நினிவே
நினிவே (Nineveh), பண்டைய அசிரியப் பேரரசுக்குட்பட்ட வடக்கு மெசொப்பொத்தேமியா நகரம் ஆகும். பண்டைய நினிவே நகரம் தற்போது ஈராக் நாட்டின் வடக்கில் உள்ள நினிவே ஆளுநகரகத்தில் உள்ள மோசுல் நகரத்திற்கு வடமேற்கே 2.3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது டைகிரிசு ஆற்றின் கிழக்குக் கரையில் உள்ளது. நினிவே நகரம் கிமு 911 முதல் கிமு 609 முடிய புது அசிரியப் பேரரசின் தலைநகராக விளங்கியது.
நினிவே ܢܝ݂ܢܘܹܐ | |
---|---|
பச்சை நிறத்தில் அசிரியாவும், அதன் தலைநகரம் நினிவே நகரம் | |
இருப்பிடம் | மோசுல், நினிவே மாகாணம், ஈராக் |
பகுதி | மேல் மெசொப்பொத்தேமியா |
ஆயத்தொலைகள் | 36°21′34″N 43°09′10″E / 36.35944°N 43.15278°E |
வகை | நகரம் |
பரப்பளவு | 7.5 சகிமீ (2.9 சதுர மைல்) |
வரலாறு | |
பயனற்றுப்போனது | கிமு 612 |
நிகழ்வுகள் | நினிவே போர், கிமு 612 |
புது அசிரியப் பேரரசு காலத்தில், உலகின் பெரிய நகரங்களில் ஒன்றாக நினிவே நகரம் விளங்கியது.[1] புது அசிரியப் பேரரசில் கிமு 627ல் நடைபெற்ற அசிரியர்களுக்கு எதிரான நினிவே நகரத்தில் நடைபெற்ற போரில், பாபிலோனியர்கள், மீடியர்கள், சால்டியர்கள், பாரசீகர்கள் மற்றும் சிதியர்கள் நினிவே நகரத்தை தாக்கி அழித்தனர். பின்னர் கிமு 626ல் சால்டியர்கள் புது பாபிலோனியப் பேரரசை நிறுவினர்.
புது அசியரியப் பேரரசின் தலைநகரான நினிவே நகரத்தின் சிதிலங்கள், நினிவே மாகாணத்தின் ஆளுநகரத்தில் உள்ள மோசுல் நகரம் அருகே உள்ள ஆற்றின் கரையில் இன்றும் காணப்படுகிறது. நினிவே நகரத்தின் தொல்லியல் மேடுகள் மற்றும் வடக்கு அரண்மனை தொல்லியல் களங்களிலிருந்து அசிரியப் பேரரசின் சிற்பங்கள் கிடைத்துள்ளது. நினிவே தொல்லியல் களங்களிலிருந்து கண்டெடுத்த தொல்பொருட்கள் உலகின் பல்வேறு அருங்காட்சியகங்களில் பார்வைக்கு உள்ளது.
பழைய ஏற்பாட்டில்
தொகுவிவிலியத்தின் யோனா புத்தகத்தில் நினிவே நகரத்தின் தீர்க்கதரிசி யோனா குறித்தும், நினிவே மக்கள் குறித்தும் பேசியுள்ளது.
யூதர்களின் எபிரேய வேதாகத்தில் பண்டைய அசிரியா நாட்டின் அசூர், ஊர், நிம்ருத் நகரங்களுடன் நினிவே நகரமும் குறிப்பிட்டுள்ளது.[2][3][4][5][6][7]
யூத சமயத்தினர் வாழ்ந்த பண்டைய அசிரியாவின் தலைநகரமாக நினிவே நகரம் திகழ்ந்தது.[8] யூத தீர்க்கதரிசி சக்காரியா வாழ்ந்த காலத்தில் அசிரியப் பேரரசராக எசிக்கியா இருந்தார்.
