யூலியசு சீசர்

உரோமின் இராணுவ மற்றும் அரசியல் தலைவர் (100-44 பொ. ஊ. மு.)
(ஜூலியஸ் சீசர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கையசு சூலியசு சீசர் (ஆங்கிலம்: Gaius Julius Caesar; இலத்தீன்: கையசு சூலியசு கீசர்; 12 சூலை 100 பொ. ஊ. மு. – 15 மார்ச் 44 பொ. ஊ. மு.) என்பவர் ஓர் உரோமானியத் தளபதி மற்றும் அரசியல் மேதை ஆவார். முதலாம் மூவராட்சியின் ஓர் உறுப்பினர் ஆவார். இவர் கல்லிய போர்களில் உரோமானிய இராணுவத்திற்குத் தலைமை தாங்கினார். பிறகு தன் அரசியல் எதிரி பாம்பேயை ஓர் உள்நாட்டுப் போரில் தோற்கடித்தார். இறுதியாக பொ. ஊ. மு. 49இல் சர்வாதிகாரியானார் (திக்தேத்தர்). பொ. ஊ. மு. 44இல் அரசியல் கொலை செய்யப்படும் வரை இப்பதவியில் தொடர்ந்தார். உரோமைக் குடியரசின் வீழ்ச்சி மற்றும் உரோமைப் பேரரசின் வளர்ச்சிக்கு வழி வகுத்த நிகழ்வுகளில் ஒரு முக்கியப் பங்கை ஆற்றினார்.

சூலியசு சீசர்
சூலியசு சீசரின் ஒரு பளிங்குச் சிற்பமான துசுகுலும் சிலை
சூலியசு சீசரின் துசுகுலும் சிலை. இவரது வாழ் நாளின் போது உருவாக்கப்பட்டு எஞ்சியுள்ள ஒரே சிலை இது தான் என்று கருதப்படுகிறது. இது இப்போது இத்தாலியின் துரின் தொல்லியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பிறப்பு12 சூலை 100 பொ. ஊ. மு.[1]
சுபுர்ரா, உரோம், உரோமைக் குடியரசு
இறப்பு15 மார்ச் 44 பொ. ஊ. மு. (அகவை 55)
பொம்பெயி அரங்கம், உரோம், உரோமைக் குடியரசு
இறப்பிற்கான
காரணம்
அரசியல் கொலை (கத்திக் குத்துக் காயங்கள்)
கல்லறைஉரோமின் சீசர் கோயில்
41°53′31″N 12°29′10″E / 41.891943°N 12.486246°E / 41.891943; 12.486246
பணி
 • அரசியல்வாதி
 • இராணுவ வீரன்
 • எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
 • பெல்லம் கலீசம்
 • பெல்லம் சிவில்லே
பெற்றோர்
 • கையசு சூலியசு சீசர்
 • ஔரேலியா
துணைவர்ஏழாம் கிளியோபாற்றா
வாழ்க்கைத்
துணை
 • கோசுதியா (விவாதத்திற்குரியது)
 • கார்னேலியா
  (தி. 84 பொ. ஊ. மு.; இ. 69 பொ. ஊ. மு.)
 • பொம்பெயியா
  (தி. 67 பொ. ஊ. மு.; வி. 61 பொ. ஊ. மு.)
 • கல்புர்னியா
  (தி. 59 பொ. ஊ. மு.)
பிள்ளைகள்
விருதுகள்குடிசார் மகுடம்
Military service
சேவை ஆண்டுகள்81–45 பொ. ஊ. மு.
போர்கள்/யுத்தங்கள்
 • மைதிலீன் முற்றுகை
 • கல்லிய போர்கள்
  • அரார் யுத்தம்
  • பிப்புரக்குதே யுத்தம்
  • ஓசுகீசு யுத்தம்
  • சாபிசு யுத்தம்
  • அக்சோனா யுத்தம்
  • பிரித்தன் படையெடுப்புகள்
  • செர்கோவியா யுத்தம்
  • அலேசியா யுத்தம்
  • உக்செல்லோதுனும் முற்றுகை
 • சீசரின் உள்நாட்டுப் போர்
  • கோர்பினியம் முற்றுகை
  • புருந்திசியம் முற்றுகை
  • இலேர்தா யுத்தம்
  • திர்ராச்சியம் யுத்தம்
  • பர்சலுசு யுத்தம்
  • அலெக்சாந்திரியப் போர்
   • அலெக்சாந்திரியா முற்றுகை
   • நைல் யுத்தம்
  • செலா யுத்தம்
  • உருசுபினா யுத்தம்
  • தபுசுசு யுத்தம்
  • முந்தா யுத்தம்
  • கோர்துபா முற்றுகை
  • பர்சலுசு யுத்தம்

