இரண்டாம் கிளியோபாட்ரா

இரண்டாம் கிளியோபாட்ரா (Cleopatra II (பண்டைய கிரேக்கம்: Κλεοπάτρα;பிறப்பு:கிமு 185 –இறப்பு:கிமு 116/115) பண்டைய எகிப்தை ஆண்ட தாலமி வம்ச பார்வோன் ஐந்தாம் தாலமி - இராணி முதலாம் கிளியோபாட்ராவுக்கும் பிறந்தவர். இவரது சகோதரர்கள்/கணவர்கள் ஆறாம் தாலமி மற்றும் எட்டாம் தாலமி ஆவார்.[1][2] இவரது குழந்தைகள் ஏழாம் தாலமி மற்றும் மூன்றாம் கிளியோபாட்ரா ஆவார்.

இரண்டாம் கிளியோபாட்ரா
பண்டைய எகிப்தின் தாலமி வம்ச பெண் அரசி
ஆட்சிக்காலம்
, தாலமி வம்சம்
  • NomenKlaupadrat Netjeret Meretmut
    மூத் கடவுளின் அன்பை பெற்ற கிளியோபாட்ரா
  • G39N5
    qrwAwAp
    d
    r
    tAH8nTrtmrmwt

துணைவி(யர்)ஆறாம் தாலமி, எட்டாம் தாலமி
பிள்ளைகள்
தந்தைஐந்தாம் தாலமி
தாய்முதலாம் கிளியோபாட்ரா
பிறப்புகிமு 185
இறப்புகிமு 116/115 (வயது 69)
இரண்டாம் கிளியோபாட்ரா மற்றும் மூன்றாம் கிளியோபாட்ரா சிற்பம்

இவர் தனது முதல் கணவர்களும், சகோதரர்களுமான ஆறாம் தாலமி மற்றும் எட்டாம் தாலமியுடன் இணைந்து, கிமு 164 முதல் கிமு 116 வரை எகிப்தின் இணை ஆட்சியாளராக வரை இருந்தார்.

ஆட்சிக் காலம்

தொகு

முதல் இணை ஆட்சி (கிமு 175-131)

தொகு

கிமு 176 இல் அவளது தாயான முதலாம் கிளியோபாட்ராவின் மரணத்தைத் தொடர்ந்து, இரண்டாம் கிளியோபாட்ரா, தனது முத்த சகோதரர் ஆறாம் தாலமியை மணந்தார். கிமு 170 முதல் கிமு 164 முடிய இரண்டாம் கிளியோபாட்ரா மற்றும் அவரது இளைய சகோதரர் எட்டாம் தாலமி எகிப்தின் இணை ஆட்சியாளர்களாக விளங்கினர். கிமு 145 இல் ஆறாம் தாலமி இறந்தார். ஆறாம் தாலமிக்கும், இரண்டாம் கிளியோபாட்ராவுக்கும் பிறந்த மகன் ஏழாம் தாலமியை, எட்டாம் தாலமி கொன்று[3][1][4] எகிப்தின் அரியணை ஏறினார். இரண்டாம் கிளியோபாட்ரா தனது இளைய சகோதரர் எட்டாம் தாலமியை மணந்தார். கிமு 142 - 139க்கும் இடையில் எட்டாம் தாலமி, இரண்டாம் கிளியோபாட்ராவின் இளைய மகளான மூன்றாம் கிளியோபாட்ராவை மணந்தார்.[4][5]

தனி ஆட்சி (கிமு 131-127)

தொகு

இரண்டாம் கிளியோபாட்ரா கிமு 131-இல் எட்டாம் தாலமிக்கு எதிராக உள்நாட்டுக் கிளர்ச்சியை நடத்தி, எட்டாம் தாலமி மற்றும் மூன்றாம் கிளியோபாட்ராவை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.[6] கிளியோபாட்ரா கிமு 127 வரை எகிப்தை ஒரே ஆட்சியாளராக ஆட்சி செய்தார். அவர் ஒரு முறை சிரியாவுக்கு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அங்கு அவர் தனது மகள் கிளியோபாட்ரா தியா மற்றும் அவரது மருமகன் டிமெட்ரியஸ் II நிக்கேட்டருடன் சேர்ந்தார்.

மூன்றாவது ஆட்சி (கிமு 124–116)

தொகு

இரண்டாம் கிளியோபாட்ரா மற்றும் எட்டாம் தாலமி ஆகியோரின் பொது நல்லிணக்கம் கிமு 124 இல் அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு அவர் தனது சகோதரர் மற்றும் மகளுடன் சேர்ந்து எகிப்தை ஆட்சி செய்தனர். கிமு 116-இல் எட்டாம் தாலமி இறந்தார். இரண்டாம் கிளியோபாட்ரா தனது இறுதி காலத்தில், மூன்றாம் கிளியோபாட்ராவின் மகன் ஒன்பதாம் தாலமியிடம் எகிப்தின் ஆட்சியை ஒப்படைத்து விட்டு அலெக்சாந்திரியாவில் தங்கி, கிமு 116/115-இல் மறைந்தார்.[1][4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Cleopatra II பரணிடப்பட்டது 23 மே 2011 at the வந்தவழி இயந்திரம் by Chris Bennett
  2. Aidan Dodson, Dyan Hilton, The Complete Royal Families of Ancient Egypt, 2004
  3. Ptolemy VII Neos Philopator by Encyclopaedia Britannica
  4. 4.0 4.1 4.2 Cleopatra II by Livius
  5. Ptolemy VIII பரணிடப்பட்டது 2011-05-25 at the வந்தவழி இயந்திரம் by Chris Bennett
  6. Ptolemy Memphites பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம் by Chris Bennett
இரண்டாம் கிளியோபாட்ரா
பிறப்பு: கிமு 185 இறப்பு: 116
அரச பட்டங்கள்
முன்னர் எகிப்திய அரசி
கிமு 175 -164
with ஆறாம் தாலமி மற்றும் எட்டாம் தாலமி
பின்னர்
முன்னர் எகிப்திய அரசி
கிமு 163-127
with ஆறாம் தாலமி, எட்டாம் தாலமி மற்றும் மூன்றாம் கிளியோபாட்ரா
பின்னர்
முன்னர் எகிப்திய அரசி
கிமு 124 BC-116
with எட்டாம் தாலமி மற்றும் மூன்றாம் கிளியோபாட்ரா
பின்னர்





எச்சரிக்கை: இயல்புநிலை வரிசைப்படுத்து விசை Cleopatra 01 Syra " முன்னால் இயல்புநிலை வரிசைப்படுத்து விசை "Cleopatra 02 Of Egypt" ஐ மீறுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_கிளியோபாட்ரா&oldid=3759024" இலிருந்து மீள்விக்கப்பட்டது