புது அசிரியப் பேரரசு

புது அசிரியப் பேரரசு (Neo-Assyrian Empire) இரும்புக் காலத்தில் மெசொப்பொத்தேமியாவை மையக் கொண்டு, கிமு 911 முதல் 609 முடிய ஆட்சி செய்த, [3][4][5]பண்டைய உலகின் பெரும் பேரரசுகளில் ஒன்றாகும்.[6] இது அசிரியாவின் இறுதிப் பேரரசாகும். இப்பேரரசின் புகழ்பெற்ற பேரரசர் அசூர்பனிபால் ஆவார்.

புது அசிரியப் பேரரசு 𒆳𒀸𒋩𒆠
māt Aššur  (மொழி?)[1]
[[மத்திய அசிரியப் பேரரசு|]]
 

 
[[சமாரியாவின் இசுரயேல் அரசு|]]
 
[[ஈலாம்|]]
கிமு 911–கிமு 609 [[மீடியாப் பேரரசு|]]
 
[[புது பாபிலோனியப் பேரரசு|]]
 

புதிய அசிரியப் பேரரசும் அதன் விரிவாக்கப் பகுதிகளும்
தலைநகரம் கிமு 911ல் அஸ்கூர்
கிமு 879ல் நிம்ருத்
கிமு 706ல் துர்ஷர்ருக்கின்
கிமு 705ல் நினிவே
கிமு 612ல் ஹர்ரன்
மொழி(கள்) அக்காதியம்
அரமேயம்
சுமேரிய மொழி (புழக்கத்தில் மறைந்துவிட்டது)
சமயம் அசிரிய-பாபிலோனிய சமயம்
அரசாங்கம் முடியாட்சி
அசிரியாவின் மன்னர்
 -  கிமு 911–891 இரண்டாம் ஆதாத் நிராரி (முதல்)
 -  கிமு 612–609 இரண்டாம் அசூர்-உப்பல்லித் (இறுதி)
வரலாற்றுக் காலம் இரும்புக் காலம்
 -  இரண்டாம் அதாத்-நிராரி கிமு 911
 -  நினிவே போர் கிமு 612
 -  ஹர்ரான் முற்றுகை கிமு 609
பரப்பளவு
 -  கிமு 670[2] 14,00,000 km² (5,40,543 sq mi)
தற்போதைய பகுதிகள்  ஈராக்
 சிரியா
 இசுரேல்
 துருக்கி
 எகிப்து
 சூடான்
 சவூதி அரேபியா
 யோர்தான்
 ஈரான்
 குவைத்
 லெபனான்
 சைப்பிரசு
 பலத்தீன்
Warning: Value specified for "continent" does not comply

பல வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப் படி, உலக வரலாற்றில் முதல் உண்மையான பேரரசாக அசிரிய மக்களின் இப்புதிய பேரரசு விளங்கியது.[7] அசிரியர்கள், முதலில் இரும்பு ஆயுதங்களுடன், போரில் தந்திரோபாயங்களுடன் போரிட்டதால், அசிரியர்களை போரில் எளிதில் வெல்ல இயலவில்லை. [8]

கிமு பத்தாம் நூற்றாண்டில் புது அசரியப் பேரரசின் மன்னர் இரண்டாம் அதாத் நிராரி காலத்தில் அசிரியா உலகின் சக்தி வாய்ந்த அரசுகளில் ஒன்றாக விளங்கியது.

புது அசிரியப் பேரரசர்கள் பண்டைய அண்மைக் கிழக்கு பகுதிகள், கிழக்கு மத்தியதரைக் கடற்பரப்புகள், ஆசியா மைனர், காக்கேசியா, அராபியத் தீபகற்பம் மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகளை கைப்பற்றியதுடன், தங்களது பலமிக்க போட்டி அரசுகளான பாபிலோன், ஈலாம், பாரசீகம், லிடியா, உரார்த்து, சிம்மெரியர்கள், சமாரியா, யூத அரசு, சால்டியா, கானான் மற்றும் எகிப்து இராச்சியங்களைக் கைப்பற்றி ஆண்டனர். [9][10]

பழைய அசிரிய இராச்சியத்திற்குப் (கிமு 2025–1378) பின் தோன்றிய மத்திய அசிரியப் பேரரசுக் (கிமு 1365–1050) பின் புது அசிரியப் பேரரசு பெரும் நிலப்பரப்புகளுடன் கிமு 911 முதல் கிமு 609 ஆண்டது. இப்பேரரசில் ஆட்சி மொழியாக அக்காடியன் மொழியுடன், பழைய அரமய மொழியும் இருந்தது.[11]

கிமு 627ல் புது அசிரியப் பேரரசர் அசூர்பர்னிபாலின் இறப்பிற்குப் பின்னர், அசிரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போர்களால், பேரரசு சிதறுண்டது.