பொ. ஊ. மு. 60இல் சீசர், கிராசுசு மற்றும் பாம்பே ஆகியோர் முதலாம் மூவராட்சியை உருவாக்கினர். உரோமானிய அரசியலில் பல ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்திய ஓர் அலுவல் முறை சாராத அரசியல் கூட்டணி இதுவாகும். அரசியல் சக்தியைக் குவிக்கும் இவர்களது முயற்சிகள் செனட்டில் இருந்த பலரால் எதிர்க்கப்பட்டன. இவர்களில் இளைய கதோவும் ஒருவராவார். அவருக்கு சிசெரோவின் மறைமுக ஆதரவு இருந்தது. ஒரு நாண் போன்ற இராணுவ வெற்றிகளை கல்லிய போர்களில் பெற்றதன் வழியாக உரோமைக் குடியரசில் மிகுந்த சக்தி வாய்ந்த அரசியல்வாதிகளில் ஒருவராக சீசர் வளர்ந்தார். கல்லிய போர்கள் பொ. ஊ. மு. 51ஆம் ஆண்டு வாக்கில் முடிக்கப்பட்டன. இவை உரோமானிய நிலப்பரப்பை பெருமளவுக்கு விரிவாக்கின. இந்த நேரத்தின் போது இவர் பிரித்தானியா மீது படையெடுத்தார். ரைன் ஆற்றில் ஒரு பாலத்தைக் கட்டினார். இந்த சாதனைகள் மற்றும் இவரது அனுபவமுள்ள இராணுவத்தின் ஆதரவு ஆகியவை பாம்பேயின் நிலை மங்கும் வகையில் அச்சுறுத்தலாக விளங்கின. பொ. ஊ. மு. 53இல் கிராசுசுவின் இறப்பிற்கு பிறகு பாம்பே செனட்டுடன் மீண்டும் ஒத்துழைக்கத் தொடங்கினார். கல்லிய போர்கள் முடிவடைந்தவுடன் தன்னுடைய இராணுவ தளபதித்துவத்தில் இருந்து இறங்கி, உரோமுக்கு திரும்புமாறு செனட்டானது சீசருக்கு ஆணையிட்டது. பொ. ஊ. மு. 49இல் உரூபிகன் ஆற்றைக் கடந்து, உரோமை நோக்கி ஓர் இராணுவத்திற்கு தலைமை தாங்கி அணிவகுத்ததன் மூலம் செனட்டின் அதிகாரத்திற்கு சீசர் வெளிப்படையாக பணிய மறுத்தார்.[2] உரூபிகனைக் கடப்பது என்பது மீள இயலாத நிலைக்குச் செல்வதைக் குறிக்கும் ஒரு சொற்றொடராக ஆங்கிலத்தில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. இது சீசரின் உள்நாட்டுப் போரை தொடங்கியது. இதில் இவர் வெற்றி பெற்றார். இது பொ. ஊ. மு. 45இல் கிட்டத் தட்ட போட்டியற்ற சக்தி மற்றும் செல்வாக்குடைய ஒரு நிலையில் இவரை நிறுத்தியது.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை பெற்றதற்கு பிறகு சமூக மற்றும் அரசாங்க சீர்திருத்தங்களின் ஓர் அமல்படுத்தலை சீசர் தொடங்கினார். இதில் யூலியன் நாட்காட்டியின் உருவாக்கமும் அடங்கும். உரோமைக் குடியரசின் தொலை தூர பகுதிகளின் பல குடி மக்களுக்கு இவர் உரோமானிய குடியுரிமையை வழங்கினார். தன்னுடைய அனுபவசாலி போர் வீரர்களுக்கு ஆதரவளிக்க நிலச் சீர்திருத்தங்களை இவர் தொடங்கினார். ஒரு பெருமளவிலான உட்கட்டமைப்பு திட்டத்தையும் இவர் தொடங்கி வைத்தார். 44ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இவர் "வாழ்நாள் முழுவதுக்குமான சர்வாதிகாரி" (திக்தேத்தர் பெர்பெச்சுவோ) என்று பொது அறிவிப்பு செய்யப்பட்டார். இவரது சக்தி மற்றும் அரசு மீது இவரது ஆதிக்கம் ஆகியவற்றால் அச்சமடைந்த புரூத்தசு மற்றும் காசியசு தலைமையிலான செனட்டர்களின் ஒரு குழுவானது சீசரை பொ. ஊ. மு. 44 ஆம் ஆண்டு நட்ட நடு மார்ச்சு (15 மார்ச்சு) அன்று அரசியல் கொலை செய்தது. ஒரு புதிய தொடர்ச்சியான உள்நாட்டுப் போர்கள் வெடித்தன. இதற்குப் பிறகு குடியரசின் அரசியலமைப்பு அரசாங்கமானது என்றுமே மீண்டும் அதன் பழைய நிலைக்கு செல்லவில்லை. சீசரின் அக்காவின் மகள் வழிப் பேரனும், தத்தெடுக்கப்பட்ட வாரிசுமான ஆக்தேவியன் உரோமைக் குடியரசின் கடைசி உள்நாட்டு போரில் தன்னுடைய எதிரிகளை தோற்கடித்ததற்கு பிறகு ஒற்றை சக்தியாக வளர்ச்சி அடைந்தார். இவர் பின்னாட்களில் அகத்தசு என்று அறியப்பட்டார். ஆக்தேவியன் தன்னுடைய சக்தியை நிலை நிறுத்த தொடங்கினார். இவ்வாறாக உரோமைப் பேரரசின் சகாப்தமானது தொடங்கியது.

