கிரேக்கம் (நாடு)

தெற்கு ஐரோப்பிய நாடு
(கிரேக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிரேக்கம் (கிரேக்க மொழி:Ελλάδα, அல்லது Ελλάς, முறைப்படி கிரேக்கக் குடியரசு, கிரேக்க மொழியில்: எல்லிநீக்கி டீமொக்ராத்தியா; ஆங்கிலம்: Hellenic Republic (Ελληνική Δημοκρατία,[1] என்னும் நாடு பால்க்கன் மூவலந்தீவுக்குத் தென்புறத்தில் அமைந்துள்ளது. இந்நாட்டுக்கு வடக்கே அல்பேனியாவும், மாசிடோனியாவும், பல்கேரியாவும், கிழக்கே துருக்கியும் அமைந்துள்ளது. ஏஜியன் கடல் கிழக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளது. மேற்கே அயோனியன் கடல் உள்ளது. கிழக்கு நடுத்தரைக் கடல் பகுதிகளில் பற்பல சிறு சிறு கிரேக்கத் தீவுகள் அமைந்துள்ளன. கிரேக்கமானது ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை இணைக்கும் பாதையில் அமைந்துள்ளது.[2][3][4]

கிரேக்கக் குடியரசு
Ελληνική Δημοκρατία
எல்லிநீக்கி டீமொக்ராட்டியா
கொடி of கிரேக்கம்
கொடி
நாட்டுக் கேடயச் சின்னம் of கிரேக்கம்
நாட்டுக் கேடயச் சின்னம்
குறிக்கோள்: Ελευθερία ή θάνατος
Eleftheria i thanatos  "விடுதலை அல்லது சாவு"
நாட்டுப்பண்: Ύμνος εις την Ελευθερίαν (இம்னொஸ் இஸ் தின் எலெஃவ்த்தெரியன் Ímnos is tin Eleftherían) விடுதலைப் பள்ளு
கிரேக்கம்அமைவிடம்
தலைநகரம்எத்தன்ஸ்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)கிரேக்கம்
மக்கள்கிரேக்கர்
அரசாங்கம்நாடாளுமன்ற முறைக்  குடியரசு
காரொலோஸ் பப்பூலியாஸ்
கோஸ்ட்டஸ் கரமன்லிஸ்
• நாடாளுமன்றத் தலைவர்
தற்போது எவருமில்லை
அமைப்பு
• விடுதலைப்பெற்றது உதுமானியப் பேரரசில் இருந்து
1 ஜனவரி 1822
3 பெப்ரவரி 1830
• அரசியலமைப்பு
11 ஜூன் 1975
1 ஜனவரி 1981
பரப்பு
• மொத்தம்
131,990 km2 (50,960 sq mi) (97ஆம்)
• நீர் (%)
0.8669
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
11,170,957 [2] (74வது)
• 2001 கணக்கெடுப்பு
10,964,020 [3]
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 (IMF) மதிப்பீடு
• மொத்தம்
$305.595 பில்லியன் (36வது)
• தலைவிகிதம்
$27,360 (27வது)
மொ.உ.உ. (பெயரளவு)2007 IMF மதிப்பீடு
• மொத்தம்
$341.826 பில்லியன் (27வது)
• தலைவிகிதம்
$30,603 (24வது)
ஜினி (2000)35.44
Error: Invalid Gini value
மமேசு (2004) 0.921
Error: Invalid HDI value · 24வது
நாணயம்யூரோ (€)³ (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (கிழக்கு ஐரோப்பிய நேரம்)
அழைப்புக்குறி30
ஐ.எசு.ஓ 3166 குறியீடுGR
இணையக் குறி.gr5
  1. மினோவன் மற்றும் சிக்லாடிக் நாகரிகங்கள்.
  2. டிரெபிசாண்டுப் பேரரசு.
  3. 2001: முன்னர் டிராக்மா.
  4. UNU/Wider World Income Inequality Database.
  5. .eu டுமேன் மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பகிரப்பட்டுப் பாவிக்கப்படுகிறது.
4.கிரீற்று(crete)பகுதி
எத்தன்ஸில் உள்ள எத்தீனா பெண்கடவுளுக்கு எழுப்பிய பார்த்தெனொன் கோயில்

