ஐயோனியா (Ionia) (பண்டைய கிரேக்கம்: Ἰωνία, Ionía or Ἰωνίη, Ioníe) பண்டைய அனதோலியாவின் ஏஜியன் கடற்கரையில் (தற்கால துருக்கி) அமைந்த நகரமாகும். சிர்னா என அழைக்கப்படும் இஸ்மீர் அருகே அமைந்தது ஐயோனியா. இதன் வடக்கில் கிரேக்கர்களின் ஐயோனியா கூட்டமைப்பின் குடியிருப்புகள் கொண்டது.

ஐயோனியா (Ἰωνία)
பண்டைய அனதோலியாவின் பிரதேசம்
மைக்கேல் மலை
மைக்கேல் மலை சரணாலயம்
அமைவிடம்மேற்கு அனதோலியா
செயல்பட்ட ஆண்டுகள்கிமு 7-6ம் நூற்றாண்டுகள் (ஐயோனின் கூட்டமைப்பு)
மொழிஐயோனிய கிரேக்கம்
பெரிய நகரம்டெலோஸ்
அகாமனியப் பேரரசின் மாகாணங்கள்ஐயோனிய மாகாணம் அல்லது யௌனா
ரோமானிய மாகாணம்ஐரோப்பா-ஆசியாவில் ரோமானிய மாகாணமான ஐயோனியா
கிரேக்க-உரோமானிய ஆட்சியில் அனத்தோலியா/அனதோலியாவின் தொன்மை வாய்ந்த குடியிருப்புகளில் ஐயோனியா
கிபி 50ல் ஐயோனியா மற்றும் லிடியா
கிமு 620-600ல் துருக்கியின் எபேசஸ் நகரத்தில் கிடைத்த உலோக நாணயத்தின் முன்புறத்தில் மான்; பின்புறத்தில் சதுர வடிவ முத்திரை

ஐயோனியா பிரதேசம், பாரசீக அகாமனியப் பேரரசின் மாகாணங்களில் ஒன்றாக இருந்தது. ஐயோனியாவில் கிரேக்கர்களும், அகாமனியப் பேரரசின் பாரசீகர்களும் அதிகம் வாழ்ந்தனர்.

கிமு 499 முதல் 486 முடிய ஐயோனியாவில் கிரேக்கர்கள் கிளர்ச்சி செய்த போது, கிரேக்க-பாரசீகப் போர்கள் மூலம் கிரேக்க ஐயோனியர்களை முதலாம் டேரியஸ் ஒடுக்கினார்.

எல்லைகள் தொகு

ஐயோனியாவின் வடக்கில் எயோலசும், கிழக்கில் லிடியாவும், தெற்கில் கரியாவும், மேற்கில் ஏஜியன் கடலும் எல்லைகளாகக் கொண்டது.

புவியியல் தொகு

ஐயோனியா, வடக்கிலிருந்து தெற்காக 150 கிலோ மீட்டர் நீளமும், கிழக்கிலிருந்து மேற்காக 60 முதல் 90 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.[1]


அரசியல் தொகு

வரலாற்றில் ஐயோனியா பிரதேசம், கிரேக்க, உரோம மற்றும் பாரசீகர்களின் ஆட்சிப் பகுதியாக விளங்கியதால் இங்கு கிரேக்கர்கள் மற்றும் பாரசீகர்களின் அரசியல் செல்வாக்கு அதிகம் இருந்தது.

மக்கள் தொகையியல் தொகு

கிரேக்க வரலாற்று அறிஞர் எரோடோட்டசுவின் கூற்றுப்படி, ஐயோனியவின் 12 நகரங்களில் மக்கள் வாழ்ந்ததனர். வடக்கு ஐயோனியாவில் கிரேக்க நாட்டின் பெலிப்பினோ மக்கள் வாழ்ந்ததாக குறிப்பிடுகிறார்.[2] ஐயோனியாவின் நகரங்கள் மிலெட்டஸ், மையூஸ், பிரைனி, எபிசுஸ், கோலோபோன், லெபிடோஸ், தியோஸ், போசியா, சமோஸ் மற்றும் சியோஸ் ஆகும்.[3] இஸ்மீ எனும் ஸ்மிர்னா நகரம் பின்னர் ஐயோனியர்களின் குடியிருப்பாக மாறியது.[4] நவீன துருக்கியில் ஐயோனியா பகுதி மக்களை யுனான்கள் என்று அழைக்கின்றனர்.