சீசர் ஒரு செயல் திறமை வாய்ந்த எழுத்தாளர் மற்றும் வரலாற்றாளர், மற்றும் ஓர் அரசியல் மேதையாவார். இவரது வாழ்வு குறித்த பெரும்பாலான தகவல்கள் இவரது இராணுவ படையெடுப்புகள் குறித்த இவரது சொந்த குறிப்புகளில் இருந்து பெறப்படுகின்றன. சிசெரோவின் மாடல்களும், பேச்சுகளும் மற்றும் சல்லுசுதுவின் வரலாற்று பதிவுகள் உள்ளிட்டவை பிற சம கால ஆதாரங்களாக கருதப்படுகின்றன. பின்னாட்களில் சுவேதோனியசு மற்றும் புளூட்டாக்கால் எழுதப்பட்ட சுய சரிதைகளும் கூட முக்கியமான ஆதாரங்களாக விளங்குகின்றன. பல வரலாற்றாளர்கள் சீசரை வரலாற்றின் மிகச் சிறந்த இராணுவ தளபதிகளில் ஒருவராக கருதுகின்றனர்.[3] இவரது மூன்றாவது பெயரானது (சீசர்) இறுதியாக பேரரசர் என்பதற்கான சொல்லாக பின்பற்றப்பட்டது; இவரது பெயரான "சீசரானது" உரோமைப் பேரரசு முழுவதும் பயன்படுத்தப்பட்டது. செருமனியின் கெய்சர் மற்றும் உருசியாவின் சார் போன்ற பட்டங்கள் இவரது பெயரின் நவீன கால உருவாக்கங்கள் ஆகும். இலக்கியம் மற்றும் கலை வேலைப்பாடுகளில் இவர் அடிக்கடி தோன்றுகிறார்.

தொடக்க வாழ்வும், பணிக் காலமும் தொகு

 
கையசு மரியசு, சீசரின் அத்தை சூலியாவின் கணவராவார். இவர் சுல்லாவின் எதிரியாவார். பொ. ஊ. மு. 87இல் லூசியசு கார்னேலியசு சின்னாவுடன் இணைந்து இவர் நகரத்தைக் கைப்பற்றினார்.

கையசு சூலியசு சீசர் பண்டைக்கால உரோமில் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பொ. ஊ. மு. 100இல் 12 சூலை அன்று சென்சு சூலியா என்ற குடும்பத்தில் பிறந்தார்.[4] இவர்களது நகரத்தை உரோமின் மூன்றாவது மன்னனான துல்லுசு ஓசுதிலியசு கைப்பற்றி அழித்ததற்குப் பிறகு பொ. ஊ. மு. ஏழாம் நூற்றாண்டில் ஆல்பா லோங்கா என்ற பகுதியில் இருந்து உரோமுக்கு இடம் பெயர்ந்ததாக இக்குடும்பம் கூறியது. ஆல்பா லோங்காவை நிறுவியவரும், அயேனியசின் மகனுமான சூலுசுவில் இருந்து தோன்றியதாக இக்குடும்பம் குறிப்பிட்டது. அயேனியசு உரோமானிய பெண் தெய்வமான வீனசின் மகன் என்று குறிப்பிடப்படுவதால் இத்தகைய வழித்தோன்றலானது இந்த இனத்தவரை தெய்வீக பூர்வீகத்தையுடையவர்களாக ஆக்கியது. இத்தகைய வழித்தோன்றல் மரபானது அதன் முழுமையான வடிவத்தை ஒன்றாம் நூற்றாண்டு வரை அடையவில்லை. ஆனால் வீனசின் வழித்தோன்றல்கள் என கோரிய இந்த இனத்தவரின் கோரலானது பொது மக்களின் மனங்களில் நன்றாக நிறுவப்பட்டிருந்தது.[5] சிசேரியன் எனப்படும் அறுவைசிகிச்சை மகப்பேறு மூலம் சீசர் பிறந்தார் என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. இத்தகைய அறுவை சிகிச்சைகள் தாயின் இறப்பை தடுத்து நிறுத்துவதில் இன்றியமையாததாக இருந்தன. ஆனால் சீசரின் தாய் இவரை பெற்றதற்கு பிறகு தசாப்தங்களுக்கு வாழ்ந்தார். அவர் சீசரைப் பெற்ற போது எந்த வித துன்பத்தையும் அனுபவித்ததாக எந்த ஒரு பண்டைய ஆதாரமும் பதிவு செய்யவில்லை.[6]