புவியியல்
தொகுமத்தியதரைக் கடலுக்கும், இந்தியப் பெருங்கடலுக்கு இடையே, மெசொப்பொத்தேமியாவின் வடக்கில், டைகிரீஸ் ஆற்றின் கரையில் அமைந்த புது அசிரியப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது நினிவே நகரம். பண்டைய அண்மை கிழக்கையும், இந்தியப் பெருங்கடலையும் இணைக்கும் முதன்மையான வணிகப் பாதையாக நினிவே நகரம் இருந்தது.[9]
பண்டைய வரலாறு
தொகுபண்டைய தொல்பொருட்கள் கொண்ட உலகின் பழைமையான, பெரிய நகரமான நினிவே, கிமு 6,000 ஆண்டின் புதிய கற்காலத்தின் பிந்தைய காலத்தைச் சேர்ந்தது.[10]
கிமு 3,000ல் நினிவே நகரத்தில், மெசொப்பொத்தேமியா பெண் கடவுளான இஸ்தரை வழிபட்டனர். நிலநடுக்க்த்தால் அழிந்து போன நினிவே நகரத்தை, கிமு 2,260ல் அக்காடியப் பேரரசு காலத்தில் மீண்டும் சீரமைத்து நிறுவப்பட்டது.
அசிரியப் பேரரசில்
தொகுகிமு 1800ல் பழைய அசிரியப் பேரரசு ஆட்சியில், நினிவே நகரம் இஸ்தர் எனும் பெண் கடவுளை வழிபடும் மையமாக விளங்கியது.
அசிரிய நகரமான நினிவே கிமு 1,400 முதல் 50 ஆண்டுகள் வரை மித்தானி இராச்சியத்தின் கீழ் சிற்றரசாக இருந்தது. கிமு 1,365ல் அசிரியப் பேரரசர் அசூர்-உபாலித், நினிவே நகரத்தை கைப்பற்றி மத்திய அசிரியப் பேரரசை (கிமு 1365 – 1050) நிறுவினார்.[11]
பண்டைய அண்மை கிழக்கின் முக்கியமான அசூர் நகரம், பழைய அசிரியப் பேரரசு (கிமு 2025–1750), மத்திய அசிரியப் பேரரசு (கிமு 1365–1050) மற்றும் புது அசிரியப் பேரரசுகளின் (கிமு 911–608) தலைநகரமாக விளங்கியது.
புது அசிரியப் பேரரசர் இரண்டாம் அசூர்-நசிர்-பால் ஆட்சியில் (கிமு 883–859), நினிவே நகரத்தில் புதிய வழிபாட்டு கட்டிடங்கள் எழுப்பப்பட்டது.
நினிவே அரண்மனை
தொகுகிமு 700ல் பெரிய அரண்மனைகளுடன் கூடியிருந்த நினிவே நகரத்தின் அரண்மனை 530 x 242 மீட்டர் நீள அகலத்துடன், சிற்பங்களுடன் கூடிய 80 அறைகளுடன் இருந்தது. மேலும் இவ்வரண்மனையில் ஆப்பெழுத்துகள் கொண்ட பலகைகள் கொண்டிருந்தது. அரண்மனையின் 22 மீட்டர் ஆழமுள்ள அடிக்கல் செங்கல், சுண்ணாம்பு மற்றும் களிமண்னால் கட்டப்பட்டது.
கிமு 612ல் நடைபெற்ற நினிவே போரின் போது, பாபிலோனியர்கள், சால்டியர்கள், பாரசீகர்கள், மீடியர்களின் தொடர் தாக்குதல்களால், புது அசிரியப் பேரரசின் தலைநகரான நினிவே நகரத்தின் செழிப்பு குறையத் துவங்கியது.