வரலாறு தொகு

 
ஐயோனியா காலத்தில், ஆசியா மைனரில், ஐயோனியப் பகுதியில் (பச்சை நிறத்தில்) ஐயோனியக் கிரேக்க குடியிருப்புகள்

கிமு 16ம் நூற்றாண்டிலிருந்து, 12ம் நூற்றாண்டு வரை ஐயோனியா பகுதி, கிரேக்க இட்டையிட்டுப் பேரரசின் பேரரசின் பகுதியாக இருந்தது.

11ம் நூற்றாண்டு முதல் கி கிரேக்கர்கள் ஐயோனியாப் பகுதிகளில் குடியேறத் துவங்கினர்.

லிடியாப் பேரரசில் தொகு

கிமு 700ல் லிடியாப் பேரரசின் கீழ் ஐயோனியா சென்றது.

அகாமனிசியப் பேரரசில் தொகு

கிமு 550 முதல், முதலாம் சைரஸ் காலத்தில் அகாமனியப் பேரரசின் மாகாணங்களில் ஒன்றாக ஐயோனியா இருந்தது.[5] முதலாம் டேரியஸ், கிரேக்கர்களுடன் கிமு 499 முதல் 486 முடிய நடத்திய கிரேக்க-பாரசீகப் போர்கள் மூலம் ஐயோனியாவில் கிளர்ச்சியைத் தூண்டிய கிரேக்கர்களை அடக்கினார்.

 
15 நூற்றாண்டின் ஐயோனியாவின் வரைபடம்

கிரேக்கர் ஆட்சியில் தொகு

பேரரசர் அலெக்சாண்டர் காலத்தில், ஐயோனியா நகரங்கள் தன்னாட்சியுடன் விளங்கியது.

ஹெலனிய காலம் தொகு

பேரரசர் அலெக்சாண்டருக்குப் பின் ஹெலனிய காலத்தில், ஐயோனியா செலூக்கியப் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கியது.

உரோமர் ஆட்சியில் தொகு

கிபி 330 – 1453 வரை உரோமைப் பேரரசின் பகுதியாக ஐயோனியா விளங்கியது.

இலக்கியக் குறிப்புகள் தொகு

  • The Ionia Sanction (2011), by [Gary Corby]
  • [The Ionian Mission] (1981), by Patrick O'Brian

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. "Ionia". Encyclopædia Britannica. (1911). 
  2. Herodotus, 1.145.
  3. Herodotus, 1.142.
  4. Herodotus, 1.143, 1.149–150.
  5. "Encyclopedia of Ancient Greece". பார்க்கப்பட்ட நாள் 31 December 2014.

மேற்கோள்கள் தொகு

  • Herodotus; The Histories of Herodotus, A. D. Godley (translator), Cambridge: Harvard University Press, 1920; ISBN 0-674-99133-8. Online version at the Perseus Digital Library.
  • Jan Paul Crielaard, "The Ionians in the Archaic period: Shifting identities in a changing world," in Ton Derks, Nico Roymans (ed.), Ethnic Constructs in Antiquity: The Role of Power and Tradition (Amsterdam, Amsterdam University Press, 2009) (Amsterdam Archaeological Studies, 13), 37–84.
  • Alan M. Greaves, The Land of Ionia: Society and Economy in the Archaic Period (Chichester/Malden, MA, Wiley–Blackwell, 2010).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயோனியா&oldid=3905137" இலிருந்து மீள்விக்கப்பட்டது