இவர்களது குடும்பம் பண்டைய பூர்வீகத்தைக் கொண்டிருந்த போதிலும் குடியரசின் நடுக் காலத்தின் போது சூலீ சீசரேசுகள் குறிப்பாக அரசியல் ரீதியாக செல்வாக்குடன் இல்லை. சீசர் என்ற பெயரை மூன்றாவது பெயராக கொண்டிருந்ததாக அறியப்பட்ட முதல் நபர் இரண்டாவது பியூனிக் போரின் போது பொ. ஊ. மு. 208இல் இருந்த ஒரு பிரேத்தர் எனப்படும் இராணுவ தளபதி அல்லது நீதிபதி ஆவார். இக்குடும்பத்தின் அயல்நாட்டில் பணிபுரிந்த முதல் பேராளர் பொ. ஊ. மு. 157ஆம் ஆண்டு பதவிக்கு வந்தார். எனினும், இவர்களது அரசியல் நன்னிலையானது முதலாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மீண்டும் உருப்பெற்று இருந்தது. பொ. ஊ. மு. 91 மற்றும் 90ஆம் ஆண்டுகளில் இரண்டு பேராளர்கள் இக்குடும்பத்திலிருந்து பதவிக்கு வந்தனர்.[7] சீசரின் பெயரையே கொண்டிருந்த சீசரின் தந்தை அரசியல் ரீதியாக மிதமான அளவுக்கு வெற்றி பெற்றிருந்தார். அரசியல் ரீதியாக செல்வாக்கு மிகுந்த ஔரேலி காட்டே குடும்பத்தைச் சேர்ந்த ஔரேலியாவை சீசரின் தந்தை மணமுடித்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் சீசர் பிறந்தனர். தனது சொந்த திருமணம் மற்றும் மிகுந்த செல்வாக்குடைய கையசு மரியசுக்கு தனது சகோதரி மண முடிக்கப்பட்டது ஆகியவற்றால் ஊக்குவிக்கப்பட்ட சீசரின் தந்தை பொ. ஊ. மு. 103இல் சாத்தர்னினிய நில ஆணையத்திலும் கூட சேவையாற்றினார். பொ. ஊ. மு. 92 மற்றும் 85ஆம் ஆண்டுக்கு இடையில் ஒரு நேரத்தில் ஒர் இராணுவ தளபதி அல்லது நீதிபதியாகவும் கூட இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு ஆசியாவின் ஆளுநரின் அதிகாரியாக இவர் சேவையாற்றினார். இவர் சேவையாற்றிய காலமானது அநேகமாக பொ. ஊ. மு. 91-90ஆம் ஆண்டு என்று கருதப்படுகிறது.[8]

யூலியசு சீசர் சாதாரண குடும்பத்தில் ஔரெலியாவின் மகனாக கி.மு.100 வது ஆண்டில் பிறந்தார். சுபுரா என்ற ரோம நகரப்பகுதியில் ஒரு சாதாரண வீட்டில் வளர்ந்தார். சீசரின் தந்தையை விட அவர் தாயின் கவனிப்பில் தான் வளர்ந்தார். சீசரின் கல்வி அவரின் ஏழாம் வயதில் இலத்தீன், கிரேக்க மொழிப் பாடங்களுடன் துவங்கியது. கிரேக்க, இலத்தீன் இலக்கணம், கணித இயல், எழுத்துத்திறன் முதலியவற்றை சீசரும், அவரின் தங்கைகளும் வீட்டிலேயே கற்று அறிந்தனர். பன்னிரண்டு வயதில் இலக்கியம், கவிதைகள் இவற்றையும் சீசர் கற்றிருப்பார். சீசரின் ஆசிரியர் பெயர் "மார்க்குஸ் அந்தோனியுஸ் க்னிஃபொ". அவர் எகிப்திய நாட்டிலுள்ள அலெக்சாந்திரியா நகரத்தில் கிரேக்கம், இலத்தீன் மொழிகளை நன்கு கற்றுணர்ந்தார்.