கிமு 612 முதல் மனிதர்கள் வாழ இயலாத பகுதியாக இருந்த நினிவே நகரம், பின்னர் பாரசீகர்களின் அகாமனிசியப் பேரரசின் (கிமு 550 – 330) கீழ் வந்ததது. பின்னர் நினிவே நகரம் கிமு 320ல் பேரரசர் அலெக்சாந்தர் ஆட்சியின் கீழ் சென்றது. பின்னர் சசானியப் பேரரசு (கிபி 224 – 651) ஆட்சியிலும்; கிபி 637 முதல் இசுலாமிய கலீபாக்களின் ஆட்சியின் கீழ் நினிவே நகரம் இருந்தது.
நினிவே போர்
தொகுநினிவே போர் கிமு 612-இல் புது அசிரியப் பேரரசிடமிருந்து நினிவே நகரத்தைக் கைப்பற்றுவதற்கு நடந்த போராகும். இப்போரின் முடிவில் மீடியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் 750 எக்டேர் பரப்பளவு கொண்ட உலகின் பெரும் நகரங்களில் ஒன்றான நினிவே நகரத்தை கைப்பற்றினர். இப்போரின் முடிவில் புது அசிரியப் பேரரசு நலிவுறத் தொடங்கியதுடன், புது பாபிலோனியப் பேரரசு எழுச்சியுறத் துவங்கியது.
நினிவே அகழாய்வு
தொகு1842ல் பிரான்சு நாட்டின் பவுல் எமிலி பொட்டா என்பவர், தற்கால ஈராக் நாட்டின் மோசுல் நகரத்தின் அருகே டைகிரீஸ் ஆற்றின் கரையில் அகழாய்வு மேற்கொண்டதில், நினிவே நகரத்தின் முற்றிலும் சிதிலமடைந்த அரண்மனை போன்ற கட்டிடங்களையும், மண் மேடுகளையும் கண்டறிந்தார்.
1847ல் பிரித்தானிய அரசியல் வல்லுனர் ஆஸ்டின் ஹென்றி லேயர்டு என்பவர் நினிவே நகரத்தின் சிதிலமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தார்.[13][14] 1853ல் ஆஸ்டின் ஹென்றி லேயர்டு, நினிவே நகரக் கோட்டைச் சுவர்களில் 22,000 ஆப்பெழுததுக்களுடன் கூடிய, 71 அறைகள் கொண்ட சிதிலமடைந்த ஒரு அரண்மனையை அகழாய்வில் கண்டறிந்தார்.[15] நினிவே அகழாய்வுகள், கிமு 911 முதல் 609 முடிய ஆட்சி செய்த புது அசிரியப் பேரரசின் அரசியல், பண்பாடு மற்றும் நாகரீகத்தை படம் பிடித்து காட்டுகிறது. நினிவே தொல்லியல் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
புது அசிரியப் பேரரசின் நினிவே நகரத்தில் வாழ்ந்த யூத சமய தீர்க்கதரிசி யோனா வாழ்ந்த மண்மேடுகள் மற்றும் நினிவே நகரத்தின் 12 கிமீ சுற்றளவு கொண்ட நகரக் கோட்டைச் சுவர்கள் கண்டறியப்பட்டுள்ளது.
நினிவே நினைவுச் சின்னங்களை அழித்தல்
தொகு24 சூலை 2014ல் இசுலாமிய அரசு பயங்கரவாதிகளால் பண்டைய நினிவே நகரத்தின் 12 கிமீ சுற்றளவு கொண்ட சுவர் குண்டுகள் வைத்து தகர்த்தனர்.[16]இசுலாமிய அரசுப் படைகள், 2016ம் ஆண்டின் நடுவில், பண்டைய நினிவே நகரத்தின் எஞ்சியிருந்த தொல்லியல் நினவுச் சின்னக் கட்டிடங்களை குண்டுகள் வைத்து தகர்த்தெரிந்தனர். சனவரி 2017ல் ஈராக்கிய படைகள் நினிவே நகரத்தை இசுலாமிய அரசின் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டனர்.
