செலூக்கியப் பேரரசு

[[Category:ஆசியாவின் முன்னாள் நாடுகள்|செலூக்கியப் பேரரசு, கிமு. 312]]

செலுசிட் பேரரசு அல்லது செலூக்கியப் பேரரசு (Seleucid Empire) (/sɪˈljsɪd/;[6] பண்டைக் கிரேக்கம்Βασιλεία τῶν Σελευκιδῶν, Basileía tōn Seleukidōn) (ஆட்சிக் காலம்: கி.மு. 312 - கி.மு. 63) என்பது செலூக்கிய வம்சத்தினரால் ஆளப்பட்டப் பேரரசாகும். பேரரசர் அலெக்சாண்டரின் ஆசியப் படையெடுப்பிற்குப் பின் தெற்காசியா, நடு ஆசியா மற்றும் மேற்காசியாவின் பகுதிகளை கி.மு. 312 முதல் கி.மு. 63 முடிய கிரேக்கப் போர்ப்படைத் தலைவர் செலூக்கசு நிக்காத்தர் முதல், பேரரசின் இறுதி மன்னர் இரண்டாம் பிலிப்பு வரை 375 ஆண்டுகள் ஆண்டனர்.[7]

செலூக்கியப் பேரரசு Βασιλεία τῶν Σελευκιδῶν

கிமு. 312–கிமு. 63


செலூக்கியப் பேரரசின் சின்னங்கள்; கொம்புடன் கூடிய குதிரை, யானை மற்றும் நங்கூரம்[1][2]

முதலாம் செலூக்கசு நிக்காத்தர் இறந்த போது, செலூக்கியப் பேரரசின் வரைபடம் கி.மு. 281
தலைநகரம் செலூசியா
(கி.மு. 305–240)

அந்தியோக்கியா
(கி.மு. 240–63)
மொழி(கள்) கிரேக்கம்(அலுவல் மொழி)[3]
பாரசீகம்
அரமேயம்[3]
சமயம் பண்டைய கிரேக்க சமயம்
பாபிலோனிய சமயம் [4]
சரத்துஸ்திர சமயம்
அரசாங்கம் முடியாட்சி
பேரரசர்
 -  கி.மு. 305–281 முதலாம் செலூக்கசு நிக்காத்தர் (கி.மு. 305 – கி.மு. 281 ) (முதல்)
 -  கி.மு. 65–63 இரண்டாம் பிலிப்பு (இறுதி)
வரலாறு
 -  அலெக்சாண்டர் வென்ற பகுதிகளை கிரேக்கப் படைத்தலைவர்கள் ஆளுதல் கிமு. 312
 -  இப்சுஸ் போர் கி.மு. 301
 -  உரோம் - செலூக்கியப் போர் கி.மு. 192–188
 -  அபாமியா உடன்படிக்கை கி.மு. 188
 -  யூதர்களின் மெச்சாபியான் கிளர்ச்சி கி.மு. 167–160
 -  சிரியா உரோமைப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. கிமு. 63
பரப்பளவு
 -  கி.மு. 301 [5] 30,00,000 km² (11,58,306 sq mi)
 -  கி.மு. 240 [5] 26,00,000 km² (10,03,866 sq mi)
 -  கி.மு. 175 [5] 8,00,000 km² (3,08,882 sq mi)
 -  கி.மு. 100[5] 1,00,000 km² (38,610 sq mi)
முந்தையது
பின்னையது
மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)
சிரியா (உரோமைப் பேரரசு)
பார்த்தியப் பேரரசு
கிரேக்க பாக்திரியா பேரரசு
ஹஸ்மோனிய நாடு
ஒஸ்ரோயினி
இந்தோ கிரேக்க நாடு
தற்போதைய பகுதிகள்

அலெக்சாண்டர் பஞ்சாப் மன்னர் போரசுடனான போரில் வென்று, மீண்டும் கிரேக்கத்திற்கு திரும்பும் வழியில் பாபிலோனில் மறைந்த பின், அலெக்சாண்டர் வென்ற பகுதிகளை அவரது படைத்தலைவர்கள் பிரித்துக் கொண்டு ஆண்டனர். அலெக்சாண்டரின் நெருங்கிய நண்பரும், கிரேக்கப் படைத்தலைவர்களில் ஒருவரான செலூக்கஸ் நிக்காத்தர், கிரேக்கத்திற்கு கிழக்கில் அமைந்த ஆசியப் பகுதிகளுக்கு கி.மு. 312 முதல் பேரரசர் ஆனார்.

பேரரசின் பகுதிகள்தொகு

முதலாம் செலூக்கசு நிக்காத்தரும், அவருக்கு பின்வந்த கிரேக்க மன்னர்களும் செலூக்கியப் பேரரசின் தற்கால பாகிஸ்தான், ஆப்கானித்தான், துருக்மேனிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், ஈரான், ஈராக், இஸ்ரேல், லெபனான், பாலஸ்தீனம், ஜோர்டான், குவைத், சவுதி அரேபியா, சிரியா, துருக்கி ஆகிய பகுதிகளை ஆண்டனர்.