யூலியஸ் சீசர் கான்சல் கொர்னெலியுஸ் மகள் கொர்னெலியாவை கி.மு. 84 ஆம் ஆண்டில் கல்யாணம் செய்து கொண்டார். சீசர் தன் பத்தொன்பதாம் வயதில், படைவீரனாகச் சேர்ந்தார். தெர்முஸ் என்ற உரோமப்படைத்தலைவர், மிதிலின் என்ற கிரேக்க நகரை முற்றுகையிட்டார். அம்முற்றுகை வெற்றி அடைய, அவருக்கு ஒரு கப்பல் படை தேவைப்பட்டது. சீசரின் முயற்சியால், கப்பல் படையுடன் தெர்முஸ் மிதிலின் நகரை வென்றார். சீசர் “Corona Civica” என்ற வெற்றி முடியை அணியும் உரிமையைப் பெற்றார். கி. மு. 78 ஆம் ஆண்டில், சுல்லா உரோமை நகரில் காலமானார். உடனே சீசர் உரோமை நகருக்குத் திரும்பி வந்து சேர்ந்தார்.

சீசர் உரோமை நகருக்குத் திரும்பி வந்ததும் தன் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டார். கி. மு. 69ஆம் ஆண்டில் சீசரின் மனைவி கொர்னெலியா காலமானார். கி. மு. 67ஆம் ஆண்டில் சுல்லாவின் பேத்தி பொம்பெயாவை மணந்து கொண்டார். அதே ஆண்டில், மிகவும் முக்கியமான ஆப்பியன் வழியை (Appian Way) சீர்திருத்தும் பொறுப்பை ஏற்றார். இந்தப்பணியில் அவர் கற்றது கல்லியா நாட்டில் வெற்றி அடையத் துணை செய்தது. உரோமப் பேரரசின் படைவலம் ஓங்க, ஆப்பியன் வழிப் பேருதவி செய்தது. ஆப்பியன் வழியும், மற்றும் உரோமையர் கட்டிய பாலங்களும், இன்றும் நிலைத்திருக்கின்றன.

ஏறக்குறைய அதே சமயத்தில், பொம்பெய் (Pompeius Magnus) என்ற படைத்தலைவர் கடற்கொள்ளையரை அடக்கி மத்தியதரைக் கடலில் உரோமை அரசின் செல்வாக்கை நிலை நாட்டினார். மேலும், ஆசியா மைனர், சிரியா நாட்டையும் உரோமையின் அதிகாரத்துக்கு அடியில் கொண்டு வந்தார். பொம்பெயின் செல்வாக்கும், போர்த்திறமையும் வளர்ந்தது. சீசர் தன் அரசியல் செல்வாக்குக்கு, பொம்பெய் ஒரு சவாலாக வருவார் என்பதைச் சீக்கிரம் கண்டுணர்ந்தார்.

கிளியோபட்ராவுடனான வாழ்க்கை தொகு

 
கிளியோபட்ரா மற்றும் ஜூலியஸ் சீசர் Painting by ஜீன் லியோன் ஜேர்மி

ஜூலியஸ் சீசர் எகிப்தினை போரின் மூலம் வெல்ல துணிந்தார். அப்பொழுது ஆதரவற்ற நிலையில் இருந்த கிளியோபாட்ரா சீசருடன் இணைந்து கொண்டார். கிளியோபாட்ராவை விரட்டிவிட்ட அவரது கணவன் தொலமியுடன் சீசர் போரிட்டார். இப்போரில் தோலமியை சீசர் கொன்றார். வரலாற்று ஆசிரியர்கள் சிலர் தொலமியை கொன்றது கிளியோபாட்ரா என்றும் கூறுகின்றனர்.

கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய ஜூலியஸ் சீசர் அவரை காதலியாக ஏற்றுக் கொண்டார். எகிப்தினை வென்றவர் அதற்கு கிளியோபாட்ராவை தலைவியாக்கினார். இவர்களுக்கு சிசேரியன் என்ற மகனுண்டு.

