முதன்மை பட்டியைத் திறக்கவும்

தாலமைக் பேரரசு (Ptolemaic Kingdom) (/ˌtɒləˈm.ɪk/; பண்டைக் கிரேக்கம்Πτολεμαϊκὴ βασιλεία, Ptolemaïkḕ Basileía)[3] (ஆட்சிக் காலம்:கி மு 305 – கி மு 30) அலெக்சாண்டரின் இறப்புக்கு பின்னர், ஹெலனிய காலத்தில் அவரது படைத்தலைவர்கள் கிரேக்கப் பேரரசை, ஐந்தாக பிரித்துக் கொண்டு ஆண்டனர். கி மு 305இல் கிரேக்கப் படைத்தலைவரும், எகிப்தின் ஆளுநருமான முதலாம் தாலமி சோத்தர் எகிப்தில் தாலமைக் பேரரசை நிறுவினார். எகிப்து உள்ளடக்கிய மத்தியதரைக் கடல் பகுதி நாடுகளை தாலமைக் பேரரசு ஆண்டது. தாலமைக் பேரரசின் தலைநகரம் அலெக்சாந்திரியா நகரம் ஆகும்.

தாலமைக் பேரரசு
Πτολεμαϊκὴ βασιλεία
Ptolemaïkḕ Basileía

 

கி மு 305–கி மு 30


சியுசு தெய்வத்தின் கழகு [1]

கி மு 30ல் தாலமைக் பேரரசு (பச்சை நிறத்தில்)
தலைநகரம் அலெக்சாந்திரியா
மொழி(கள்) பண்டைய கிரேக்க மொழி, எகிப்திய மொழி, பெர்பர் மொழிகள்
சமயம் செராபிஸ்[2]
அரசாங்கம் முடியாட்சி
'பார்வோன்'
 -  கி மு 305–283 முதலாம் தாலமி சோத்தர் (first)
 -  கி மு 51–30 ஏழாம் கிளியோபாட்ரா (last)
வரலாற்றுக் காலம் Classical antiquity
 -  உருவாக்கம் கி மு 305
 -  குலைவு கி மு 30
நாணயம் கிரேக்க திராச்மா
தற்போதைய பகுதிகள்  சைப்பிரசு
 எகிப்து
 லிபியா
 துருக்கி
 இசுரேல்
 பலத்தீன்
 லெபனான்
 சிரியா
 யோர்தான்
Warning: Value specified for "continent" does not comply
தாலமைக் பேரரசின் நிறுவனர் பேரரசர் முதலாம் தாலமி சோத்தர் (கி மு 305 –282 )
இரண்டாம் தாலமி பிலபெல்பிஸ் கி மு 309 – 246)
மூன்றாம் தாலமியின் உருவம் பொறித்த நாணயம்
நான்காம் தாலமி
ஏழாம் கிளியோபாட்ராவின் உருவம் பொறித்த நாணயம்

இப்பேரரசு ஏழாம் கிளியோபாட்ரா காலத்தில், உரோமானியர்களின் படையெடுப்பால் கி மு 30இல் முடிவுற்றது. எகிப்தை ஆட்சி பீடமாகக் கொண்ட ஹெலனிய கால தாலமைக் பேரரசின் காலத்தில் எகிப்து மற்றும் கிரேக்கத்தின் வரலாறுகள் நன்கு காகிதங்களில் எழுதப்பட்ட எழுத்துகள் மூலம் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதை எகிப்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[4]

தாலமைக் பேரரசின் பரப்புதொகு

துவக்க கால தாலமைக் பேரரசில் தற்கால எகிப்து, லிபியா, துருக்கி, இசுரேல், சைப்பிரஸ், பாலஸ்தீனம், லெபனான், சிரியா மற்றும் ஜோர்டான் நாடுகள் அடங்கியிருந்தது. பேரரசின் இறுதிக் காலத்தில் கிமு 30ல் தற்கால எகிப்து, துனிசியா மற்றும் லிபியா நாடுகள் இருந்தன.

வரலாறுதொகு

பாபிலோனில் கி மு 323இல் அலெக்சாண்டர் மறைந்த போது[5] அவரது படைத்தலைவர்களுக்குள் கிரேக்கப் பேரரசை யார் ஆள்வது என்ற பிணக்கு (தியாடோச்சி-Diadochi) ஏற்பட்டது. துவக்கத்தில் அலெக்சாண்டரின் சிறு வயது குழந்தையான நான்காம் அலெக்சாண்டரின் பிரதிநிதியாக கிரேக்கப் பேரரசை பெர்டிக்காஸ் (Perdiccas) என்பவர் வழிநடத்தினார்.

