நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் அல்லது பாராளுமன்றம் (parliament) என்பது ஒரு நாட்டின் சட்டவாக்க அவை (சட்டங்களை ஆக்கும் இடம்) ஆகும். பொதுவாக இது மக்களாட்சிக்கான அரசு ஒன்றின் சட்டவாக்க அவையைக் குறிக்கும்.[1] ஒரு நாடாளுமன்றம் பொதுவாக பின்வரும் மூன்று வகையான செயற்பாடுகளைக் கொண்டிருக்கும்: பிரதிநிதிகள் அவை, சட்டவாக்கம், மற்றும் நாடாளுமன்றக் கட்டுப்பாடு.

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் மக்களவை

தோற்றம் தொகு

சிசிலி நாடாளுமன்றமே உலகின் மிகப் பழமையான நாடாளுமன்றம் எனக் கருதப்படுகிறது.[2][3] ஐசுலாந்து[4] பரோயே[5] ஆகியவற்றின் நாடாளுமன்றங்களும் மிகப் பழமையானவை, ஆனாலும் இவற்றுக்கு முடிவெடுக்கும் அதிகாரங்கள் இருக்கவில்லை.

நாடாளுமன்ற அரசாங்கம் தொகு

 
  ஈரவை சட்ட அவைகளைக் கொண்டுள்ள நாடுகள்.
  ஓரவையைக் கொண்டுள்ள நாடுகள்.
  சட்டவாக்க அவைகள் எதுவும் இல்லாதவை.

நாடாளுமன்றங்கள் என அழைக்கப்படும் சட்டவாக்க அவைகள் பொதுவாக அரசு ஒன்றின் நாடாளுமன்ற முறையின் கீழ் நடத்தப்படுகின்றன. இங்கு அரசியலமைப்பின் படி, செயலாட்சியரே நாடாளுமன்றத்திற்கு பதில் கூறக் கடப்பாடுடையவர்கள். நாடாளுமன்றங்கள் பொதுவாக ஈரவை அல்லது ஓரவை முறைமைகளைக் கொண்ட அவைகளைக் கொண்டுள்ளன. ஆனாலும் மூவவை முறை போன்ற சில சிக்கலான முறைமைகளும் இருந்துள்ளன.

நாடாளுமன்றத்தின் கீழவையின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவராக இருப்பவரே பொதுவாக நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவையின் நம்பிக்கையை அவர் பெற்றிருக்க வேண்டும். கீழவையின் உறுப்பினர்கள் பிரதமரில் கொண்டுள்ள நம்பிக்கை குறைந்தால், அவர்கள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அதனை நிறைவேற்றி, அவரைப் பதவியில் இருந்து நீக்க முடியும்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடாளுமன்றம்&oldid=3677723" இருந்து மீள்விக்கப்பட்டது