கவுல் போர் தொகு

கி. மு. 58-ல் ஐரோப்பிய கண்டங்களிருந்து பல்வேறு பழங்குடிகள் கவுல் நகரினை நோக்கி வந்தார்கள். கவுல் என்பது வடக்கு இத்தாலி, யூகோஸ்லாவியாவின் கரையோரப்பகுதி மற்றும் தெற்கு பிரான்ஸ் ஆகிய மூன்று மாகாணங்கள் இணைந்த பகுதியாகும். பழங்குடியினரின் வருகையை அறிந்த சீசர், ரோமிற்கு இவர்களால் பிரட்சனை உண்டாகுமென எண்ணி அவர்கள் மீது போர் தொடுத்தார். அப்போரில் சீசருடைய இராணுவப் படை இருபதாயிரம் வீரர்களை மட்டுமே கொண்டிருந்தது. ஏழு ஆண்டுகள் கடுமையாக நடைபெற்ற இந்தப் போரானது, மிகச் சவாலாக இருந்தது. இதில் இருபது இலட்சம் பழங்குடியினர் கொல்லப்பட்டனர். பத்து இலட்சம் பழங்குடியினர் விற்பனை செய்யப்பட்டனர். இப்போர் மூலம் சீசர் பெரும் மாவீரனாக உலகிற்கு அறிமுகமானார்.[9]

கடற்கொள்ளையர்கள் தொகு

கி. மு. 75-ல் கிரேக்க நாட்டிற்கு கப்பல் வழியே பயணப்படும் பொழுது சீசர் மற்றும் கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் கடற்கொள்ளையர்களால் சிறை செய்யப் பெற்றனர். ஒவ்வொருவரையும் விடுவிக்க 20 தங்கக் காசுகள் விலையாகக் கேட்டனர். சீசர் அவர்களிடம் 38 நாட்கள் பயணக் கைதியாக இருந்தார்.[9] ஜூலியஸ் சீசரை கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்க சீசரின் நண்பர்கள் பெரும்பணம் கொடுத்தாகவும் செய்தியுள்ளது. அதனால் கடற்கொள்ளையர்கள் பலரை சீசர் சிலுவையில் அறைந்து கொன்றார்.[10]

மரணம் தொகு

ஜூலியஸ் சீசர் அறிவிக்கப்படாத சர்வாதிகாரி போல ரோமில் செயல்பட்டார். கிரிகோரியன் காலெண்டர் மாற்றத்திற்கு உள்ளானது. கிரேக்கமெங்கும் சீசரின் பெரும் சிலைகள் எழுப்பப்பெற்றன. நாணயங்களில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டது. இதனால் வருத்தமுற்ற சீசரின் உடனிருந்த பலர் சீசரை கொல்ல திட்டமிட்டனர்.[9]கிமு. 44 பங்குனி 15 ல் புருட்டஸ், சர்விலஸ் காஸ்கா, காசியஸ் லான்ஜினஸ் என பலர் இணைந்து சீசரை கத்தியால் குத்திக் கொன்றனர். பாம்பேயின் சிலை கீழே சீசர் விழும் பொழுது அவருடைய உடலில் முப்பத்தைந்து கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன. அப்பொழுது சீசரின் வளர்ப்பு மகனான அகஸ்ட்டஸ் எனும் அக்டேவியஸ் பதினெட்டு வயதுடையவராக இருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

 
C. Iulii Caesaris quae extant, 1678

உடல்நலம் மற்றும் உடல் தோற்றம் தொகு

புளூடார்ச்சின் குறிப்புகளின்படி,[11] சீசருக்கு சிலநேரங்களில் கால்-கை வலிப்பு வந்துள்ளதாகத் தெரிகின்றது. தற்கால வரலாற்று அறிஞர்கள் இதுகுறித்து "மிகவும் பிளவுபட்டுள்ளனர்"; தவிரவும், சிலர் சீசருக்கு மலேரியா தாக்கியதாக நம்புகின்றனர்.[12] பல தலைவலி சிறப்பு மருத்துவர்கள் கால்-கை வலிப்பிற்கு மாற்றாக மைக்ரேன் தலைவலி ஏற்பட்டிருக்கலாம் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.[13] வேறு சிலர் இந்த கால்-கை வலிப்புக்கள் மூளையில் தீநுண்ம தொற்றால் ஏற்பட்டிருக்கலாம் என கருதுகின்றனர்.[14][15]

சீசருக்கு நான்கு முறை வலிப்பு ஏற்பட்டுள்ளதை ஆவணங்கள் உறுதி செய்கின்றன. தவிர, அவரது இளமையில் வலிப்புக்கள் வந்திருக்கலாம். சீசருக்கு ஏற்பட்ட வலிப்பு குறித்த முதல் குறிப்பை தன்வரலாற்றாளர் சுடோனியசு பதிவு செய்துள்ளார். இவர் சீசர் இறந்த பிறகு பிறந்தவராவார். வலிப்பு குறித்த பதிவுகளை எதிர்க்கும் மருத்துவ வரலாற்றாளர்கள் இத்தகைய வலிப்புகளுக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவைக் காரணமாகக் கூறுகின்றனர்.[16][17][18]

