அனத்தோலியா

மேற்கு ஆசியாவின் ஒரு தீபகற்பம்

அனத்தோலியா அல்லது சின்ன ஆசியா (Anatolia அல்லது Asia Minor) என்று அழைக்கப்படும் நிலம் அல்லது நிலப்பரப்பு மேற்கு மேற்காசியாவில் தற்காலத்தில் துருக்கி என்னும் நாட்டின் பெரும்பகுதியும் அதனைச் சூழ்ந்த இடத்தையும் குறிக்கும். அனத்தோலியாவின் கிழக்கிலும், மேற்கிலும் ஏஜியன் கடலும், வடக்கே கருங்கடலும், வடகிழக்கே [[காக்கேசியாவும், தென்கிழக்கே ஈரானிய மேட்டுநிலமும், தெற்கே நடுநிலக் கடலும் எல்லைகளாக கொண்டது.

துருக்கி நாட்டில் அனதோலியா பகுதிகளை காட்டும் வரைபடம்

இவ்விடம் பல கலைப் பண்பாடுகளின் உறைவிடமாக வரலாற்றில் நெடுங்காலம் இருந்து வந்துள்ளது. அக்காடியன், அசிரியர்கள், இட்டைட்டு பேரரசு, திரையன் (Trojan), பிரிகியன் (Phrygian), இலிடியன் (Lydian), கிரேக்கம், அகாமனிசியப் பேரரசு (Achaemenid), ஆர்மீனியா, உரோமானியர், குர்து மக்கள், பைசாந்தியம், அனத்தோலியன் செல்யூக்கு (Anatolian Seljuk), உதுமானியம் ஆகிய பண்பாடுகள் இவ்விடத்தில் வளர்ந்து மலர்ந்தன.[1]

சின்ன ஆசியா, ஆசியா கண்டத்தின் தற்கால துருக்கி மற்றும் ஆர்மேனியாவின் மேட்டு நிலங்களை உள்ளடக்கிய மூவலந்தீவுப் பகுதியாகும். இது உலக நாகரீகங்களின் தொட்டிலாக விளங்கிய பகுதி.[2]

துருக்கி மொழியே ஆசிய மைனரின் பெரும்பாலான மொழியாகும். கருங்கடல், ஏஜியன் கடல் மற்றும் மத்தியதரைக் கடல் ஆசிய மைனரின் மூன்று பகுதிகளை சுற்றி அமைந்துள்ளது. ஐரோப்பா கண்டம் மற்றும் ஆசிய கண்டம் ஆகியவைகளுக்கிடையே அனத்தோலியா பகுதி அமைந்துள்ளதால், இங்கு பல்வேறு மேலை நாட்டு மற்றும் கீழை நாட்டு கலாசாரங்களையும், நாகரீகங்களையும் பின்பற்றும் பல்வேறு இன மக்கள் இன்றளவும் ஆசியா மைனரில் வாழ்கின்றனர்.

கிரேக்கர்கள், ரோமானியர்கள், கோத் மக்கள், பைசாண்டியர்கள், லிடியர்கள், ஹிட்டைட்டைஸ்கள், பாரசீகர்கள் மற்றும் ஆர்மீனியர்கள் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க மக்கள் அனத்தோலியா பகுதியை கைப்பற்றி வாழ்ந்தனர்.

ஆசியா கண்டத்தின் இச்சிறு பகுதி உரோமானியப் பேரரசின் கீழ் ஒரு மாகாணமாக இருந்ததால், இப்பகுதியை பின்னாளில் சிறிய ஆசியா (சிற்றாசியா) என்றழைக்கப்பட்டது.[3] சிறிய ஆசியா பகுதியில் அமைந்த ரோய் (Troy) நகரம் புகழ் பெற்ற நகரமாக விளங்கியது.

புவியியல்

தொகு
 
ஆசியா மைனரும் மெசொப்பொத்தேமியாவும் பண்டைய காலத்தில்

துவக்க காலத்தில் அனத்தோலியா என்ற பெயர் மூவலந்தீவின் உட்புறப்பகுதிகளை குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது. பைசாண்டைனிய காலதில் அனத்தோலிகம் என்ற மறைமாவட்டம் இருந்தது. இதற்கு முந்தையக் காலங்களில் சிறிய ஆசியா என்ற பெயர் பய்படுத்தப்பட்டது. 1923 இல் துருக்கிய குடியரசு நிறுவப்பட்ட பின்னர் அனத்தோலியா என்ற சொல் கிழக்கு திரேசு தவிர்த்த அனைத்து துருக்கிக்கும் பயன்படுத்தப்படுகின்றது. நடுநிலக் கடலின் தெற்கு, மேற்குப்பகுதிகளை சுற்றியும் துருக்கியின் வடக்கிலுள்ள கருங்கடல் பகுதியும் டார்டனெல்லெசின் வடக்கு-மேற்கத்திய பகுதியும் அடங்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Anatolia HISTORICAL REGION, ASIA
  2. Asia Minor
  3. Asia Minor
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனத்தோலியா&oldid=3905146" இலிருந்து மீள்விக்கப்பட்டது