தலைநகரங்கள்தொகு

செலூக்கியப் பேரரசின் தலைநகரங்களாக துருக்கி - சிரியாவின் எல்லையில் அமைந்த அந்தியோக்கியா மற்றும் டைகிரிஸ் ஆற்றாங்கரையில் அமைந்த செலுக்கியா நகரங்கள் விளங்கியது.

கிரேக்க நாகரீகத் தாக்கம்தொகு

செலூக்கியப் பேரரசின் நீண்டகால ஆட்சியால், ஆசியாவில் கிரேக்கக் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலை பரவியது.

இந்தியா மீதான படையெடுப்புதொகு

கி.மு 307-இல் முதலாம் செலூக்கசு நிக்கோட்டரின் மௌரியப் பேரரசர் சந்திரகுப்த மௌரியர் மீதான படையெடுப்பு தோல்வியில் முடிந்தது. இதனால் ஏற்பட்ட உடன்படிக்கையின் பேரில் செலூக்கியப் பேரரசின் ஆஃப்கானிஸ்தான், பலுசிஸ்தான் பகுதிகள் சந்திரகுப்த மௌரியருக்கு வழங்கப்பட்டது. மேலும் செலூக்கசு நிக்காத்தர் தனது மகளை சந்திர குப்த மௌரியருக்கு மணம் முடித்து வைத்ததுடன், செலூக்கியப் பேரரசின் தூதுவராக மெகஸ்தெனஸ் என்பவரை மௌரியப் பேரரசுசில் நியமித்தார்.

வீழ்ச்சிக் காலம்தொகு

செலூக்கியப் பேரரசர் மூன்றாம் அந்தியோக்கசு ஆட்சிக் காலத்தில் கி.மு. 190-இல் உரோமானியப் படைகள் சிரியாவைக் கைப்பற்றியது.[8]

கி.மு. 168-இல் நான்காம் அந்தியோக்கசு ஆட்சிக்காலத்தில் ஜெரூசலத்தில் இருந்த யூதர்களின் கோயில் செலூக்கியப் படைவீரர்களால் பாழ்படுத்தப்பட்டது. இதனால் கோபம் கொண்ட யூதர்கள் ஒன்றிணைந்து செலூக்கியப் படைவீர்ர்கள் மீது கொரில்லா தாக்குதல்கள் தொடுத்து பாலஸ்தீனத்திலிருந்து விரட்டியடித்தனர்.

அதே கால கட்டத்தில் கி.மு. 168-இல் பாரசீகர்கள் செலூக்கியப் பேரரசிடமிருந்து பாரசீகம் மற்றும் மெசபடோமியாவை கைப்பற்றி பார்த்தியப் பேரரசை நிறுவினர்.

கி.மு. 141-இல் செலூக்கியப் பேரரசின் தலைநகரங்களில் ஒன்றான செலுசியா நகரம் எதிரிகளால் கைப்பற்றப்பட்டது. பின்னர் கி.பி. முதல் நூற்றாண்டில் செலூக்கியப் பேரரசு வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த காலத்தில், செலூக்கியப் பேரரசிடமிருந்த சிரியாவை ஆர்மீனியர்கள் கைப்பற்றினர்.

கி.பி. 64-இல் உரோமானியப் படைத்தலைவர் பாம்பே அந்தியோக்கியா நகரத்தில் புகுந்து சிரியாவைக் கைப்பற்றியதன் மூலம் செலூக்கியப் பேரரசு வீழ்ச்சி கண்டது.

வீழ்ச்சிக்குப் பின்னர்தொகு

செலூக்கியப் பேரரசின் இறுதி மன்னர் இரண்டாம் பிலிப்பு ஆட்சிக் காலத்தில் செலூக்கியப் பேரரசு வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இறுதியில் செலூக்கியப் பேரரசு கிரேக்க பாக்திரியா பேரரசு மற்றும் இந்தோ கிரேக்க நாடு என சிதறுண்டது. இந்தோ - கிரேக்க சிற்றரசர்கள் கி.மு. 100 முதல் கி.பி. 10 வரை ஆண்டனர்.

செலூக்கிய ஆட்சியாளர்கள்தொகு

 
கி.மு. 281-இல் செலூக்கியப் பேரரசின் வரைபடம்
 
செலூக்கஸ் நிக்காத்தர் வெளியிட்ட அலெக்சாண்டரின் உருவம் பொறித்த நாணயம்
 
செலூக்கியப் பேரரசர் நான்காம் அந்தியோக்கசு எபிபனாஸ் (கி.மு. 175–163) உருவ நாணயம்
 
அலெக்சாண்டர் முதலாம் பாலாஸ் (கி.மு. 150–145) உருவ நாணயம்
 
செலூக்கியப் பேரரசின் முதல் உள்ளூர் ஆளுனர் முதலாம் பகாடேட்ஸ் (கி.மு. 290–280)