2003இல் மனநல மருத்துவர் ஆர்பர் எஃப். ஓடர் சீசரின் வலிப்பு நோய் காரணமாக ஏற்பட்ட மனநோயை "சீசர் காம்ப்ளெக்சு" என்று பெயரிட்டுள்ளார்; வலிப்புநோயால் தான் வருத்தமுறுவதை மற்றவர் அறியக்கூடாதென்பதற்காகவே தனது மெய்க்காப்பாளர்களை விலக்கிக் கொண்டதும் அதுவே சீசரது கொலைக்குக் காரணமானதும் இந்த மனநோயாலேயாகும்.[19]

சேக்சுபிரியரின் நாடக வரியொன்றிலிருந்து சீசருக்கு ஒரு காது கேளாதிருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது: எனது வலதுகைப் பக்கம் வா, இந்தக் காது கேட்காது.[20] எந்த வரலாற்று நூலும் சீசருக்கு காதுக் குறை இருப்பதாக குறிப்பிடவில்லை.[21]

உரோமானிய வரலாற்றாளர் சுடோனியசு சீசரை "உயரமான, வெண்ணிற, குறையற்ற உறுப்புகளுடைய, கருப்பு கண்களுடனான" மனிதராக விவரிக்கிறார்.[22]

பெயர் மற்றும் குடும்பம் தொகு

பெற்றோர்கள் தொகு

 • தந்தை காயுஸ் ஜூலியஸ் சீசர்
 • தாய் ஆரேலியா

சகோதரிகள் தொகு

 • ஜூலியா சீசர்ஸ் மூத்தவள்
 • ஜூலியா சீசர்ஸ் இளையவள்

மனைவிகள் தொகு

 • முதல் திருமணம் கிமு 83ல் கார்னெலியாவுடன் நடைபெற்றது. கர்னெலியா பிரசவத்தின் பொழுது இறக்கும் (கிமு 68 அல்லது 69) வரை இந்த உறவு தொடர்ந்தது.
 • இரண்டாவது திருமணம் கிமு 67ல் பொம்பெயாவுடன் நடந்தது. இந்த உறவு கிமு 61ல் விவாகரத்து பெறும் வரை தொடர்ந்தது.
 • மூன்றாவது திருமணம் கிமு 59ல் Calpurnia Pisonisவுடன் நடந்தது. இந்த உறவு சீசரின் மரணம் வரை தொடர்ந்தது.

குழந்தைகள் தொகு

 • ஜூலியா, கிமு 83 அல்லது 82ல் கார்னெலியா ஜூலியஸ் சீசர் தம்பதிகளுக்குப் பிறந்தவர்.
 • சிசேரியன், கிமு 47ல் ஏழாம் கிளியோபாற்றா மற்றும் ஜூலியஸ் சீசருக்கு பிறந்தவர். இவர் 17ம் வயதில் ஆக்டோவியஸ் என்ற சீசரின் வளர்ப்பு மகனால் கொல்லப்பட்டார்.
 • பேரரசர் அகஸ்ட்டஸ் - ஜூலியஸ் சீசரின் வளர்ப்பு மகனாவார். இவர் சீசர் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
 • மார்கஸ் ஜுனியஸ் புருட்டஸ்

பேரப்பிள்ளைகள் தொகு

பாம்பே மற்றும் சீசரின் மகள் ஜூலியாவிற்குப் பிறந்த பெயரிடப்படாத குழந்தை. இக்குழந்தை சில நாட்களில் இறந்தது

காதலிகள் தொகு

குறிப்பிடத்தக்க உறவினர்கள் தொகு

அரசியல் வதந்திகள் தொகு

இலக்கிய படைப்புகள் தொகு

ஜூலியஸ் சீசர் தனது வாழ்க்கை வரலாற்றினை மூன்று பாகங்களாக எழுதியிருக்கிறார். அத்துடன் படையெடுப்புகளை விவரித்து ஏழு பாகங்கள் கொண்ட நூலினை எழுதியுள்ளார்.

