ஐயோனியன் கிளர்ச்சிகள் கிமு 497 – 495 வரை தீவிரமடைந்தது. கிமு 494ல் பாரசீகர்கள் ஒருங்கிணைந்து கிரேக்க ஐயோனியக் கிளர்ச்சியாளர்களை போரில் வென்றனர்.
பாரசீக ஆட்சியின் கீழ் இருந்த சார்டிஸ் நகரத்தை, கிரேக்கர்கள் கைப்பற்ற உதவிய ஏதன்ஸ் மற்றும் எரித்திரியா நாடுகளையும் மற்றும் கிரேக்கத்தையும் கைப்பற்ற கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் முதல் படையெடுப்பை மேற்கொண்டார். இதில் பாரசீகப் பேரரசர் டேரியஸ், கிமு 492ல் கிரேக்கத்தின் மீது போர் தொடுத்து, கிரேக்கர்களின் திராசு மற்றும் மாசிடோனியா நகரங்களைக் கைப்பற்றினார்.[2]
கிமு 490ல் பாரசீகத்தின் இரண்டாவது படைகள் கிரேக்கத்தில் நுழைந்து எரீத்திரியா நாட்டைக் கைப்பற்றியது. பின்னர் ஏதன்ஸ் படைகளுடன் மோத முடியமால் பாரசீகப்படைகள் தற்காலிகமாக பின்வாங்கியது. கிரேக்கத்தை கைப்பற்றும் முன்னர் பாரசீகப் பேரரசர் டோரியஸ் கிமு 486ல் மறைந்தார். கிமு 480 பாரசீகப் பேரரசர் டோரியசின் மகன் செர்க்கஸ், இரண்டாம் முறையாக பெரும்படைகளுடன் கிரேக்கத்தின் மீது போர் தொடுத்தார். பாரசீகப் படைகள் ஏதன்ஸ் நகரத்தை தாக்கி, கிரேக்கத்தின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர்.
இருப்பினும், கிரேக்கர்களின் கப்பற்படையை அழிக்க முயன்ற பாரசீகப் படைகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதால், பாரசீகப் படைகள், கிரேக்கத்தை கைப்பற்றும் போரை நிறுத்திக் கொண்டது.
கிரேக்கப்படைகளின் வெற்றிக்கு பின்னர், கிரேக்கர்களின் கூட்டு நாடுகள், மத்தியதரைக் கடலில் இருந்த பாரசீகர்களின் எஞ்சிய கப்பல் படைகளை போரில் அழித்தனர்.
பாரசீகர்களிடமிருந்து பைசாந்தியத்தை கைப்பற்றப்பட்டதால், ஏதன்ஸ் தலைமையில் பைசாந்தியம் வந்தது.
கிமு 466ல் கிரேக்க கூட்டணிப் படைகள், ஐரோப்பாவில் எஞ்சியிருந்த பாரசீகப் படைகள் முழுவதையும் விரட்டியடித்து, ஐயோனியாவை, பாரசீகர்களிடமிருந்து மீட்டனர்
கிமு 499ல் கிரேக்கர்களுக்கும், பாரசீகர்களுக்கும் ஏற்பட்ட போர் உடன்படிக்கையின்படி, இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
போருக்கான ஆதாரங்கள்
தொகுகிரேக்க-பாரசீகப் போருக்கான ஆதாரங்கள் கிரேக்க சாத்திரங்களில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஆனால் பாரசீகத் தரப்பில் இப்போர் நடைபெற்றது குறித்து ஆவணங்கள் அல்லது இலக்கியங்கள் ஏதுமில்லை.
கிமு ஐந்தாம் நூற்றாண்டில் சின்ன ஆசியாவில் வாழ்ந்த கிரேக்க வரலாற்று அறிஞர் எரோடோட்டசு [3] என்பவர், கிமு 440 – 430 கிரேக்க மொழியில் 'Enquiries' எனும் வரலாற்று நூலில் கிரேக்க-பாரசீகப் போர்களுக்கான தோற்றம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Ehrenberg, Victor (2011). From Solon to Socrates: Greek History and Civilization During the 6th and 5th Centuries BC (3 ed.). Abingdon, England: Routledge. pp. 99–100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-58487-6.
- ↑ Roisman & Worthington 2011, ப. 135-138.
- ↑ Cicero, On the Laws I, 5
ஆதார நூற்பட்டியல்
தொகுபண்டைய ஆதாரங்கள்
தொகு- எரோடோட்டசு, The Histories (Godley translation, 1920)
- Commentary: W.W. How; J. Wells (1990). A commentary on Herodotus. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-872139-0.