கிமு 616ல் பாரசீக மன்னர் பாபிலோன், சால்டியா மற்றும் சிதியர்களுடன் கூட்டு சேர்ந்து, புது அசிரியப் பேரரசு-எகிப்திய பேரரசுகளுடன் போரிட்டனர். ஹர்ரன் நகரத்தின் வீழ்ச்சிக்குப் பின், புது அசரியப் பேரரசு, தனது விரிவாக்கப் பகுதிகளை இழந்து, தனது இராச்சியத்தை அசிரியாவில் மட்டும் நிலைநாட்டிக் கொண்டனர்.

புது அசிரியப் பேரரசு வீழ்ச்சியுற்றாலும், அசிரியர்களில் வரலாறு தொடர்ந்தது. தற்காலத்திலும் ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் அசிரியா மக்கள் வாழ்கின்றனர்.[12]

அசிரியாவின் வீழ்ச்சிக்குப் பின்தொகு

கிமு 609ல் இறுதி அசிரியப் பேரரசரின் புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், அசிரியப் பகுதிகளை புது பாபிலோனியப் பேரரசு, பண்டைய எகிப்து, மீடியா பேரரசும், கிமு 550ல் அகாமனிசியப் பேரரசும், பின்னர் சாசானியப் பேரரசும் கைப்பற்றி ஆண்டனர்.

புது அசிரியப் பேரரசின் முக்கிய ஆட்சியாளர்கள்தொகு

 
பேரரசர் திக்லாத் - மூன்றாம் பைல்செர், கிமு 745 - 727
 
பேரரசர் அசூர்பனிபால் கிமு 669 - 627
 
ஈராக்கின் துர்-சருக்கின்[17] தொல்லியல் களத்தில் கண்டெடுத்த லம்மசு சிற்பம், புது அசிரியப் பேரரசுக் காலம், கிமு 721–705, சிக்காகோ ஓரியண்டல் கழகம், சிக்காகோ பல்கலைக்கழகம்

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. "RINAP (Royal Inscriptions of the Neo-Assyrian Period Project)".
 2. Taagepera, Rein (1979). "Size and Duration of Empires: Growth-Decline Curves, 600 B.C. to 600 A.D.". Social Science History 3 (3/4): 121. doi:10.2307/1170959. 
 3. A Companion to Assyria : page 192
 4. The Cambridge Ancient History "The fall of Assyria (635–609 B.C.)"
 5. Encyclopaedia Britannica பரணிடப்பட்டது 2018-07-24 at the வந்தவழி இயந்திரம் "The Median army took part in the final defeat of the Assyrians in northern Mesopotamia (612–609); and, when the territory of Assyria was divided between Media and Babylonia, Media took Assyria with Harran."
 6. "10 FACTS ON THE ANCIENT ASSYRIAN EMPIRE OF MESOPOTAMIA". Anirudh.
 7. "Neo-Assyrian Empire". Joshua J. Mark.
 8. "Neo-Assyrian Empire". Joshua J. Mark.
 9. "Assyrian Eponym List". 14 நவம்பர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 November 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 10. Tadmor, H. (1994). The Inscriptions of Tiglath-Pileser III, King of Assyria, p.29
 11. Frye, Richard N. (1992). "Assyria and Syria: Synonyms". Journal of Near Eastern Studies. And the ancient Assyrian empire, was the first real, empire in history. What do I mean, it had many different peoples included in the empire, all speaking Aramaic, and becoming what may be called, "Assyrian citizens." That was the first time in history, that we have this. For example, Elamite musicians, were brought to Nineveh, and they were 'made Assyrians' which means, that Assyria, was more than a small country, it was the empire, the whole Fertile Crescent.
 12. "Assyria". Joshua J. Mark.
 13. Landscape and Settlement in the Neo-Assyrian Empire, T. J. Wilkinson, E. B. Wilkinson, J. Ur, M. Altaweel, Bulletin of the American Schools of Oriental Research, November 2005
 14. "Assyrian Eponym List".
 15. Bedford, P. (2001). "Empires and Exploitation: The Neo-Assyrian Empire" (PDF). WA Perth. 2008-08-27 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
 16. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; cambridge என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 17. Dur-Sharrukin

ஆதாரங்கள்தொகு

 • Roux, Georges (1982) Ancient Iraq, (Penguin, Harmondsworth)

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புது_அசிரியப்_பேரரசு&oldid=3484175" இருந்து மீள்விக்கப்பட்டது