இட்டைட்டு பேரரசு

இட்டைட்டு பேரரசு (Hittites) (/ˈhɪtts/) வடமத்திய அனதோலியாவில், தற்கால துருக்கி, சிரியா மற்றும் லெபனான் பகுதிகளை, அட்டுசா எனும் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு, கிமு 1,600 முதல் கிமு 1,178 முடிய இந்திய-ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான இட்டைட்டு மொழி பேசிய இட்டைட்டு மக்கள் ஆட்சி செய்தனர்.

இட்டைட்டு பேரரசு (Hittite Empire)
கிமு 1600–கிமு 1178
கிமு 1300ல் இட்டைட்டுப் பேரரசு (நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது)
கிமு 1300ல் இட்டைட்டுப் பேரரசு (நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது)
தலைநகரம்அட்டுசா
பேசப்படும் மொழிகள்இட்டைட் மொழி, லூவியான் மொழி, அக்காடியன் மொழி, அட்டிக் மொழி
அரசாங்கம்முழு முடியாட்சி(சிறு இராச்சியம்)
அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி (மத்தியகால மற்றும் புதிய இராச்சியம்)[1]
பேரரசர் 
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
கிமு 1600
• முடிவு
கிமு 1178
முந்தையது
பின்னையது
கணேஷ்
சைரோ- இட்டைட் இராச்சியங்கள்
தற்போதைய பகுதிகள் துருக்கி
 சிரியா
 லெபனான்
இட்டையிட்டுப் பேரரசர்கள் முதலாம் சுப்பிலுலியுமா (கிமு 1350 - 1322) மற்றும் இரண்டாம் முர்சிலி (கிமு 1321–1295) ஆட்சிக் காலங்களில் விரிவாக்கப்பட்ட இட்டையிட்டு பேரரசு
இட்டையிட்டுப் பேரரசும், அதன் தலைநகரம் அட்டுசாவும்

கிமு 14ம் நூற்றாண்டின் நடுவில், இட்டையிட்டுப் பேரரசர் முதலாம் சுப்பிலுலியுமா காலத்தில், அனதோலியா மட்டுமின்றி, வடக்கு லெவண்ட் மற்றும் மேல் மெசொப்பொத்தேமியாவைக் கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தில் உச்சத்தில் இருந்தது.

கிமு 15 முதல் 13ம் நூற்றாண்டு வரை, இட்டையிட்டுபேரரசு, அண்மைக் கிழக்குப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவதற்காக, பண்டைய எகிப்து, இடைக்கால அசிரியா பேரரசு மற்றும் மிட்டன்னி (Mitanni) பேரரசுகளுடன் பிணக்குகள் கொண்டிருந்தது.

இறுதியில் அசிரியர்கள் இட்டைட்டுப் பேரரசின் பல பகுதிகளை தங்கள் இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டனர். இட்டைட்டு பேரரசின் எஞ்சிய பகுதிகளை, மேற்கு மத்திய அனதோலியாவின் பிரிகியா இராச்சியம் ஆக்கிரமித்துக் கொண்டது.[2]

கிமு 1180க்குப் பின்னர் வெண்கலக் காலத்தில், இட்டைட்டுப் பேரரசு உருக்குலைந்து, புதிய தன்னாட்சியுடன் கூடிய இட்டைட்டு குறுநில நகர அரசுகளாக சிதறுண்டது. இந்த குறுநில நகர இட்டைட்டு இராச்சியங்கள், கிமு 8ம் நூற்றாண்டில், புதிய அசிரியப் பேரரசால் உள்வாங்கப்படும் வரை ஆட்சி செலுத்தின.

இட்டைட்டு மொழி, இந்திய-ஐரோப்பிய மொழிகளில் ஒன்றான, அனதோலியா மொழிகளில் ஒன்றாகும்.[3]

யூதர்களின் பழைய ஏற்பாடு நூல்களில், இட்டையிட்டுகள் குறித்த செய்திகள் உள்ளது.[4]

இட்டையிட்டு ஆட்சியாளர்கள்

தொகு
  • பம்பா கிமு 22ம் நூற்றாண்டு
  • பிதானா
  • பியுஸ்தி
  • அனிட்டா
  • துதாலியா
  • சர்ருமா

பழைய இட்டைட்டு மன்னர்கள்

தொகு
ஆட்சியாளர் ஆட்சிக் காலம் வம்சாவளி & முக்கிய நிகழ்வுகள்
லபர்னா மரபு வழி நிறுவனர்
முதலாம் ஹட்டுசிலி என்ற இரண்டாம் லபர்னா கிமு 1586–1556
முதலாம் முர்சிலி முதலாம் ஹட்டுசிலியின் பேரன்; கிமு 1531ல் பாப்லோனை இடித்தவர்
முதலாம் ஹண்டிலி முதலாம் முர்சிலியை கொன்றவர்
முதலாம் சிதந்தா ஹண்டிலியின் மருமகன்
அம்முனா முதலாம் சிதந்தாவின் மகன்; தனது தந்தையை கொன்றவர்.
முதலாம் ஹுஸ்சியா அம்முனாவின் மகன்?
தெலிபினஸ் ஹுஸ்சியாவின் மைத்துனன்; ஹுஸ்சியாவை அரியணையிலிருந்து துரத்தியவர்