கிரேக்கப் பேரரசின் எகிப்தின் ஆளுநராக முதலாம் தாலமி சோத்தர் கி மு 323இல் நியமிக்கப்பட்டார். ஹெலனிய காலத்தில், கிரேக்கப் பேரரசை அதன் படைத்தலைவர்களும் ஆளுநர்களும் பிரித்து கொண்டதால் கிரேக்கப் பேரரசு சிதறியது. முதலாம் தாலமி சோத்தர் கிரேக்கப் பேரரசின் எகிப்து பகுதிகளுக்கு தனி உரிமையுடன் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். அவரது தாலமைக் வம்சம் எகிப்தை ஏறத்தாழ 300 ஆண்டுகள் ஆண்டது.

பண்டைய எகிப்திய பண்பாட்டு, நாகரீகம் மற்றும் பழக்க வழக்கங்களைப் பின்பற்றிய தாலமைக் வம்சத்தின் மன்னர்கள் தங்களை பார்வோன் எனும் அடைமொழியுடனும், இளவரசர்கள் தாலமி என்ற அடைமொழியுடனும்; இளவரசிகள் கிளியோபாட்ரா, அர்சினொ மற்றும் பெரிநைஸ் போன்ற அடைமொழிகளுடனும் அழைக்கப்பட்டனர்.

ரோமானியர்களின் ஆட்சிதொகு

கிளியோபாட்ராவின் இறப்பிற்குப் பின் கி மு 30இல் எகிப்தை வெற்றி கொண்ட உரோமைப் பேரரசு, எகிப்தை உரோமைப் பேரரசின் மாகாணமாக இணைத்துக் கொண்டனர்.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Buraselis, Stefanou and Thompson ed; The Ptolemies, the Sea and the Nile: Studies in Waterborne Power.
  2. North Africa in the Hellenistic and Roman Periods, 323 BC to AD 305, R.C.C. Law, The Cambridge History of Africa, Vol. 2 ed. J. D. Fage, Roland Anthony Oliver, (Cambridge University Press, 1979), 154.
  3. Diodorus Siculus, Bibliotheca historica, 18.21.9
  4. Lewis, Naphtali (1986). Greeks in Ptolemaic Egypt: Case Studies in the Social History of the Hellenistic World. Oxford: Clarendon Press. pp. 5. ISBN 0-19-814867-4.
  5. Hemingway, Colette, and Seán Hemingway. "The Rise of Macedonia and the Conquests of Alexander the Great". In Heilbrunn Timeline of Art History. New York: The Metropolitan Museum of Art, 2000–. http://www.metmuseum.org/toah/hd/alex/hd_alex.htm (October 2004) Source: The Rise of Macedonia and the Conquests of Alexander the Great | Thematic Essay | Heilbrunn Timeline of Art History | The Metropolitan Museum of Art

வெளி இணைப்புகள்தொகு

மேல் வாசிப்பிறகுதொகு

  • Bingen, Jean. Hellenistic Egypt. Edinburgh: Edinburgh University Press, 2007 (hardcover, ISBN 0-7486-1578-4; paperback, ISBN 0-7486-1579-2). Hellenistic Egypt: Monarchy, Society, Economy, Culture. Berkeley: University of California Press, 2007 (hardcover, ISBN 0-520-25141-5; paperback, ISBN 0-520-25142-3).
  • Bowman, Alan Keir. 1996. Egypt After the Pharaohs: 332 BC–AD 642; From Alexander to the Arab Conquest. 2nd ed. Berkeley: University of California Press
  • Burstein, Stanley Meyer (December 1, 2007). The Reign of Cleopatra. University of Oklahoma Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0806138718. https://books.google.com/books?id=KSonyiReFY8C. பார்த்த நாள்: April 6, 2015. 
  • Chauveau, Michel. 2000. Egypt in the Age of Cleopatra: History and Society under the Ptolemies. Translated by David Lorton. Ithaca: Cornell University Press
  • Ellis, Simon P. 1992. Graeco-Roman Egypt. Shire Egyptology 17, ser. ed. Barbara G. Adams. Aylesbury: Shire Publications, ltd.
  • Hölbl, Günther. 2001. A History of the Ptolemaic Empire. Translated by Tina Saavedra. London: Routledge Ltd.
  • Lloyd, Alan Brian. 2000. "The Ptolemaic Period (332–30 BC)". In The Oxford History of Ancient Egypt, edited by Ian Shaw. Oxford and New York: Oxford University Press. 395–421
  • Susan Stephens, Seeing Double. Intercultural Poetics in Ptolemaic Alexandria (Berkeley, 2002).
  • A. Lampela, Rome and the Ptolemies of Egypt. The development of their political relations 273-80 B.C. (Helsinki, 1998).
  • Peters, F. E. (1970). The Harvest of Hellenism. New York: Simon & Schuster. 
  • J. G. Manning, The Last Pharaohs: Egypt Under the Ptolemies, 305-30 BC (Princeton, 2009).

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலமைக்_பேரரசு&oldid=2697278" இருந்து மீள்விக்கப்பட்டது