வரலாறு

தொகு

மைசீனியர்கள் உள்ளிட்ட இந்தோ-யூரோ மக்கள் கி.மு.2000 ஆம் ஆண்டளவில் கிரேக்கத்தில் குடியேறினர். கி.மு.1200ஆம் ஆண்டளவில் டோரியர் என்னும் மற்றோர் இந்தோ-யூரோ குழுவினர் கிரேக்கத்தைக் கைப்பற்றியதை அடுத்து, இங்கு இருண்ட யுகம் ஆரம்பமாகியது. இந்த இருண்ட யுகத்தின் இறுதிக் கட்டமாகிய கி.மு.750 ஆம் ஆண்டின் பின்னர் கலை, இலக்கியம், வர்த்தகம், அரசியல், தத்துவம் என பல்வேறு துறைகளில் வியத்தகு வளர்ச்சி அடைந்து வளம் பொருந்திய நாடாக மாறியது.

கி.மு.431 முதல் கி.மு.403 வரை நடைபெற்ற பாபிலோனேசியன் யுத்தத்தால் நாடு பெரிதும் பலவீனமடைய, மன்னர் இரண்டாம் பிலிப்பும் மகனும் மாசிடோனியாவின் மகா அலெக்சாண்டரினால் கைதுசெய்யப்பட்டதையடுத்து, கிரேக்கம் என்றும் கிரேக்கர்கள் என்ற அடையாளமும் நிலைநாட்டப்பட்டது. கி.மு.2 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பரிசுத்த உரோமானியப் பேரரசால் கைப்பற்றப்பட்டது. பின்னர் 1460 இல் ஒட்டோமன் பேரரசின் கீழ் வந்தது. 1821 இல் கிரேக்க சுதந்திரத்திற்கான யுத்தம் ஆரம்பமானது. 1821 மார்ச் மாதம் 17 ஆம் திகதியில் சுதந்திரப்பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது.[5] பின்னர் 1827 இல் ஒட்டோமன் பேரரசிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது ஜெர்மனியின் பிடியில் சிக்கியது. 1967 இல் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியில் மன்னர் கொன்ஸ்தாந்தின் நாட்டைவிட்டு ஓடினார். 1974 இல் மன்னராட்சி முடிவுக்கு வந்து, 1995 இற்குப் பின்னர் குடியரசானது.

கலாச்சரம்

தொகு

கிரேக்கத்தில் ஆரம்பத்தில் பாரம்பரிய கிரேக்க கலாச்சாரம் நிலவியபோதும், பிற்காலத்தில் பரிசுத்த உரோமானியப் பேரரசின் தாக்கமும் பைசாந்தியப் பேரரசின் செல்வாக்கும் கிரேக்க நாட்டின் கலாச்சாரத்தை நிர்ணயித்தன. பின்னர் கிரேக்கத்தின் கலாச்சாரத்தில் ஒட்டோமன் பேரரசு, வெனீஷியக் குடியரசு, ஜெனோயிஸ் குடியரசு, பிரித்தானியக் குடியரசு என்பன நவீன கிரேக்க நாகரிகத்தில் செல்வாக்குச் செலுத்தின. எனினும், சுதந்திரத்திற்கான கிரேக்க யுத்தமானது அவர்களின் பன்முக கலாச்சாரத்தைப் பின்தள்ளிப் பாரமரிய கலாச்சாரத்தை மீண்டும் நிலைநிறுத்தியது.

காலநிலை

தொகு

கிரேக்க நாட்டின் காலநிலையானது, மத்திய தரைக்கடல் காலநிலையைச் சார்ந்ததாகும். மிதமானதும் உலர்ந்ததும் பிரகாசமான சூரியஒளியும் கொண்டதாகக் கோடைகாலம் காணப்படுகின்றது. மாரிகாலம் குளிர் நிறைந்ததாகவும் மெல்டிமி என்ற காற்றின் செல்வாக்கால் சிறிது மழை வீழ்ச்சியும் காணப்படுகின்றது.

