சுதை ஓவியம்
சுதை ஓவியம் (fresco) என்பது சுவரில் சுண்ணாம்பு காரைப்பூச்சு பூசி அந்த சாந்து காய்வதற்குள் வரையப்படும் ஓர் சுவர் ஓவிய தொழில் நுட்பமாகும். நிறமூட்டுப் பொருளுக்கான ஊடு பொருளாக நீர் பாவிக்கப்பட்டு, சாந்தின் துளைகள் வழியே, வண்ணப் பூச்சு சாந்தில் சேர்ந்துவிடும் ஒன்றாக இம்முறை உள்ளது. சுதை ஓவிய நுட்பம் பழங்காலத்தில் கையாளப்பட்டு, இத்தாலிய மறுமலர்ச்சி ஓவியங்களுடன் நெருக்கமான தொடர்புபட்டது.[1][2]
தமிழகத்தின் சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், தஞ்சாவூர் பெரிய கோயில் கருவறை சுற்றுச் சுவருக்குள் உள்ள இராசராசன் ஓவியம், சுந்தரர் கைலாயம் செல்லும் ஓவியம் போன்றவை இவ்வகைப்பட்டவையே. இந்த ஒவியங்கள் வரைய இயற்கையாக கிடைக்கும் பொருட்களே பயன்படுத்தப்பட்டன. பதினோராம் நூற்றாண்டுவரை தமிழகம் சுதை ஓவியங்களுக்கு புகழ்பெற்ற மண்ணாக இருந்தது. கலை நுணுக்கங்கத்தோடு வரையத் தெரிந்த பல கலைஞர்கள் தமிழகத்தில் அக்காலத்தில் வாழ்ந்தனர். தமிழ் பேரரசுகளான சோழ, பாண்டிய பேரரசுகள் மறைந்தபோது இந்தக் கலை தமிழகத்தில் அழிந்துபோனது.[3]
குறிப்புக்கள்
தொகு- ↑ Mora, Paolo; Mora, Laura; Philippot, Paul (1984). Conservation of Wall Paintings. Butterworths. pp. 34-54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-408-10812-6.
- ↑ Ward, Gerald W. R., ed. (2008). The Grove Encyclopedia of Materials and Techniques in Art. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. 223-5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-531391-8.
- ↑ எம். இராஜகுமார், ஈடு இணையற்ற இயற்கை வண்ண ஓவியங்கள், கட்டுரை, தினகரன் பொங்கல் மலர் 2016, பக்கம் 160-167
வெளி இணைப்புக்கள்
தொகு- Museum of Ancient Inventions: Roman-Style Fresco, Italy, 50 AD
- Sigiriya Frescoes, The Mary B. Wheeler Collection, University of Pennsylvania Library பரணிடப்பட்டது 2013-08-26 at the வந்தவழி இயந்திரம்
- Fresco Paintings பரணிடப்பட்டது 2013-05-11 at the வந்தவழி இயந்திரம்
சுதை ஓவியத் தொழில் நுட்பம்
- Fresco Techniques
- Painting a Fresco, Lessons and Examples: Buon and Secco Fresco by Donald A. Jusko
- Fresco School
- High Fresco - The Art of Ben Long பரணிடப்பட்டது 2007-07-01 at the வந்தவழி இயந்திரம்
- The Art of Fresco Recaptured by Steve Bogdanoff
- Web gallery of Art
- The Fresco Portrait of Pope John Paul II by Fernando Leal Audirac பரணிடப்பட்டது 2012-03-15 at the வந்தவழி இயந்திரம்