மூன்றாம் கிளியோபாட்ரா
மூன்றாம் கிளியோபாட்ரா (Cleopatra III கிமு 160/155 – 101) பண்டைய பிற்கால எகிப்திய அரசிகளில் ஒருவர்.[2] எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தைச் சேர்ந்த பெண் அரசி ஆவார்.
மூன்றாம் கிளியோபாட்ரா | |
---|---|
மூன்றாம் கிளியோபாட்ரா | |
பண்டைய எகிப்தின் பெண் ஆட்சியாளர் | |
ஆட்சிக்காலம் | கிமு 142—131[1] |
முன்னையவர் | எட்டாம் தாலமி மற்றும் இரண்டாம் கிளியோபாட்ரா |
பின்னையவர் | இரண்டாம் கிளியோபாட்ரா |
இணை ஆட்சியாளர்கள் | எட்டாம் தாலமி இரண்டாம் கிளியோபாட்ரா |
ஆட்சிக்காலம் | கிமு 127–101 |
முன்னையவர் | இரண்டாம் கிளியோபாட்ரா |
பின்னையவர் | பத்தாம் தாலமி மற்றும் மூன்றாம் பெரெனிஸ் |
இணை-ஆட்சியாளர்கள் | எட்டாம் தாலமி (கிமு 127–116) இரண்டாம் கிளியோபாட்ரா (கிமு 124–116) ஒன்பதாம் தாலமி (கிமு 116–107) பத்தாம் தாலமி (கிமு 107–101) |
பிறப்பு | கிமு 160 – 155 |
இறப்பு | கிமு 101 |
துணைவர் | எட்டாம் தாலமி (சித்தப்பா-வளர்ப்புத் தந்தை |
குழந்தைகளின் பெயர்கள் | ஒன்பதாம் தாலமி பத்தாம் தாலமி நான்காம் கிளியோபாட்ரா சிரியாவின் கிளியோபாட்ரா செலினா டிரிஃபேனா |
அரசமரபு | தாலமி |
தந்தை | ஆறாம் தாலமி |
தாய் | இரண்டாம் கிளியோபாட்ரா |
இவர் முதலில் தனது தாய் இரண்டாம் கிளியோபாட்ரா மற்றும் தனது கணவன் எட்டாம் தாலமியுடன் சேர்ந்து (கிமு 142- 131) வரையிலும் பின்னர் மீண்டும் (கிமு 127 - 116) காலகட்டத்திலும் இணை ஆட்சியாளராக எகிப்தை ஆண்டார். பின்னர் மூன்றாம் கிளியோபாட்ரா தனது மகன்களான ஒன்பதாம் தாலமி மற்றும் பத்தாம் தாலமியுடன் சேர்ந்து (கிமு 116 - 101) காலகட்டத்தில் எகிப்தின் இணை ஆட்சியாளராக ஆட்சி செய்தார்.
கிமு 107-இல் மூன்றாம் கிளியோபாட்ரா, ஒன்பதாம் தாலமியை அலெக்சாந்திரியா நகரத்திலிருந்து துரத்தி விட்டு, தனது மகன் பத்தாம் தாலமியை இணை ஆட்சியாளராகக் கொண்டு எகிப்தை ஆண்டார். ஆறு ஆண்டுகள் கழித்து கிமு 101-இல் பத்தாம் தாலமி, மூன்றாம் கிளியோபாட்ராவைக் கொலை செய்து விட்டு, பத்தாம் தாலமியின் மனைவியும், மூன்றாம் கிளியோபாட்ராவின் பேத்தியுமான மூன்றாம் பெரெனிசை இணை ஆட்சியாளராகக் கொண்டு எகிப்தை ஆட்சி செய்தார்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு