சாலடிய நாகரிகம்

புது அசிரியப் பேரரசு வீழ்ச்சியின் விளிம்பில் இருந்த போது சாலடியர் என்ற செமிட்டிக் இனத்தவர் பபிலோனியாவைக் கைப்பற்றி புது பாபிலோனியப் பேரரசை நிறுவி கிமு 626–கிமு முதல் கிமு 539 முடிய 87 ஆண்டுகள் ஆண்டனர். அதை சாலடிய நாகரிகம் என்பர். இவர்கள் பாரசீக வளைகுடாவின் முனையிலிருந்து படை எடுத்து பபிலோனியாவைக் கைப்பற்றியதால் புதிய பாபிலோனியர்கள் என்று கூறப்பட்டனர்.[1]

வரலாறு

தொகு

நெபொ போலசார் என்ற சாலடியத் தலைவர் கி.மு.625ல் நினிவே நகரை கைப்பற்றி மார்டுக் கடவுளுக்கு பெரிய கோயிலை கட்டினார். அதன் பிறகு நெபுகண்ட்நெசார் என்ற சாலடிய அரசர்களில் உயர்ந்தவராகக் கருதப்பட்டார். இவர் எகிப்தியர்களை ஒடுக்கினார். செருசலேம் நகரை கைப்பற்றினார். அங்கிருந்த யூதர்களை அடிமைப்படுத்தி பாபிலோனியாவிற்கு கொண்டுவந்தார். டைர் என்ற் நகரைத் தவிர அனைத்து பினீஷிய நகரங்களையும் கைப்பற்றினார். இவ்வாறு சிரியா, பாலஸ்தீனம், யூப்ரட்டீஸ் நதிப் பள்ளத்தாக்கு ஆகியவை இவரது ஆட்சிக்கு கீழ் வந்தன.

கட்டிடக்கலை

தொகு

நெபுகத் நேசர் கலை ஈடுபாடு மிக்கவர். இவரால் யூப்ரட்டீஸ் நதியின் இருபுற்மும் இணைக்க பாலம் கட்டப்பட்டது. இவரால் பாபிலோன் நகரைச் சுற்றி மதிலும் அகலியும் கட்டப்பட்டன. மார்டுக் கடவுளுக்கான பெரிய கோயிலை புதுப்பித்தார். அதனருகில் 300 அடி கோபுரம் 7 அடுக்குடன் கட்டப்பட்டது.

தொங்கும் தோட்டம்

தொகு

பாபிலோனின் தொங்கு தோட்டமும் (Hanging Gardens of Babylon) (செமிராமிஸின் தொங்கு தோட்டம் எனவும் அறியப்படுகிறது), பாபிலோனின் சுவர்களும் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவ்விரண்டும் நெபுகத் நேசரால் தற்போதைய ஈராக் நாட்டினுள் அடங்கும் பாபிலோனில் கி.மு 600 அளவில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் இது உண்மையிலேயே இருந்ததா என்பது பற்றிய சந்தேகமும் இன்னும் உள்ளது. ஸ்ட்ராபோ (Strabo), டையோடோரஸ் சிகுலஸ் (Diodorus Siculus) போன்ற கிரேக்கச் சரித்திர ஆசிரியர்களால் விரிவாகப் பதியப்பட்டுள்ள இத் தொங்கு தோட்டம் இருந்தது பற்றி, பபிலோனிலிருந்த மாளிகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மேலோட்டமான சில சான்றுகள் தவிர, வேறு சான்றுகள் மிகக் குறைவாகவேயுள்ளன. இது பற்றிய வியத்தகு விவரணங்களை நியாயப்படுத்தக் கூடிய போதிய சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை.

வானியல்

தொகு

விண்மீன்களை குறியீடுகள் மூலம் குறித்தனர். அதன் மூலம் மனிதன் பிறந்த நேரத்தையும் காலத்தையும் அறிந்து அவன் எதிர்காலத்தை குறித்தனர். காலத்தையும் கிரகணத்தையும் துல்லியமாக கணக்கிட்டனர். வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை மணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை மணி நேரத்திற்கும் 120 நிமிடங்கள் என்று உலக்த்துக்கு அறிவித்தவர்கள் சாலடியர்களே. நபு ரிமானு என்பவர் வானியல் அறிவினால் ஒரு ஆண்டிற்குறிய நாட்களை கணக்காக அறிந்தார். கிடின்னு என்பவர் பூமியின் அச்சில் அவ்வப்பொழுது எவ்வாறு மாற்றம் ஏற்படுகிறது என்று கண்டறிந்தார்.

தத்துவம்

தொகு

மறு உலக வாழ்க்கையில் சாலடியர் அக்கறை கொள்ளவில்லை. இயற்கையில் புதியதாய் அச்சமுடையதாய் கண்டதைக் கொண்டு தெய்வ நம்பிக்கையை வளர்த்தனர். இறைவன் மீது பலவித உயர்ந்த பாடல்கள் பாடப்பட்டன. கடவுளர்கள் அதிக தூரத்தில் உள்ள விண்மீன்களில் இருந்து கொண்டு மக்களை ஆட்டுவிப்பதாக நம்பினர். இதனால் தன்னம்பிக்கை மக்களிடையே தலை விரித்தாடியது. தவறு செய்வது தவிர்க்க முடியாதது என நம்பினர். கிடைத்த வாழ்க்கையை இன்பமுடன் அனுபவிக்க வேண்டும் என்று இறைவன் மீது பழியைப் போட்டு வாழ்க்கையை அனுபவித்தனர்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்

தொகு
  1. நாகரிக வரலாறு (பண்டைக் காலம்), டாக்டர்.ஏ.சுவாமிநாதன், ராகவேந்திரா அச்சகம், reference book for TNPSC group 1 & M.A. History
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலடிய_நாகரிகம்&oldid=3714918" இலிருந்து மீள்விக்கப்பட்டது