2700 ஆண்டுகள் பழமையான பாறைச் சிற்பங்கள் கண்டுபிடிப்பு
தொகு2016-ஆம் ஆண்டில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) தீவிரவாதிகள் அழித்த பண்டைய நினிவே நகரத்தின் மாஷ்கி வாயிலை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட அமெரிக்க-ஈராக் தொல்லியல் ஆய்வாளர்கள், 2022-ஆம் ஆண்டில் மோசூல் நகரத்தில், 2700 ஆண்டுகள் பழமையான பாறை புடைப்புச் சிற்பங்கள் கண்டுபிடித்தனர். இவை எட்டு பளிங்குப் படிவப் போர்க் காட்சிகள், திராட்சை கொடிகள் மற்றும் பனை மரங்களைக் காட்டுகிறது. மேலும் கிமு 705 முதல் 681 வரை நினிவே நகரத்தை ஆட்சி செய்த புது அசிரியப் பேரரசர் சென்னாகெரிப் காலத்தைச் சேர்ந்தவை என்று ஈராக்கின் பழங்கால மற்றும் பாரம்பரிய வாரியம் தெரிவித்துள்ளது.[17][18] [19]
நினிவே தொல்லியல் எச்சங்கள்
தொகு-
வர்ணம் தீட்டிய பானை மீது விலங்கு உருவங்கள், கிமு 2800-2600
-
வர்ணம் தீட்டப்பட்ட ஜாடி
-
வர்ணம் தீட்டப்பட்ட கிண்ணம்
-
செம்தேத் நசிர் காலத்திய மட்பாண்டங்கள்
இதனையும் காண்க
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- ↑ Matt T. Rosenberg. "Largest Cities Through History". geography.about.com. Archived from the original on 18 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 May 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Samuel Shuckford; James Talboys Wheeler (1858), The sacred and profane history of the world connected, vol. Vol.1, pp. 106–107
{{citation}}
:|volume=
has extra text (help) - ↑ "Jubilees 9". www.pseudepigrapha.com. பார்க்கப்பட்ட நாள் 17 November 2017.
- ↑ Greek Septuagint.
- ↑ Geneva Bible.
- ↑ 1611 King James Bible.
- ↑ New King James Version.
- ↑ 2 Kings 19:36
- ↑ "Proud Nineveh" is an emblem of earthly pride in the Old Testament prophecies: "And He will stretch out His hand against the north And destroy Assyria, And He will make Nineveh a desolation, Parched like the wilderness." (Zephaniah 2:13).
- ↑ Kouyounjik / Nebi Yunis (ancient: Nineveh) பரணிடப்பட்டது 2020-11-05 at the வந்தவழி இயந்திரம் colostate.edu
- ↑ Genesis 10:11 attributes the founding of Nineveh to an Asshur: "Out of that land went forth Asshur, and builded Nineveh".
- ↑ "Wall panel; relief British Museum". The British Museum (in ஆங்கிலம்).
- ↑ A. H. Layard, Nineveh and Its Remains, John Murray, 1849
- ↑ A. H. Layard, The Monuments of Nineveh; From Drawings Made on the Spot, John Murray, 1849
- ↑ John Malcolm Russell, From Nineveh to New York: The Strange Story of the Assyrian Reliefs in the Metropolitan Museum & the Hidden Masterpiece at Canford School, Yale University Press, 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-06459-4
- ↑ "Officials: ISIS blows up Jonah's tomb in Iraq". CNN.com. 2014-07-24. பார்க்கப்பட்ட நாள் 2014-07-24.
