மேற்கு ஐரோப்பா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மேற்கு நாடுகள் என்பது பொதுவாக ஐரோப்பாவின் மேற்கு அரைப் பகுதியில் உள்ள நாடுகளைக் குறிக்கும். எனினும், இந்த வரைவிலக்கணம் சூழ்நிலையைப் பொறுத்தே அமைவதுடன், இதற்குப் பண்பாடு மற்றும் அரசியல் உட்பொருள்களும் உள்ளன. இன்னொரு வரைவிலக்கணம், மேற்கு ஐரோப்பாவை, நடு ஐரோப்பாவுக்கு மேற்கே உள்ள ஒரு பண்பாட்டுப் பகுதி என்கிறது. பனிப்போர்க் காலத்தில், இத்தொடர், பொதுவுடமை சாராத நாடுகளை மட்டுமே குறிக்கவே பயன்பட்டது. இதனால், புவியியல் அடிப்படையில் நடுப்பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் உள்ள நாடுகளில் சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கிற்கு உட்படாத நாடுகளும் மேற்குநாடுகளுள் உள்ளடக்கப்பட்டன. அதேவேளை மேற்கு ஐரோப்பாவுள் அடங்கிய சோவியத்தின் நட்புநாடுகள் இதற்குள் அடக்கப்படவில்லை.

இவற்றோடு, இத்தொடருக்கு, புவியியல், பொருளியல், பண்பாட்டு அம்சங்களும் உண்டு. இரண்டாம் உலகப்போர் முடிந்ததில் இருந்து, இத்தொடர், உயர் வருமானம் கொண்ட ஐரோப்பாவின் வளர்ந்த நாடுகளைக் குறிக்கவே பயன்படுகிறது.