முதன்மை பட்டியைத் திறக்கவும்

அசிரிய மக்கள்

அசிரியர்கள் (Assyrians) எனப்படுவோர் தற்போதைய ஈராக், ஈரான், துருக்கி, மற்றும் சிரியா ஆகிய நாடுகளைத் தாய்நாடாகக் கொண்ட ஒரு இனக்குழு ஆகும்[14]. கடந்த 20ம் நூற்றாண்டில் இவர்களில் பலர் காக்கேசியா, வட அமெரிக்கா, மற்றும் மேற்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கு குடி பெயர்ந்தனர்.

அசிரியர்கள்
Assyrians
Āṯūrāyē / Āshūrāyē /Sūrāyē
மொத்த மக்கள்தொகை
அண். 3.3 மில்லியன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 ஈராக்1,300,000[1]
 சிரியா75,000[2]
 ஈரான்80,000[3]
 துருக்கி5,000[4]
 ஐக்கிய அமெரிக்கா83,000[5]
 சுவீடன்80,000[6]
 யோர்தான்77,000[7][8]
 ஆத்திரேலியா24,000[9]
 செருமனி23,000[மேற்கோள் தேவை]
 பிரான்சு15,000[10]
 உருசியா14,000[11]
 கனடா7,000[12]
 ஆர்மீனியா3,409[13]
மொழி(கள்)
புதிய அரமேயம்
சமயங்கள்
சிரியக் கிறிஸ்தவம்
(various Eastern denominations)
தொடர்புள்ள இனக்குழுக்கள்
வேறு செமிட்டிக் மக்கள்

பல்லாயிரக்கணக்கான அசிரியர்கள் ஈராக்கிய அகதிகளாக ஐரோப்பா, முன்னாள் சோவியத் நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிரியா, ஜோர்தான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். முதலாம் உலகப் போர் காலத்திலும், ஒட்டோமான் பேரரசு உடைந்த காலத்திலும் இவர்கள் தங்கள் நாடுகளை விட்டுத் தப்பி ஓடினர். இதனை விட ஈரானில் இஸ்லாமியப் புரட்சி[15], ஈராக்கில் ஆகஸ்ட் 7, 1933 இல் இடம்பெற்ற படுகொலைகள், ஈராக்கில் 1914-1920 காலப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் போன்ற நிகழ்வுகளும் அசிரியர்களின் இடப்பெயர்வுக்குக் காரணங்களாக அமைந்தன.

மிக அண்மையில் 2003 இல் ஆரம்பித்த ஈராக்கியப் போரை அடுத்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஈராக்கியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இவர்களில் 40 விழுக்காட்டினர் அசிரியர்கள் ஆவர்[16].

இசுலாமிய நாடுகளில் அசிரிய மக்கள் கொல்லப்படுதல்தொகு

  • சிரியா உள்நாட்டுப் போரில் 2012 முதல் 2017 முடிய அசிரிய மக்களை இசுலாமிய அரசு பயங்கரவாதிகள் மற்றும் பிற இசுலாமிய பயங்கரவாத அமைப்புகள் தாக்கிக் கொன்றதாலும், அசிரியர்களின் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டதாலும், அசிரிய மக்கள் சிரியாவை விட்டு அகதிகளாக வெளியேறினர். [18]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிரிய_மக்கள்&oldid=2598918" இருந்து மீள்விக்கப்பட்டது