- ↑ இராக்கில் ஐஎஸ் அமைப்பால் அழிக்கப்பட்ட மாஷ்கி கேட் பகுதியில் 2,700 ஆண்டுகள் பழமையான புடைப்புச் சிற்பங்கள்
- ↑ 2,700-Year-Old Rock Carvings Discovered in Iraq During Restoration of Damaged Mashki Gate
- ↑ Ancient carvings found in Iraq amid work to restore Mashki Gate
- ↑ M. E. L. Mallowan, "The Bronze Head of the Akkadian Period from Nineveh", Iraq Vol. 3, No. 1 (1936), 104–110.
மேற்கோள்கள்
தொகு- This article incorporates text from a publication now in the பொது உரிமைப் பரப்பு: Easton, Matthew George (1897). "Nineveh". Easton's Bible Dictionary (New and revised). T. Nelson and Sons.
- Russell, John Malcolm (1992), Sennacherib's "Palace without Rival" at Nineveh, University Of Chicago Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-73175-8
- Barnett, Richard David (1976), Sculptures from the north palace of Ashurbanipal at Nineveh (668-627 B.C.), British Museum Publications Ltd, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7141-1046-9
- Campbell Thompson, R.; Hutchinson, R. W. (1929), A century of exploration at Nineveh, Luzac
- Bezold, Carl, Catalogue of the Cuneiform Tablets in the Kouyunjik Collection of the British Museum
- Volume I, 1889
- Volume II, 1891
- Volume III, 1893
- Volume IV, 1896
- Volume V, 1899
- Catalogue of the Cuneiform Tablets in the Kouyunjik Collection of the British Museum, British Museum
- King, W. L. (1914), Supplement I
- Lambert, W. G. (1968), Supplement II
- Lambert, W. G. (1992), Supplement III, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7141-1131-7
- Liverani, Mario (2016) [2013], Immaginare Babele [Imagining Babylon: The Modern Story of an Ancient City], translated by Campbell, Alisa, De Gruyter, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61451-602-6
- Scott, M. Louise; MacGinnis, John (1990), Notes on Nineveh, Iraq, vol. 52, pp. 63–73
- Trümpler, C., ed. (2001), Agatha Christie and Archaeology, The British Museum Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7141-1148-3 - Nineveh 5, Vessel Pottery 2900 BC
- Leick, Gwendolyn (2010), The A to Z of Mesopotamia, Scarecrow Press - Early worship of Ishtar, Early / Prehistoric Nineveh
- Durant, Will (1954), Our oriental heritage, Simon & Schuster – Early / Prehistoric Nineveh
வெளி இணைப்புகள்
தொகு- Joanne Farchakh-Bajjaly photos பரணிடப்பட்டது 2012-10-09 at the வந்தவழி இயந்திரம் of Nineveh taken in May 2003 showing damage from looters
- John Malcolm Russell, "Stolen stones: the modern sack of Nineveh" in Archaeology; looting of sculptures in the 1990s
- Nineveh page பரணிடப்பட்டது 2015-09-26 at the வந்தவழி இயந்திரம் at the British Museum's website. Includes photographs of items from their collection.
- University of California Digital Nineveh Archives A teaching and research tool presenting a comprehensive picture of Nineveh within the history of archaeology in the Near East, including a searchable data repository for meaningful analysis of currently unlinked sets of data from different areas of the site and different episodes in the 160-year history of excavations
- CyArk Digital Nineveh Archives பரணிடப்பட்டது 2011-06-13 at the வந்தவழி இயந்திரம், publicly accessible, free depository of the data from the previously linked UC Berkeley Nineveh Archives project, fully linked and georeferenced in a கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)/CyArk research partnership to develop the archive for open web use. Includes creative commons-licensed media items.
- Photos of Nineveh, 1989–1990
- ABC 3 பரணிடப்பட்டது 2011-05-14 at the வந்தவழி இயந்திரம்: Babylonian Chronicle Concerning the Fall of Nineveh
- Layard's Nineveh and its Remains- full text
- A history பரணிடப்பட்டது 2017-07-11 at the வந்தவழி இயந்திரம்
- Austen Henry Layard – Nineveh and Its Remains full book readable