கிமு. 305 முதல் கிமு. 63 முடிய செலூக்கிய கிரேக்கப் பேரரசை ஆண்ட 31 பேரரசர்களின் பட்டியல்[9]:

 1. செலூக்கஸ் நிக்காத்தர் (கி.மு. 305–281)
 2. முதலாம் அந்தியோக்கசு சோத்தர் (கி.மு. 281–261)
 3. இரண்டாம் அந்தியோக்கசு தியோஸ் (கி.மு. 261 - 246)
 4. இரண்டாம் செலூக்கசு கல்லிநிக்கஸ் (கி.மு. 246–225)
 5. மூன்றாம் செலூக்கசு செரானஸ் (கி.மு. 225–223)
 6. பேரரசர் மூன்றாம் அந்தியோக்கசு (கி.மு. 223-187)
 7. நான்காம் செலூக்கசு பிலோபதோர் (கி.மு. 187–175)
 8. நான்காம் அந்தியோக்கசு எபிபனாஸ் (கி.மு. 175–163)
 9. ஐந்தாம் அந்தியோக்கசு யூபதார் (கி.மு. 163–161)
 10. முதலாம் தெமிரியஸ் சோதர் (கி.மு. 161-150)
 11. அலெக்சாண்டர் முதலாம் பாலாஸ் (கி.மு. 150–145)
 12. இரண்டாம் நிக்காத்தர் தெமிரியஸ் (கி.மு. 145–138)
 13. அந்தியோக்கசு நான்காம் தியோனிசுஸ் அல்லது எபிபோனஸ் (கி.மு. 145–140)
 14. தியோதோத்தஸ் திரிபோன் (கி.மு. 140–138)
 15. ஆண்டியோசுஸ் ஏழாம் சிதேட்டஸ் (கி.மு. 138–129)
 16. டெமிரிட்டஸ் இரண்டாம் நிக்காத்தர் (இரண்டாம் ஆட்சிக் காலம்) (கி.மு. 129-126)
 17. அலெக்சாண்டர் இரண்டாம் சபினாஸ் (கி.மு. 129–123)
 18. பேரரசி கிளியோபாட்ரா தியோ (கி.மு. 126-121)
 19. செலூக்கசு ஐந்தாம் பிலோமெத்தர் (கி.மு. 126/125)
 20. ஆண்டியோசுஸ் எட்டாம் கிரிப்பஸ் (கி.மு. 125–96)
 21. ஆண்டியோசுஸ் ஒன்பதாம் சிசினஸ் (கி.மு. 114–96)
 22. செலூக்கசு ஆறாம் எபிபோனஸ் நிக்காத்தர் (கி.மு. 96–95)
 23. யூசிபெஸ் ஒன்பதாம் ஆண்டியோசுஸ் (கி.மு. 95–92)
 24. யூசெரஸ் மூன்றாம் டெமிரிடஸ் (கி.மு. 95–87)
 25. பதின்னொன்றாம் எபிபோனஸ் ஆண்டியோகஸ் (கி.மு. 95–92)
 26. முதலாம் பிலிப்பு பிலடெல்பியஸ் (கி.மு. 95–84/83)
 27. அந்தியோக்கசு 12-ஆம் டயோனிசுஸ் (கி.மு. 87–84)
 28. ஆர்மினியாவின் முதலாம் டைகிரேன்ஸ் (கி.மு. 83–69)
 29. செலூக்கசு ஏழாம் கைபயாசாக்டெஸ் அல்லது பிலோமீட்டர் (கி.மு. 83–69)
 30. அந்தியோக்கசு 13-ஆம் ஆசியாடிகஸ் (கி.மு. 69-64)
 31. பிலோரோமெனஸ் இரண்டாம் பிலிப்பு (கி.மு. 65–63)

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. Cohen, Getzel M; The Hellenistic Settlements in Syria, the Red Sea Basin, and North Africa, pp. 13.
 2. Lynette G. Mitchell; Every Inch a King: Comparative Studies on Kings and Kingship in the Ancient and Medieval Worlds, page 123.
 3. 3.0 3.1 Richard N. Frye, The History of Ancient Iran, (Ballantyne Ltd, 1984), 164.
 4. Julye Bidmead, The Akitu Festival: Religious Continuity and Royal Legitimation in Mesopotamia, (Gorgias Press, 2004), 143.
 5. 5.0 5.1 5.2 5.3 Taagepera, Rein (1979). "Size and Duration of Empires: Growth-Decline Curves, 600 B.C. to 600 A.D". Social Science History 3 (3/4): 115–138. doi:10.2307/1170959. 
 6. Oxford English Dictionary, 1st ed. "Seleucid, n. and adj." Oxford University Press (Oxford), 1911.
 7. Seleucid kingdom
 8. The Seleucid Empire (323–64 B.C.)
 9. http://www.seleucid-genealogy.com Genealogy of the Seleucids

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செலூக்கியப்_பேரரசு&oldid=3538718" இருந்து மீள்விக்கப்பட்டது