- Thucydides, History of the Peloponnesian War
- Xenophon, Anabasis, Hellenica
- Plutarch, Parallel Lives; Themistocles, Aristides, Pericles, Cimon
- Diodorus Siculus, Bibliotheca historica
- Cornelius Nepos, Lives of the Eminent Commanders; Miltiades, Themistocles
நவீன ஆதாரஙகள்
தொகு- Boardman J; Bury JB; Cook SA; Adcock FA; Hammond NGL; Charlesworth MP; Lewis DM; Baynes NH; Ostwald M; Seltman CT (1988). The Cambridge Ancient History, vol. 5. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-22804-2.
- Burn, A.R. (1985). "Persia and the Greeks". In Ilya Gershevitch, ed. (ed.). The Cambridge History of Iran, Volume 2: The Median and Achaemenid Periods The Cambridge Ancient History, vol. 5. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-22804-2.
{{cite book}}
:|editor=
has generic name (help) - Dandamaev, M. A. (1989). A political history of the Achaemenid empire (translated by Willem Vogelsang). BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-09172-6.
- de Souza, Philip (2003). The Greek and Persian Wars, 499–386 BC. Osprey Publishing, (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84176-358-6)
- Farrokh, Keveh (2007). Shadows in the Desert: Ancient Persia at War. Osprey Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84603-108-7.
- Fine, John Van Antwerp (1983). The ancient Greeks: a critical history. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-03314-0.
- Finley, Moses (1972). "Introduction". Thucydides – History of the Peloponnesian War (translated by Rex Warner). Penguin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-044039-9.
- Green, Peter (2006). Diodorus Siculus – Greek history 480–431 BC: the alternative version (translated by Peter Green). University of Texas Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-292-71277-4.
- Green, Peter (1996). The Greco-Persian Wars. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-20573-1.
- Hall, Jonathon (2002). Hellenicity: between ethnicity and culture. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-31329-8.
- Higbie, Carolyn (2003). The Lindian Chronicle and the Greek Creation of their Past. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-924191-0.
- Holland, Tom (2006). Persian Fire: The First World Empire and the Battle for the West. Abacus. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-385-51311-9.
- Kagan, Donald (1989). The Outbreak of the Peloponnesian War. Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-9556-3.
- Köster, A.J. (1934). "Studien zur Geschichte des Antikes Seewesens". Klio Belheft 32.
- Lazenby, JF (1993). The Defence of Greece 490–479 BC. Aris & Phillips Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85668-591-7.
- Osborne, Robin (1996). Greece in the making, 1200–479 BC. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-03583-X.
- Roebuck, R (1987). Cornelius Nepos – Three Lives. Bolchazy-Carducci Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86516-207-7.
- Roisman, Joseph; Worthington, Ian (2011). A Companion to Ancient Macedonia. John Wiley and Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4443-5163-7. பார்க்கப்பட்ட நாள் 2016-03-14.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Rung, Eduard (2008). "Diplomacy in Graeco–Persian relations". In de Souza, P; France, J (eds.). War and peace in ancient and medieval history. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-81703-X.
- Sealey, Raphael (1976). A history of the Greek city states, ca. 700-338 B.C. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-03177-6.
- Snodgrass, Anthony (1971). The dark age of Greece: an archaeological survey of the eleventh to the eighth centuries BC. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-93635-7.
- Carol G. Thomas; Craig Conant (2003). Citadel to City-State: The Transformation of Greece, 1200–700 B.C.E. Indiana University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-253-21602-8.
- Traver, Andrew (2002). From polis to empire, the ancient world, c. 800 B.C.–A.D. 500: a biographical dictionary. Greenwood Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-313-30942-6.
வெளி இணைப்புகள்
தொகு- Persian Wars – Ancient History Encyclopedia
- Greco-Persian Wars
- Persian Wars
- THE GRECO-PERSIAN WARS பரணிடப்பட்டது 2012-08-24 at the வந்தவழி இயந்திரம்
- Greco-Persian Wars – Video
- The Persian Wars at History of Iran on Iran Chamber Society
- Article in Greek about Salamis, includes Marathon and Xerxes's campaign
- EDSITEment Lesson 300 Spartans at the Battle of Thermopylae: Herodotus' Real History பரணிடப்பட்டது 2010-10-11 at the வந்தவழி இயந்திரம்
- Batchelor, J. The Graeco–Persian Wars Compared பரணிடப்பட்டது 2016-09-28 at the வந்தவழி இயந்திரம். Clio History Journal, 2009.