மத்தியகால இட்டைட்டு இராச்சியம்

தொகு
ஆட்சியாளர் ஆட்சிக் காலம் வம்சாவளி & முக்கிய நிகழ்வுகள்
அல்லுவம்னா கிமு 15ம் நூற்றாண்டு தெலிபினுவின் மருமகன்
இரண்டாம் ஹண்டிலி கிமு 1500-1450 அல்லுவம்னாவின் மகன்
தஹுர்வய்லி
இரண்டாம் சிதந்தா இரண்டாம் ஹண்டிலியின் மகன்
இரண்டாம் ஹுஸ்சியா இரண்டாம் சிதந்தாவின் மகன்
முதலாம் மூவாதலி கிமு1400 இரண்டாம் ஹுஸ்சியாவை கொன்று நாட்டை ஆண்டவன்

இட்டைட்டு பேரரசின் மன்னர்கள்

தொகு
 
இட்டையிட் பேரரசர் நான்காம் துதாலியா
ஆட்சியாளர் ஆட்சிக் காலம் வம்சாவளி & முக்கிய நிகழ்வுகள்
முதலாம் துதாலியா கிமு 14ம் நூற்றாண்டு மூவாதாலியை கொன்றபின் அரியணை ஏறியவர்.
முதலாம் அர்னுவந்தா துதாலியாவின் மருமகன்
இரண்டாம் ஹட்டுசிலி (?)
இரண்டாம் துதாலியா கிமு 1360? – 1344 (அர்னுவந்தா அல்லது ஹட்டுசிலியின் மகன்? )
இரண்டாம் துதாலியா (இளையவர்) இரண்டாம் துதாலியாவின் மகன்
முதலாம் சுப்பிலுலியுமா கிமு 1344–1322 இரண்டாம் துதாலியாவின் மகன்; நாட்டை விரிவாக்கினார்
இரண்டாம் அர்னுவந்தா கிமு 1322–1321 சுப்பிலுலியுமாவின் மகன்
இரண்டாம் முர்சிலி கிமு 1321–1295 முதலாம் சுப்பிலுலியுமாவின் மகன்
இரண்டாம் மூவாதாலி கிமு 1295–1272 இரண்டாம் முர்சில்யின் மகன்; 1274ல் காதேஷ் போரில் ஈடுபட்டவன்
மூன்றாம் முர்சிலி எனும் உர்கி-தேசுப் கிமு 1272–1267 இரண்டாம் மூவாதாலியின் மகன்
மூன்றாம் ஹட்டுசிலி கிமு 1267–1237 இரண்டாம் முர்சிலியின் மகன்; 1258ல் எகிப்துடன் போர் ஒப்பந்தம் மேற்கொண்டவன்.
நான்காம் துதாலியா கிமு 1237–1209 மூன்றாம் ஹட்டுசிலியின் மகன்; நிக்கிரியா போர்
குருந்தா கிமு 1228–1227 இரண்டாம் மூவாதாலியின் மகன்
மூன்றாம் அர்னுவந்தா கிமு 1209–1207 நான்காம் துதாலியாவின் மகன்
இரண்டாம் சுப்பிலுலியுமா கிமு 1207–1178 நான்காம் துதாலியாவின் மகன்; கிமு 1178ல் தலைநகரம் ஹட்டுசா வீழ்ந்தது.

இட்டைட்டு பேரரசின் தொல்பொருட்கள்

தொகு

இட்டையிட் பேரரசின் தொல்பொருட்கள் துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்ள அனதோலியா நாகரீகங்களின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Crime and Punishment in the Ancient World - Page 29, Israel Drapkin - 1989
  2. Phrygia
  3. "2006-05-02 Hittite". 7 July 2004. Archived from the original on 2017-02-03. பார்க்கப்பட்ட நாள் 2018-06-15.
  4. Biblical Hittites

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hittite Empire
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

இலக்கியங்களில்

தொகு

மேலும் படிக்க

தொகு
  • Jacques Freu et Michel Mazoyer, Des origines à la fin de l'ancien royaume hittite, Les Hittites et leur histoire Tome 1, Collection Kubaba, L'Harmattan, Paris, 2007 ;
  • Jacques Freu et Michel Mazoyer, Les débuts du nouvel empire hittite, Les Hittites et leur histoire Tome 2, Collection Kubaba, L'Harmattan, Paris, 2007 ;
  • Jacques Freu et Michel Mazoyer, L'apogée du nouvel empire hittite, Les Hittites et leur histoire Tome 3, Collection Kubaba, L'Harmattan, Paris, 2008.
  • Jacques Freu et Michel Mazoyer, Le déclin et la chute de l'empire Hittite, Les Hittites et leur histoire Tome 4, Collection Kubaba, L'Harmattan, Paris 2010.
  • Jacques Freu et Michel Mazoyer, Les royaumes Néo-Hittites, Les Hittites et leur histoire Tome 5, Collection Kubaba, L'Harmattan, Paris 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்டைட்டு_பேரரசு&oldid=4071816" இலிருந்து மீள்விக்கப்பட்டது