நாடகங்கள் தொகு

சீசரை மையமாக வைத்து எழுதப்பெற்ற நாடகங்கள்

 • ஜூலியஸ் சீசர் – வில்லியம் ஷேக்ஸ்பியர்
 • சீசர் அன்ட் கிளியோபட்ரா – பெர்னாட்சா

மேற்கோள்கள் தொகு

 1. Badian 2009, ப. 16
 2. Keppie, Lawrence (1998). "The approach of civil war". The Making of the Roman Army: From Republic to Empire. Norman, OK: University of Oklahoma Press. பக். 102. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8061-3014-9. https://archive.org/details/makingofromanarm0000kepp_a7q6. 
 3. Tucker, Spencer (2010). Battles That Changed History: An Encyclopedia of World Conflict. ABC-CLIO. பக். 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59884-430-6. https://archive.org/details/battlesthatchang00tuck_956. 
 4. Badian 2009, ப. 16
 5. Goldsworthy 2006, ப. 32–33.
 6. Goldsworthy 2006, ப. 35.
 7. Badian 2009, ப. 14; Goldsworthy 2006, ப. 31–32
 8. Badian 2009, ப. 15 dates the land commission to 103 per MRR 3.109; Goldsworthy 2006, ப. 33–34; Broughton 1952, ப. 22, dating the proconsulship to 91 with praetorship in 92 BC and citing, among others, வார்ப்புரு:CIL and வார்ப்புரு:CIL.
 9. 9.0 9.1 9.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-29. பார்க்கப்பட்ட நாள் 2013-06-18.
 10. http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article834952.ece
 11. Plutarch, Caesar 17, 45, 60; see also Suetonius, Julius 45.
 12. Ronald T. Ridley, "The Dictator's Mistake: Caesar's Escape from Sulla," Historia 49 (2000), pp. 225–226, citing doubters of epilepsy: F. Kanngiesser, "Notes on the Pathology of the Julian Dynasty," Glasgow Medical Journal 77 (1912) 428–432; T. Cawthorne, "Julius Caesar and the Falling Sickness,” Proceedings of Royal Society of Medicine 51 (1957) 27–30, who prefers Ménière's disease; and O. Temkin, The Falling Sickness: A History of Epilepsy from the Greeks to the Beginnings of Modern Neurology (Baltimore 1971), p 162.
 13. Seymour Diamond and Mary Franklin, Conquering Your Migraine: The Essential Guide to Understanding and Treating Migraines for all Sufferers and Their Families, (New York: Fireside, 2001), 19.
 14. Bruschi, Fabrizio (2011). "Was Julius Caesar's epilepsy due to neurocysticercosis?". Trends in Parasitology (Cell Press) 27 (9): 373–374. doi:10.1016/j.pt.2011.06.001. http://www.researchgate.net/publication/51493212_Was_Julius_Caesar's_epilepsy_due_to_neurocysticercosis?ev=prf_pub. பார்த்த நாள்: 2 May 2013. 
 15. McLachlan, Richard S. (2010). "Julius Caesar's Late Onset Epilepsy: A Case of Historic Proportions". Canadian Journal of Neurological Sciences (Canadian Journal of Neurological Sciences Inc.) 37 (5): 557–561. http://apps.webofknowledge.com/full_record.do?product=WOS&search_mode=GeneralSearch&qid=4&SID=P2Ajl5d3oe6ha3MO8EF&page=1&doc=2. பார்த்த நாள்: 11 May 2013. 
 16. Hughes J; Atanassova, E; Boev, K (2004). "Dictator Perpetuus: Julius Caesar—did he have seizures? If so, what was the etiology?". Epilepsy Behav 5 (5): 756–64. doi:10.1016/j.yebeh.2004.05.006. பப்மெட்:15380131. 
 17. Gomez J, Kotler J, Long J (1995). "Was Julius Caesar's epilepsy due to a brain tumor?". The Journal of the Florida Medical Association 82 (3): 199–201. பப்மெட்:7738524. https://archive.org/details/sim_journal-of-the-florida-medical-association_1995-03_82_3/page/199. 
 18. H. Schneble (1 January 2003). "Gaius Julius Caesar". German Epilepsy Museum. பார்க்கப்பட்ட நாள் 28 August 2008.
 19. Hodder, Harbour Fraser (September 2003). "Epilepsy and Empire, Caveat Caesar". Accredited Psychiatry & Medicine (Harvard, Boston: Harvard University) 106 (1): 19. http://www.forensic-psych.com/articles/artHarvardMagCaesar.php. 
 20. William Shakespeare, Julius Caesar I.ii.209.
 21. Plutarch, Alexander 42; Jeremy Paterson discussing Caesar's health in general in "Caesar the Man," A Companion to Julius Caesar (Wiley-Blackwell, 2009), p. 130 online.
 22. Suetonius, Life of Caesar 45: excelsa statura, colore candido, teretibus membris, ore paulo pleniore, nigris vegetisque oculis.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூலியசு_சீசர்&oldid=3893960" இலிருந்து மீள்விக்கப்பட்டது