நிதி நெருக்கடி

தொகு

சர்வதேச நாணய நிதியத்திடம் [6] இந்த நாடு வாங்கிய கடனை 2015 ஜூலை மாதம் முதலாம் தேதி அன்று திருப்பிச்செலுத்த முடியவில்லை. இந்த நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் பங்கு சந்தையும் உடனடியாக மூடப்பட்டது. அதனால் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்துத்தரும்படி கேட்டுக்கொண்டுள்ளது.[7]

மாசிடோனியா பெயர் சர்ச்சை

தொகு
 
மாசிடோனியா குடியரசு (இளம் சிவப்பு), கிரீஸ் நாட்டின் மாசிடோனியா (கரும் பச்சை நிறம்) பிரதேசங்களின் புவியியலைக் காட்டும் வரைபடம்
  கிரீஸ் நாட்டின் வடக்கில் மாசிடோனியா பிரதேசம் (கரும் பச்சை நிறம்)
  மாசிடோனியா குடியரசு (இளம் சிவப்பு நிறம்)

1992ல் யூகோஸ்லாவியா உடைந்த பிறகு மாசிடோனியா சுதந்திரம் பெற்றது. பேரரசர் அலெக்சாந்தர் ஆண்ட, கிரீஸ் நாட்டின் வடக்கு பகுதியும் மாசிடோனியா என அழைக்கப்படுவதால், இப்பகுதிக்கும் அண்டை நாடான மாசிடோனியா நாடு உரிமை கோரலாம் என நீண்ட காலமாக கிரீஸ், மாசிடோனியா நாட்டுடன் பிணக்கு கொண்டிருந்தது.[8]. இதனால் மாசிடோனியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைய வாய்ப்பு இல்லாது போயிற்று.

30 வருட சர்ச்சைக்கு பிறகு, கிரீசின் அண்டை நாடான மாசிடோனியா, வடக்கு மாசிடோனியா என பெயர் மாற்றம் செய்ய இரு நாடுகளும் சூன், 2018ல் ஒப்பந்தம் செய்துள்ளது.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. "World Factbook - Greece: Government". CIA. www.cia.gov. 2007-03-15. Archived from the original on 2016-08-25. பார்க்கப்பட்ட நாள் 2007-04-07.
  2. Chrēstos G. Kollias; Gülay Günlük-Şenesen; Gülden Ayman (2003). Greece and Turkey in the 21st Century: Conflict Or Cooperation : a Political Economy Perspective. Nova Publishers. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59033-753-0. பார்க்கப்பட்ட நாள் 12 ஏப்ரல் 2013. Greece's Strategic Position In The Balkans And Eastern Mediterranean Greece is located at the crossroads of three continents (Europe, Asia and Africa). It is an integral part of the Balkans (where it is the only country that is a member of the ...) {{cite book}}: Check date values in: |accessdate= (help); no-break space character in |quote= at position 152 (help)
  3. Christina Bratt Paulston; Scott F. Kiesling; Elizabeth S. Rangel (13 பெப்ரவரி 2012). The Handbook of Intercultural Discourse and Communication. John Wiley & Sons. p. 292. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-6272-2. பார்க்கப்பட்ட நாள் 12 ஏப்ரல் 2013. Introduction Greece and Turkey are situated at the crossroads of Europe, Asia, the Middle East and ஆப்பிரிக்கா, and their inhabitants have had a long history of cultural interaction even though their languages are neither genetically nor typologically ... {{cite book}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. Caralampo Focas (2004). Transport Issues And Problems In Southeastern Europe. Ashgate Publishing, Ltd. p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7546-1970-3. பார்க்கப்பட்ட நாள் 12 ஏப்ரல் 2013. Greece itself shows a special geopolitical importance as it is situated at the crossroads of three continents – Europe, Asia and Africa – and can be therefore considered as a natural bridge between Europe and the Middle East {{cite book}}: Check date values in: |accessdate= (help)
  5. Brewer, D.  The Greek War of Independence: The Struggle for Freedom from Ottoman Oppression and the Birth of the Modern Greek Nation. Overlook Press, 2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58567-172-X, pp. 235–36.
  6. [1] பிபிசி 01 ஜூலை 2015
  7. செலுத்த கூடுதல் அவகாசம்: சர்வதேச நிதியத்திடம் கிரீஸ் பேச்சுவார்த்தை தி இந்து தமிழ், ஜூலை 1 2015
  8. Macedonia naming dispute
  9. மாசிடோனியா பெயர் சர்ச்சை: வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்தானது

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேக்கம்_(நாடு)&oldid=3549783" இலிருந்து மீள்விக்கப்பட்டது