தியாடோச்சி

தியாடோச்சி (Diadochi) (/dˈædək/; இலத்தீன் Diadochus, கிரேக்கம்: Διάδοχοι, Diádokhoi, "வாரிசுகள்") கி மு 323இல் அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின்னர் ஹெலனிய காலத்தின் துவக்கத்தில், கிரேக்கப் பேரரசை கைப்பற்றுவதற்கு அலெக்சாண்டரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் படைத்தலைவர்களிடையே நடந்த வாரிசுரிமைப் போர்களை குறிப்பதாகும்.

ஹெலனிய காலத்தில் தியாடோச்சி எனும் வாரிசுரிமைப் போருக்குப் பின்னர் ஐந்தாக பிளவு பட்ட அலெக்சாண்டரின் கிரேக்கப் பேரரசின் பகுதிகளான தாலமி சோத்தரின் எகிப்திய தாலமைக் பேரரசு, ஆண்டிகோணஸ் ஆண்ட லெவண்ட் பகுதிகள், செலுக்கஸ் நிக்கோடர் ஆண்ட மேற்காசியாப் பகுதிகள், லிசிமச்சூஸ் ஆண்ட மாசிடோனியா மற்றும் சசாண்டர் ஆண்ட கிரேக்கப் பகுதிகள்

வாரிசுரிமைப் போர்களின் முடிவில் அலெக்சாந்தரின் படைத்தலைவர்களும், நெருகிய உறவினர்களும் அலெக்சாந்தர் வெற்றி கொண்ட பகுதிகளை ஐந்தாகப் பிரித்துக்கொண்டு ஆண்டனர். அவர்களில் தாலமி சோத்தர் எகிப்திய தாலமைக் பேரரசையும், ஆண்டிகோணஸ் லெவண்ட் பகுதிகளையும், செலுக்கஸ் நிக்கோடர் மேற்காசியாப் பகுதிகளையும், லிசிமச்சூஸ் மாசிடோனியாவையும், சசாண்டர் கிரேக்கப் பகுதிகளையும் ஆண்டனர். [1]பின்னர் செலூக்கஸ் நிக்காத்தர் நிறுவிய செலூக்கியப் பேரரசு, கிரேக்க பாக்திரியா பேரரசு மற்றும் இந்தோ கிரேக்க நாடு என பிரிந்தது.

அலெக்சாந்தரின் கிரேக்கப் பேரரசை அவரின் படைத்தலைவர்கள் ஆண்ட காலத்தை (கி மு 323 – கி பி 31) ஹெலனிய காலம் என்பர்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Waterfield, Robin (2011). Dividing the Spoils: The War for Alexander the Great's Empire. Oxford University Press. pp. xixi–xixiii. ISBN 978-0-19-539523-5.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாடோச்சி&oldid=3580812" இலிருந்து மீள்விக்கப்பட்டது